அரசியல் சாதனை... வசியமான பேச்சு... புத்திசாலித்தனம் கொண்டவங்க எந்த லக்னகாரங்க தெரியுமா
ஜாதகத்தில் ஏதாவது ஒரு ராசி கட்டத்திற்குள் 'ல' என்று எழுதி இருப்பது ஜாதகரின் லக்னமாகும். ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக
சென்னை: ஜாதகத்தில் எதாவது ஒரு ராசி கட்டத்திற்குள் 'ல'என்று எழுதி இருப்பார்கள். அதுவே அந்த ஜாதகரின் லக்னமாகும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையை தீர்மானிக்கிறது. ஜாதகத்தில் முதல் வீடு லக்னம். உயிர் என்று சொல்லக் கூடியது லக்னம் மற்றும் லக்னாதிபதி அமைப்புகள் மட்டும்தான். ஒரு ஜாதகத்தின் உயிர் போன்றவர் லக்னாதிபதி மட்டும்தான். உடலுக்கு கை, கால், கண் போன்ற உறுப்புகள் அவசியம்தான். ஆனால் அவற்றிலும் மேலாக உறுப்புகளை இயங்க வைக்கக் கூடிய உயிர் உடலுக்கு இருந்தே தீர வேண்டும் உயிர் இருந்தால்தான் உடல் இயங்கும்.
ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். ராசி என்பது சந்திரன் எந்த ராசி மண்டலத்தில் ஒருவர் பிறக்கும்போது சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தாரோ அதை வைத்து ராசியை குறிக்கிறார்கள். லக்னத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால் இதை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும்.
ஒரு மனிதனுக்கு லக்னம், ராசி இவை இரண்டின் குணங்களும் இருக்கும். இதில் எது வலுவாக இருக்கிறதோ, அந்த அதிபதியின் குணங்கள் ஜாதகரிடம் தூக்கலாக இருக்கும். லக்னமும், ராசியும் ஒன்றாக இருப்பவருக்கு அதன் அதிபதியின் குணங்கள் அப்படியே இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னகாரர்களின் குணாதிசயங்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயை அதிபதியாகக் கொண்டவர்கள். கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள். முன்கோபமும், பிடிவாதமும் அதிகமாக காணப்படும். தைரியம் கொண்ட நீங்கள், விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளவர்கள். வீரமானவர்கள் விரைவாக செயல்படக்கூடியவர்கள் கர்வமானவர்கள் சுயகௌரவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவர்கள். மற்றவர்களின் திறமையை, குறைத்து மதிப்பிடுபவர்கள். மேஷ லக்னம் நெருப்பை ஆதாரமாகக் கொண்டது என்பதால் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவர்கள். மேஷ லக்னகாரர்கள் ஆட்டின் குணத்தை ஒத்திருப்பார்கள். செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால்,சிறிய காயங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். எப்பவுமே ஒரு மிடுக்கோடு இருப்பவர்கள் நீங்கள்.

ரிஷபம்
ரிஷபம் காதல் நாயகன் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டவர். நிலம் சார்ந்தது. நிலையான மனநிலை, சாமர்த்தியசாலிகள். நல்ல நினைவாற்றல் கொண்டவர். ராஜதந்திரசாலிகள். கலைகளில் ஆர்வம் கொண்டவர். சனிபகவான் ராஜயோகம் கொடுப்பார். சனிதிசையில் முன்னேற்றமடைவார். கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர். காதல்துறையில் வல்லவர். காளையின் குணங்களைக் கொண்டிருப்பார்கள். சொகுசாக வாழ விரும்புவார்கள். நிலம் போல பொறுமையாக இருப்பார்கள். நிதானத்தோடும் உறுதியோடும் செயல்படுவார். அன்புக்காக ஏங்கும் நீங்கள் அனைவரையும் கவர்வீர்கள்.

மிதுனம்
புதனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள் புத்திசாலிகள். சாதுர்யமான பேச்சாளிகள் பேசியே காரியம் சாதிப்பீர்கள். சொல்வாக்கு போல செல்வாக்கும் கொண்ட உங்களின் கையில் பணம் அதிகம் இருக்கும். நல்ல உழைப்பாளிகள் நீங்கள். கணிதத்தில் ஆர்வம் கொண்டவர். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் எளிதாக வேலையை செய்து முடிப்பீர்கள். குரு களத்திரகாரகன். பஞ்சபூத தத்துவத்தில் காற்றினைக் குறிக்கிறது. அறிவுக்கூர்மை உள்ளவர்களான இவர்கள் தன்னுடைய திறமையால் பிழைப்பார்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சில நேரங்களில் இரண்டு மனநிலைகளில் இருப்பீர்கள். கம்பீரமும் அழகான தோற்றமும் கொண்ட நீங்கள் அறிவோடு அடக்கமும் கொண்டவர்.

கடகம்
சந்திரன் மனோகாரகன் அந்த சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக லக்னகாரர்களின் உடலும் மனதும் தூய்மையானது. வசீகரமான உடலமைப்பும் பேச்சில் வசியம் செய்யக்கூடியவர்கள் இந்த லக்னகாரர்கள். புதிய சரித்திர சாதனை செய்ய வேண்டும் என்பதே உங்களின் லட்சியம். அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் கொண்டவர்கள் நீங்கள். மிகப்பெரிய ஆசைகளைக் கொண்டவர் நீங்கள். ஆன்மீகம், மருத்துவம், கலைத்துறையில் சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள். சனி களத்திரகாரகன் பிரச்சினை செய்தாலும் செவ்வாயும் குருவும் சுப கிரகங்கள். கடகத்தில் பிறந்தவர்கள் சுயநலம் இல்லாமல், பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்
சிம்மம் நெருப்பு தன்மை கொண்டது. லக்னாதிபதி சூரியன். ஜோதிடத்தின் தலைவன் சூரியன்தான். சூரியனைச் சுற்றியே அனைத்தும் இயங்குகின்றன. எனவே சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எதிலும் தலைமை தாங்குவதை விரும்புவார்கள். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆளுமைத்திறன் கொண்டவர்கள். கம்பீரமான தோற்றமும் திட புத்தியும் கொண்டவர்கள். தனக்கு தீமை செய்தவர்களை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும் மதிப்பு மரியாதை கிடைக்கும். எத்தனை சவாலான காரியங்களையும் பதறாமல் சிதறாமல் செய்து முடிப்பார்கள்.

கன்னி
கன்னி லக்னத்தில் அதிபதி புதன். புத்திசாலித்தனம் அதிகம் இருக்கும்.பஞ்சபூத தத்துவத்தில் நிலத்தைக் குறிக்கக் கூடியது. எதையுமே அறிவுக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள். இவர்களின் அனைத்து செயல்களிலும் நளினம் இருக்கும். மனதில் இருப்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துவார்கள். மகிழ்ச்சியானவர்கள். அன்பும் பற்றுதலும் அதிகம் கொண்டவர்கள். செய்தியாளர்கள். ஆசிரியர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்களே.

துலாம்
துலாம் லக்ன அதிபதி சுக்கிரன். அழகும் கவர்ச்சியும் கொண்டவர்கள் நீங்கள். எதையும் நீதி,நேர்மை என்று செய்வீர்கள். நீண்ட ஆயுள் கொண்டவர்கள் காரணம் ஆயுள்காரகன் சனி உங்க லக்னத்தில் உச்சமடைகிறார். கடவுள் பக்தி கொண்டவர்கள் நீங்கள். எதையும் நிதானமாக செய்து வெற்றிகரமாக முடிப்பீர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டவர்கள் நீங்கள். பஞ்ச பூத தத்துவங்களில் காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. ராசி அமைப்பில் மேன்மை மிகுந்த சர ராசியாகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த வியாபாரிகளாக இருப்பார்கள். வேலை செய்வதைவிட சொந்தத் தொழில் செய்வதை விரும்புவார்கள். உல்லாச விரும்பிகள் சுகவாசிகள், நீங்கள் செயல்கள் எதிலும் ஒரு நளினம் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக லக்ன அதிபதி செவ்வாய். மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் நீங்கள். ஒரு மனிதனுக்கு மனோபலத்தை தரக்கூடிய சந்திரன் இந்த ராசியில் நீசம் அடைகிறார். பஞ்சபூத தத்துவத்தில் இது ஒரு நீர் ராசியாகும். இந்த லக்னக்காரர்கள் தேள் போலக் கொட்டுவார்கள், பழி வாங்கும் குணம் உடையவர்கள் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் சொல்வார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மதிப்பு,மரியாதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்களை எளிதில் ஏமாற்ற முடியாது. கொண்ட கொள்கையை இறுதி வரை பின்பற்றுபவர்கள். சுய சம்பாத்தியத்தில் விருப்பம் உள்ளவர்கள். இவர்களது வாழ்கையில் சுலபமான விஷயங்கள் கூட மிகுந்த போராட்டத்திற்கு பிறகே நடக்கும். குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். விருச்சிக லக்கினத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள். அரசு வேலை செய்வார்கள்.

தனுசு
குருவை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே... பஞ்சபூத தத்துவத்தில் நெருப்பை குறிக்கும். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் கொடை, ஈகை, தயை உள்ளம் கொண்டவர்கள்.நல்ல ஒழுக்கமுடையவர்கள். மனிதபிமானம் கொண்ட நீங்கள் இளகிய மனதால் அனைவராலும் நேசிக்கபடுவீர்கள். படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவார்கள். இனிமையாக குரம் அமைப்பு கொண்டவர்கள். பக்திமான் தர்மசிந்தனை கொண்டவர்கள் நீங்கள். நல்ல உழைப்பாளியான உங்களுக்கு சோம்பல் அறவே புடிக்காது. கோபம் வந்தால் சுட்டெரித்துவிடுவார்கள். மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுவார்கள். ஆன்மீக ராசியில் பிறந்தவர்கள் என்பதால் அன்பானவர்கள் நீங்கள். நேர்மையானவர்கள்.

மகரம்
மகரம் லக்னத்தில் பிறந்தவர்கள் நீங்கள் சாமர்த்தியசாலி, தந்திரமானவர்கள். புத்திசாலிகள். சுயநலம் கொண்டவர்கள் சனிபகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். படிப்பு முடிந்த உடனே சிறந்த வேலையில் சேருவீர்கள். அமைதியான வாழ்க்கையும் சம்பாதிக்கும் திறனும் கொண்டவர்கள். கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். மிகுந்த பிடிவாதக்காரர்கள். யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தனக்கென ஒரு தனி பாணி கொண்டவர்கள்.

கும்பம்
இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் பிறருடன் அன்பாகவும்,பெருந்தன்மையுடனும் பழகுவார்கள். நம்பிக்கை மற்றும் நட்புக்கு பாத்திரமானவர்கள். அதிக நினைவாற்றல் உள்ளவர்கள். உள்ளத்தில் தோன்றிதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவார்கள். சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள். வாழ்க்கை வசதி நன்கு அமையும். இவர்கள் ஒரு தத்துவஞானி. நிதானமானவர்களாக இருப்பார்கள். பெண்களுக்கு கும்ப லக்னம் சிறந்தது. நியாயம் அநியாயம் இவற்றைத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துச் சொல்வார்கள்.

மீனம்
பஞ்சபூத தத்துவத்தில் நீர் ராசி. உபயத்தை குறிப்பது. இந்த வீட்டின் அதிபதி குரு என்பதால் குருவின் நற்குணங்கள் அனைத்தும் இவர்களிடம் இருக்கும். நம்பிக்கைக்கு உரியவர்கள். நல்ல நடத்தையும், நன்றியுள்ளவராகவும் இருப்பார்கள். ஏழை எளியவர்களிடத்தில் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். வெகுசீக்கிரத்தில் பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவார்கள்.தயாள குணம் நிரம்பியவர்களாகவும், திறமைசாலிகளாகவும் விளங்குவார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகளைக் காட்டிலும் ஆதாயங்களே அதிகம் இருக்கும். எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்று கோடு போட்டு வாழ்வார்கள். எதற்கும் விலை போக மாட்டார்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications