புத்தாண்டு ராசி பலன் 2026: மிதுன ராசிக்கு புத்தாண்டில் கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும்.
சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம் (Mithunam new year rasi palan):
மிதுன ராசிக்கு 10 ஆம் இடத்தில் சனி பகவான், 9 ஆம் இடத்தில் குரு பகவான், 3 ஆம் இடத்தில் கேது பகவான், ராசியிலேயே மே மாதம் இறுதி வரை குரு பகவான் ராசிக்கு 2 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகி ஆண்டு முழுவதும் இருப்பார். 10 இல் சனி இருப்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வீடு நிலம் வாங்கும் யோகம்
வீடு, நிலம் வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 9 ஆம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால், உங்கள் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு தொடர்பு மூலமாக சில ஆதாயங்கள், லாபங்கள் உண்டாகும். நல்ல இடமாற்றம் உண்டாகும். கடன் படிப்படியாக குறையும். நல்ல இடமாற்றம் ஏற்படும்.
இடமாற்றம்
எதிர்பார்த்த இடம் கிடைக்கும். பொருள் வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 3 ஆம் இடத்தில் கேது இருப்பதால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள், உறவுகளில் சிறு சிறு கசப்புகள் ஏற்படும். இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். இடம் விற்பனையாகும். சகோதர உறவுகளில் சிறு கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
அனுகூலம்
ராசியில் குரு பகவான் இருப்பதால் அதிக பொறுப்புகள் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் குடும்பத்தில் நிறைவேறும். புத்திர பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலம் காணப்படும். குழந்தைகளால் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். அற்புதமான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications