Puthandu Palan: 2026 புத்தாண்டில் திருமண யோகம் பெறும் 6 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
2026 புத்தாண்டு பலன்கள்: 2026 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. புதிய வருடத்தில் பல நல்ல விஷயங்களுக்காக எதிர்நோக்கி காத்திருப்போம். முக்கியமாக கடந்த சில வருடங்களாக திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்களுக்காக எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் இருப்பார்கள். இந்த 2026 வருடத்திலாவது திருமணம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கும். அப்படி திருமணத்துக்காக காத்திருக்கும் 6 ராசிகளுக்கு குரு பார்வை காரணமாக இந்த வருடம் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. அதுகுறித்து இந்தப் பதிவில் காணலாம்.
தனம் மற்றும் சுப காரியங்களுக்கு அதிபதியான குரு பகவான் 2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த வருடம் ராகு கேது பெயர்ச்சியும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குரு பெயர்ச்சி காரணமாக பல ராசிகளுக்கு சொந்த வீடு கனவு நனவாவது, நிலம் வாங்குதல், வண்டி வாகனம் வாங்குதல் யோகம் உண்டாகும்.

திருமண யோகம்
சிலருக்கு ஆபரணங்கள் சேர்க்கை, வியாபாரம் மற்றும் தொழிலில் அபார முன்னேற்றம் ஏற்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும். கடந்த காலங்களில் திருமணத் தடையால் அவதிப்பட்ட பலருக்கு இந்த வருடம் திருமணம் கைக்கூடி வரும். சுப காரிய தடைகள் விலகி திருமணம், குழந்தை பாக்கியம் கிடைப்பது என்று அடுத்தடுத்து நல்லது நடக்கும். அப்படி திருமண யோகம் பெற போகும் ராசிகள் குறித்து காணலாம்.
மேஷம் ராசிக்கு இந்த 2026 வருடம் திருமணம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குரு பகவான் மேஷ ராசிக்கு நான்காம் இடத்திற்கு வரப் போகிறார். பொதுவாக நான்காம் இடம் என்பது சுப ஸ்தானத்தை குறிக்கும். அங்கு குரு பகவான் உச்சம் பெற்றிருப்பதால், குரு பார்வை காரணமாக திருமண முயற்சிகளில் இருப்போருக்கு இந்த வருடம் திருமணம் நடந்தே தீரும்.
குரு பார்வை
மிதுன ராசிக்கு குரு பகவான் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ளார். திருமணம் தான் குடும்பத்தின் அஸ்திவாரம். அதனால் இந்த வருடம் திருமணத்திற்காக முயற்சி செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமண முயற்சியில் இருப்போருக்கு நல்ல வரன் உங்கள் வீடு தேடி வரும். சுப செலவுக்கு தயாராகிவிடுங்கள்.
கடகம் ராசிக்கு குரு பகவான் நேரடியாக சஞ்சாரம் செய்யவுள்ளார். அதனால் கடக ராசிக்கு அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த சுப காரிய தடைகள் முற்றிலும் விலக போகிறது. நீங்களே எதிர்பாராதளவுக்கு அற்புதமான வரன் அமைந்து, மிகவும் திருப்திகரமாக திருமணம் நடைபெறும்.
டும் டும் டும்
கன்னி ராசிக்கு குரு பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் இந்த வருடம் அதிக லாபங்கள் பெறுவீர்கள். திருமண ஆசையில் உள்ள கன்னி ராசியினருக்கு, குரு பகவான் அருள் காரணமாக நீங்கள் எதிர்பார்த்தபடியான திருமணம் நடைபெறும். முக்கியமாக காதல் திருமணம் கைக்கூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
தனுசு ராசிக்கு குரு பகவானின் ஏழாம் பார்வை, நேரடியாக குடும்ப ஸ்தானத்தில் விழுகிறது. அதனால் இந்த 2026 ஆம் வருடம் தனுசு ராசிக்கு நிச்சயம் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. அதேபோல துலாம் ராசிக்கும் குரு பார்வை இருப்பதால் இந்த வருடம் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications