Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் மகர ராசி.. வீடு, நிலபுலன்களை குவிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

New year rasi palan Magaram

நிலம், தங்கத்தில் முதலீடு

2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு குருவின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருப்பதால் எல்லாவிதமான சுபகாரியங்களும் நடக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ரிஷப ராசிக்காரர்கள் போல மகர ராசிக்காரர்களும் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, நகை வாங்குவது, டைமண்ட் வாங்குவது என்று முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.

அனுகூலம்

தொடர்ச்சியாக இருந்து வந்த மனக் கஷ்டங்கள், பணக் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். முதலீடுகள் பெரிய அளவுக்கு ஏற்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்றங்கள் ஏற்படும். கடல் கடந்த அனுகூலங்கள் காணப்படும். தெய்வ காரியங்கள், திருப்பணிகளைச் செய்வீர்கள். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். டிரஸ்ட் பணிகள், உழவாரப் பணிகளை செய்வீர்கள்.

தொழில் யோகம்

வேலையில் இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். சொந்த தொழில்களைச் செய்யும் யோகம் உண்டாகும். கூட்டாளிகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தனித் தொழில் தொடங்கி அதில் வெற்றி பெறுவீர்கள். சாதாரணமானவர்கள் கூட பெரிய ஏற்றத்தைப் பெறும் காலகட்டமாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கவனம்

இளம் வயதைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் அஜாக்கிரதையாக சென்றால் கண்டிப்பாக விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் எதைப் பேசும் முன்பும் யோசித்துவிட்டு பேசுவது நல்லது. விளையாட்டாக பேசுவது கூட விபத்தில் சிக்க வைக்கும் வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

பல், தொண்டை போன்ற பகுதிகளில் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடு, மகான்கள் வழிபாடு, கணபதி ஹோமம் செய்வது, பிள்ளையார்பட்டி சென்று வருவது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். கணவராக இருந்தால் மனைவியின் உடல்நிலையையும், மனைவியாக இருப்பின் கணவரின் உடல்நிலையிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டில் இந்த விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால் தேவையில்லாமல் குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பெரிய அளவிலான முதலீடுகளுக்கு முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். நிலபுலன்கள் வாங்கும் யோகம் உண்டு. முதலீடுகள் சூப்பராக இருக்கும். எந்தவித குறைவும் இருக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+