Puthandu Palan 2026: "காசு மேலே காசு வந்து".. குருவின் அருளால் துலாம் ராசிக்கு ஜாக்பாட்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
துலாம் புத்தாண்டு பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுவாதி நட்சத்திரம் இருப்பவர்கள் தினந்தோறும் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது. சிறிய சிறிய விஷயம் வேறு யாருக்காவது நடந்தாலும் உங்களுக்கு நடக்கப்போவது போல நினைப்பீர்கள். 10 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தோம் என்று நினைக்க வேண்டும். மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நினைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
ஏற்றம்
6 ஆம் இடத்தில் சனி பகவான் 2 ஆண்டுகள் இருக்கிறார். அதனால், எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆம் பாடல்களைப் படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் விஷயத்தில் தேவையில்லாத வருத்தம் ஏற்படும். தெய்வ திருப்பணிகளை அதிகளவில் செய்யும் யோகம் உண்டு. தெய்வ கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.
குரு பார்வை
குடும்பத்தில், பூர்வீகத்தில், ரத்தபந்த உறவுகளில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஜூன் மாதம் வரைக்கும் குரு பார்வை இருப்பதால் சுப காரியங்கள் எல்லாம் தங்கு தடையின்றி நடக்கும்.
பணவரவு
வருடம் முழுவதும் சுப காரியத்தில் இருக்கும் யோகம் உண்டாகும். 2 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தனம், பண வரவு உண்டாகும். திருமணம் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பழைய கடன்கள் அடைத்து முடிப்பது, ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்குவது, உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், ஷாப்பிங் செல்வது, முதலீடு செய்வது என ஜாலியாக இருப்பீர்கள்.
வாராஹி, காளி, சூளி, பிரித்யுங்கரா போன்ற உக்கிர தெய்வ வழிபாடுகள் ஏற்றத்தைக் கொடுக்கும். தோல், ஜாயிண்ட் பிரச்சனைகளில் மிகுந்த கவமாக இருக்க வேண்டும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications