ரிஷபத்தில் சந்திரன்... துலாமிற்கு சந்திராஷ்டமம் - 12 ராசிகளுக்கும் பலன்கள் எப்படி?
ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைக்கு எந்த ராசிகாரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
சென்னை: ராசிபலன் தினசரியும் சந்திரன் நகர்வை வைத்து கணிக்கப்படுகிறது. இன்றைக்கு ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார் சந்திரன். 12 ராசிக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.
மகரத்தில் சூரியன், சுக்கிரன், கேது, கடகத்தில் ராகு, துலாமில் குரு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் சனி, புதன் என கிரகங்கள் அமர்ந்துள்ளன.
துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். சந்திரனின் அமர்வு, கிரகங்களின் பார்வையைப் பொருத்து இன்றைய ராசி பலன்களை அறிந்து கொள்வோம்.

மேஷம்
ராசிக்கு இரண்டாவது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும்.
அதிஷ்ட எண் - 1,அதிஷ்ட நிறங்கள் - பிங்க், பச்சை

ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நிற்பதால் நிதானம் தேவை. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள்.
அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட கலர் - வெளிர் மஞ்சள், ப்ரௌவுன்

மிதுனம்
ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். தம்பதியர்களுக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை

கடகம்
ராசிக்கு 11வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். லாபஸ்தானத்தில் மனோகாரகன் சந்திரன் அமர்ந்துள்ளதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்ப முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு,இளம்மஞ்சள்

சிம்மம்
ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ்

கன்னி
ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார்.
கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிரே

துலாம்
ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,ஆரஞ்சு

விருச்சிகம்
ராசிக்கு 7வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார்.
பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண் - 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம்

தனுசு
ராசிக்கு 6வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,

மகரம்
ராசிக்கு 5வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்

கும்பம்
ராசிக்கு 4வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்

மீனம்
ராசிக்கு மூன்றாவது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வயலட் நிறம், இளஞ்சிவப்பு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications