Puthandu Palan 2026: கன்னி ராசிக்கு புத்தாண்டில் நடக்கும் மேஜிக்.. ஒரு விஷயத்தில் கவனம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கன்னி புத்தாண்டு பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் வரைக்கும் வீட்டில் கோபம், ரோஷப்படாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவி இருவரும் இணக்கமாகச் செல்வது நல்லது. உத்தியோகம், வியாபாரம், தொழிலில் ஏற்றம் ஏற்படும். பயணங்களை அதிகமாக மேற்கொள்வீர்கள். பாஸ்போர்ட்டுகளை தயாராக வைத்துக் கொள்வது நல்லது. வேற்று மதத்தவரால் அதிகளவில் ஆதாயம் ஏற்படும்.
திருமணம்
கடல் கடந்து வாசல், கடல் கடந்த தொழில் செய்யும் யோகம் உண்டாகும். திருமணம் தொடர்பான பிரச்சனைகளில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. ஜூன் மாதத்திற்குப் பிறகு திருமணத்தில் அனுகூலம் காணப்படும். உறவுகளில் ஏற்றம் ஏற்படும். ஏற்கனவே திருமணத்தில் பாதிப்பைச் சந்தித்தவர்களுக்கு மறுமணம் உண்டாகும். யோக பலத்தை அதிகளவில் பெறலாம்.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் பெரிய ஏற்றம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் பெரிய செல்வாக்கு, அனுகூலம் எல்லாமே உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். அரசு, அரசியலில் கொஞ்சம் இணக்கமாக சண்டை சச்சரவுகள் செய்யாமல் இருப்பது நல்லது. பெரிய அளவில் பேசப்படும் வாய்ப்புள்ளது. உணர்ச்சிவசப்படாமல் பேசுவது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
கோபம் வேண்டாம்
பிள்ளைகள் விஷயத்தில் ஜூன் மாதம் வரை கோபப்படாமல் இருப்பது ஏற்றத்தை தரும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது நன்மையைத் தரும். தெய்வ காரியங்கள் அதிகமாகச் செய்வீர்கள். கோயில் திருப்பணிகளை அதிகளவில் செய்யும் யோகம் ஏற்படும். அன்னதானம் செய்வீர்கள்.
தைரியம் அதிகரிக்கும்
தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். மே 14 ஆம் தேதிக்குப் பிறகு நிறைய விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அலர்ஜி, தோல் பிரச்சனை, பல், மயக்கம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. பெருமாள் வழிபாடு ஏற்றத்தை தரும். கோளார் பதிகத்தை சொல்லி வருவது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். தடைகள் எல்லாம் நிவர்த்தியாகும்.












Click it and Unblock the Notifications