புத்தாண்டு ராசி பலன் 2026: ரிஷப ராசிக்கு சொந்த வீடு, வேலை, நிலம், இன்கிரிமென்ட்.. செட்டிலாக போறீங்க
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம் (Rishabam new year rasi palan):
ரிஷப ராசியைப் பொருத்தவரை ராசியதிபதி சுக்கிரனுக்கு இந்த ஆண்டு சமநிலையான பலன்கள் கிடைக்கும். ராசிக்கு 11 ஆம் இடத்தில் சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்க்கிறார். ராசிக்கு 10 ஆம் இடத்தில் ராகு பகவான், ராசிக்கு 2 ஆம் இடத்தில் தன ஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். மே மாதத்திற்குப் பிறகு குரு 3 ஆம் இடத்திற்குச் செல்கிறார். கேது பகவான் ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருக்கிறார்.
சம்பள உயர்வு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பூர்வீகத்தில் இருக்கும் சொத்துகளில் பிரச்சனைகள் இருந்தால் அது நிவர்த்தியாகி பாகப் பிரிவினை கிடைக்கும். நீங்கள் விரும்பிய பாகங்கள் கிடைக்கும். கோர்ட், கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும்.
நகை சேரும் யோகம்
ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பயன்படுத்தாத பொருள் சேர்க்கை ஏற்படும். தேவையில்லாத வண்டி, பொருள்கள், புத்தகங்கள் போன்றவற்றை வாங்கி வைப்பீர்கள். சொந்த இடம் இருந்தால் கடன் வாங்கி வீடு கட்டும் அமைப்பு உண்டாகும். இடம் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ராசிக்கு லாப ஸ்தானத்தில் பாவ கிரகம் இருந்து அது ராசியைப் பார்க்கக் கூடாதென்று கூறுவார்கள்.
கவனம்
இந்த காலகட்டத்தில் தவறான நண்பர்கள், பழக்கவழக்கங்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடம் பழகும்போது கவனமாக இருப்பது நல்லது. இல்லையெனில் இந்த நட்பு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. வேலை மாற்றம் உறுதியாக கிடைக்கும்.
வேலைவாய்ப்பு
தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இருக்கிற வேலையை விட்டுவிட்டு இதை விட நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய வேலைவாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேலை மாற்றம் உறுதியாகும். வேலைக்காக வெளியில் செல்லும் நிலை ஏற்படும். புதிய வேலையில் டார்ச்சர், அழுத்தம் போன்றவை ஏற்பட்டாலும் நிறைய கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
ஆரோக்கியம்
தாயிற்கு சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும். கண்ணாடி போடுவதற்கான வாய்ப்பு, கண் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. ஒற்றை தலைவலி, தலையில் சிறு சிறு அடிபடுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. வேலைக்காரர்கள், நெருங்கிய நண்பர்களால் உங்களுடைய ரகசியங்கள் வெளியில் செல்லும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications