புத்தாண்டு ராசி பலன் 2026: தனுசு ராசிக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம்.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

new-year-rasi-palan-2026-complete-yearly-predictions-for-dhanusu-rasi-palan-2026

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

தனுசு (Dhanusu new year rasi palan):

தனுசு ராசிக்கு 4 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். ராசிக்கு 3 ஆம் இடத்தில் ராகு, 9 ஆம் இடத்தில் கேது பகவான் இருக்கிறார். ராசிக்கு 7 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் மே மாத இறுதியில் கடகத்துக்கு வருகிறார். நிலம் சார்ந் விஷயங்களில் நன்மைகள் நடக்கும். கஷ்டப்பட்ட நிலம் வாங்குவீர்கள். கடன் வாங்கியாவது புதிய வீடுகளைக் கட்டுவீர்கள்.

முன்னேற்றம்

வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் காணப்படும். புதிய திட்டம் வெற்றியைத் தரும். விற்காத சொத்துகள் விற்பனை ஆவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிரபலமாகக் கூடிய வாய்ப்புள்ளது. தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாளர்கள், எதிரியாளர்கள் இருப்பவர்கள் அந்தத் துறையை விட்டு, உங்களை விட்டு விலகிச் செல்லும் சூழல் ஏற்படும்.

திருமணம்

2026 ஜூன் மாதம் உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான கடகத்துக்கு வந்த பின்னர் உத்தியோகத்தில் உங்களுக்குப் பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அதிகமாக விருந்து சாப்பாட்டுக்கு செல்லும் சூழல் ஏற்படும். ராசிக்கு 3 ஆம் இடத்தில் ராகு, கேது இருக்கும்போது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சூழல் ஏற்படும்.

சொத்துப் பிரச்சனை தீரும்

தேவையில்லாத பொருள்களை வாங்கக் கூடிய சூழல் ஏற்படும். ராசியாதிபதி 8 ஆம் இடத்துக்குச் செல்வதால் சிறு விபத்துகளில் சிக்கும் நிலை வரும். ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது. வீட்டில் நகை, பணம் திருட்டு போவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், நகை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வெளிநாடு சொத்துப் பிரச்சனைகள் தீரும் யோகம் ஏற்படும்.

கவனம்

வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் யாருக்கும் பணம் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறாமல் இருப்பது நல்லது. கடன் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதால் மரியாதை குறைவதற்கான வாய்ப்பு உண்டு. பணவரவு குறையும். வேகம் குறையும். தனுசு ராசிக்காரர்கள் இந்தப் புத்தாண்டில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+