புத்தாண்டு ராசி பலன் 2026: விருச்சிக ராசிக்கு இனி தொட்டதெல்லாமே அதிர்ஷ்டம் தான்.. நல்ல காலம் ஆரம்பம்
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு யோக பலம் அதிகளவில் கிடைக்கும் அற்புதமான காலகட்டம். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தடைகள் அதிகளவில் வரும். மன அழுத்தம் தொடர்பான விஷங்களில் கவனமாக இருக்க வேண்டும். பூர்வ புண்ணிய பலம் கிடைப்பதால் குடும்பத்தில் அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும்.
ஆரோக்கியம்
விருச்சிக ராசியினர் இருக்கக்கூடிய வீட்டில் நல்ல விஷயங்கள் அதிகளவில் நடக்கும். பெரிய ஏற்றத்தைப் பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பாரம்பரியமாக இருக்கக்கூடிய நோய் பாதிப்புகள், ரத்தத்தில் பரவும் தொற்று நோய் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அடுத்தடுத்து அற்புதம்
வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏற்றங்கள், அனுகூலங்கள், சுபகாரியங்கள், திருமணங்கள், புத்திர சந்தான பாக்கியம், ஆடை வாங்குவது, ஆபரணம் வாங்குவது என அனைத்து விதமான யோகங்களும் உண்டாகும். அரசியலில் பெயர், புகழ் கிடைக்கும். பெற்றோர், பெரியோர் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில்
தொழில் சார்ந்த விஷயத்தில் உடனிருப்பவர்கள் செய்யும் பிரச்சனையால் நீங்கள் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. ஆவணங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு இருமுறை அலசி ஆராய்ந்துவிட்டு கையெழுத்துப் போடுவது நல்லது. டிஜிட்டல் மோசடிகள், டிஜிட்டல் அரெஸ்ட், வலைதளங்களில் மோசடிகளில் சிக்குவது போன்ற வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
குலதெய்வத்தை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையை ஏற்படுத்தும். முருகர் வழிபாடு உங்களுக்கு யோக பலத்தை தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது தைரியத்தை ஏற்படுத்தும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் ஏற்படும். அறுபடை வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றில்லை அருகில் இருக்கும் கோயில்கள், பிடித்த கோயில்களுக்குச் சென்று வழிபடலாம். 7 எலுமிச்சையை கொடுத்து ஒரு பழத்தை வாங்கி வந்து உணவாகப் பயன்படுத்துவது நன்மையை ஏற்படுத்தும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications