Puthandu Palan 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் ரிஷப ராசி.. வீடு, சொத்துக்கள் வாங்கும் யோகம்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் (Rishabam new year rasi palan):
ரிஷப ராசிக்கு உங்கள் யோகாதிபதியின் நட்சத்திரத்தில் 2026 பிறந்துள்ளதால் எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்திலேயே குரு பகவான் ராசிக்கு 2 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பண வரவு உண்டாகும். செல்வாக்கு கூடும். எங்கே சென்றாலும் இந்த ஆண்டு ஜெயித்துக் காட்டுவீர்கள். பாதியில் நின்று போன விஷயங்களை இந்த வருடத்தில் விரைவில் முடிக்கும் வாய்ப்புள்ளது.
தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு திடீரென வருமானம் அதிகரிக்கும். இந்த வருடம் பிறக்கும்போது உங்களுக்கு பக்கபலமாக சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தொலைநோக்கு சிந்தனையுடன் இந்த ஆண்டு முதலீடு செய்வீர்கள். வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 8 வது வீட்டில் செவ்வாய் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
வெளிநாடு செல்லும் யோகம்
செப்டம்பர், அக்டோபர், டிசம்பரில் சுக்கிரன் கொஞ்சம் சரியில்லாமல் இருப்பதால் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். பழைய வண்டி, வாகனங்களை வாங்கும்போது அந்த வண்டி மீது கோர்ட், கேஸ் உள்ளதை என்பதை விசாரித்துப் பார்த்துவிட்டு நன்மை பயக்கும். முடிந்தவரை புதிய வண்டிகள் வாங்குவது நல்லது. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
மே மாதத்திற்குள் குடும்பத்தில் மகன், மகளுக்கு திருமணமாகும் யோகம் உண்டாகும். உங்ளுக்கு ஆதரவாக ராசிநாதன் சுக்கிரன் இருப்பதால் பழைய வீட்டை கொடுத்துவிட்டு புதிய வீடுகள் வாங்கும் யோகம் உள்ளது. ஏற்கனவே வாங்கிப் போட்டிருக்கும் வீட்டு மனையில் வீடு கட்டி, கிரகப்பிரவேஷம் செய்யும் யோகம் உள்ளது. குரு பகவான் ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை சுமாராகத்தான் இருக்கிறார். அதனால் பணம் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம்.
தொழில் தொடங்கும் யோகம்
இரக்கப்பட்டு ஏமாறாமல் இருப்பது நல்லது. புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனம் தேவை. புதிதாக அறிமுகமாகும் நபர்களை, புகழ்ந்து பேசுபவர்களை நம்பாமல் இருப்பது நல்லது. வியாபாரம் கடந்த ஆண்டை விட வரும் 2026 ஆம் ஆண்டு லாபகரமானதாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. உத்தியோகத்தில் மே மாதத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும்.
மிகப்பெரிய வெற்றிகளை தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். சிவன் வழிபாடு ஏற்றத்தை தரும். திருவாசகம் படிப்பது ஏற்றத்தை தரும். பிரதோஷ விரதம் இருந்தால் மேலும் மேலும் நன்மைகள் நடக்கும். பார்வையற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தானம் அளிப்பது உங்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும். பேரிச்சம்பழம் தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications