காதலில் கில்லாடியா நீங்கள்? எந்த ராசிக்காரர்களின் காதல் ஜெயிக்கும் தெரியுமா?

12 ராசிகளில் எந்த ராசிக்காரர்கள் காதலிப்பார்கள் யாருடைய காதல் ஜெயிக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதலில் கில்லாடியா நீங்கள்? எந்த ராசிக்காரர்களின் காதல் ஜெயிக்கும் தெரியுமா?- வீடியோ

    சென்னை: என்ன ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யார், யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுநர்கள்.

    காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம்.

    காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அம்சங்கள், பல ஜோதிட நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. என்ன ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்முடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. அவரவர் ராசிக்கு இந்த விளக்கம் சரியாக இருக்கிறதா என்று படித்து சோதனை செய்து கொள்ளுங்கள்.

    காதலும் கிரக சேர்க்கையும்

    காதலும் கிரக சேர்க்கையும்

    காதல், கலப்புத் திருமணங்களுக்கு அவரவர் ஜாதக கிரக நிலைகளே முக்கிய காரணம். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையும் பிராப்தமும்தான் காரணம். லக்னாதிபதி, சுக்கிரன், குரு, புதன், ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை, ஜாதகத்தில் அவர்களுக்கு இருக்கும் பலம் ஆகியவைதான் காதல் திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன.

    மேஷ ராசி நாயகர்கள்

    மேஷ ராசி நாயகர்கள்

    எதிலும் முதன்மையானவராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர்.

    ரிஷப ராசி காதல் மன்னர்கள்

    ரிஷப ராசி காதல் மன்னர்கள்

    காதலில் கைதேர்ந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் என்றால் மிகையில்லை. காரணம் ரிஷபராசி வீட்டதிபதி சுக்கிரன்தானுங்க. இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் நபரை 'பிராக்கெட்' போடுவதில் கில்லாடிகள். இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ரிஷப ராசிக்கார்ர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெரும்.

    மிதுனராசிக்காரர்கள்

    மிதுனராசிக்காரர்கள்

    மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். பிறரிடம் இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதே. எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்தியம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வார்கள். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

    கடகம் ராசி காதலர்கள்

    கடகம் ராசி காதலர்கள்

    கடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லதாம்.

    சிம்மம் காதல் மன்னர்

    சிம்மம் காதல் மன்னர்

    சிம்ம ராசிக்காரர்கள் காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். இவர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்.

    கன்னி ராசி காதலர்கள்

    கன்னி ராசி காதலர்கள்

    கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் மகிழ்ச்சியடைவார். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர்.

    துலாம் ராசி காதலர்கள்

    துலாம் ராசி காதலர்கள்

    துலாம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளது. காரணம் சுக்கிரனின் ஆட்சி வீடு இது. காதல் இவர்களுக்கு கை வந்த கலை. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். அதே நேரத்தில் இவர்கள் காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.

    விருச்சிக ராசி காரர்கள்

    விருச்சிக ராசி காரர்கள்

    விருச்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும்.

    தனுசு ராசி காதலர்கள்

    தனுசு ராசி காதலர்கள்

    தனுசு ராசிக்காரர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.

    மகரம் -காதல் நாயகர்கள்

    மகரம் -காதல் நாயகர்கள்

    மகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்கள் உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

    கும்பம் ராசிக்காரர்கள்

    கும்பம் ராசிக்காரர்கள்

    கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர்.காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.

    மீனம் ராசிக்காரர்கள்

    மீனம் ராசிக்காரர்கள்

    மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். மீன ராசிக்காரர்கள் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.

    காதல் திருமணம் எப்போது?

    காதல் திருமணம் எப்போது?

    எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் காதல் திருமணம் செய்வதற்கு அந்தகால கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் பெரிதும் காரணமாகின்றன. 2, 5, 7, 8, 12 ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்தி, அந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறது. மேலும், ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+