புத்தாண்டு ராசி பலன் 2026: மிதுன ராசிக்கு வாயில் தான் பிரச்சனையே.. ஆனா 2026 இல் சர்ப்ரைஸும் இருக்கு
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கோபதாபத்தை தவிர்ப்பது நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இடமாற்றம், தொழில் மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம் போன்ற அனைத்து நல்ல மாற்றங்களும் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
வார்த்தைகளில் கவனம்
வார்த்தைகளில் மட்டும் சிறிது கவனம் தேவை. குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் வாக்கு கொடுப்பதற்கு முன்பு யோசிப்பது நல்லது. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுன ராசியினருக்கு தொழில் ஆச்சரியமான முன்னேற்றத்தை தரும். படிப்பில் இருந்த தடை, உத்தியோக தடை, வியாபாரத் தடை என அனைத்து தடைகளும் பரிபூரணமாக நீங்கும்.
தொட்டது துலங்கும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளை இரண்டே நாளில் முடித்து நிம்மதியாக வீடு திரும்புவீர்கள். நினைத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குவதில் ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் பெரிய அளவுக்கு நம்பிக்கை ஏற்படும்.
கோபம் வேண்டாம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்பட்டு பேப்பர் போடாமல் இருப்பது நல்லது. இன்னொரு வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை விடாமல் இருப்பது நல்லது. வியாபாரமாக இருந்தாலும் ஆரம்பித்துவிட்டு வேலையை விடுவது நல்லது. கூட்டாளிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. துணையிடம் கோபத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பணவரவு சூப்பர்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பணவரவு, முதலீடுகள் எல்லாமே நன்றாக இருக்கும். ஆனால், குடும்பத்தில் அந்நியர் தலையீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
பற்களில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராகவேந்திரர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுத்தும். மந்திரலாயம் செல்வது நல்லது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications