Puthandu Palan 2026: சிம்ம ராசியை ஆட்டிப் படைக்கும் அஷ்டமசனி.. குருவின் அருளால் ஜாக்பாட்டும் உண்டு
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து சிம்மத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம் (Simmam new year rasi palan):
சிம்ம ராசிக்காரர்களே இந்த புத்தாண்டு உங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கும். உங்களை சுத்தியிருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் யார், பாசாங்கு செய்பவர்கள் யார் என்பது குறித்து தெரிந்து கொள்வீர்கள். உங்களை நீங்கள் நம்ப வேண்டாம். உங்களுடைய பலத்தைப் புரிந்துகொண்டு நடந்து கொள்வது நல்லது. இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நம்பிக்கையைத் தரும்.
எல்லா விஷயங்களிலும் வெற்றிகள் ஏற்படும். ராசிநாதனாகிய சூரியனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எல்லா விஷயங்களிலும் நீங்கள் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தலைமைப் பதவிகள், பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். 1 ஆம் எண்ணில் இந்த வருடம் பிறப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
அஷ்டமசனி
புதிய பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது, புதிய கிளைகள் தொடங்குவது, புதிய முதலீட்டாளர்கள் கிடைப்பது போன்ற யோகங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். புதிய வேலைகள் கிடைக்கும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும்.
அஷ்டமத்து சனி இந்த ஆண்டு முழுவதும் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. சிறுசிறு வாகன விபத்துகள், சாலை விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் ஏப்ரல் 2 முதல் மே 11 ஆம் தேதி வரை செவ்வாய் மறைகிறார். இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
குருவின் அருள்
குரு பகவான் ராசிக்கு 11 ஆவது வீட்டில் இருப்பதால் மே மாதம் வரை சாதகமான காலகட்டமாக இருக்கும். பணவரவு, சொத்து வரவு உண்டாகும். ஜூன் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை 12 ஆம் வீட்டில் இருப்பதால் சுபச் செலவுகள் ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உங்கள் ராசியில் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுவது உங்களுக்கு நன்மைத் தரும். படிக்கும் மாணவர்களுக்கு உதவுவது, பனங்கற்கண்டு வாங்கிக் கொடுப்பது ஏற்றத்தை தரும்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications