Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020 புத்தாண்டில் மேஷம் முதல் கடகம் வரை 4 ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் எப்படி இருக்கும் தெரியுமா

நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே அனைவரும் ஆரோக்கியம் முக்கியமானது. உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் ரொம்ப அவசியமானது. 2020ஆம் புத்தாண்டில் அதிக வருமானம் வருவது பற்றி யோசித்தாலும் உடல் ஆரோக்கிய

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. இந்த புத்தாண்டில் நமது ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே அனைவரும் ஆரோக்கியம் முக்கியமானது. உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் ரொம்ப அவசியமானது. 2020ஆம் புத்தாண்டில் அதிக வருமானம் வருவது பற்றி யோசித்தாலும் உடல் ஆரோக்கியம் பற்றியும் அதிகம் யோசிப்பார்கள். இறைவனிடம் வேண்டுவதே நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் 2020ஆம் ஆண்டில் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஒருவரின் ஆரோக்கியத்தினை கிரகங்களின் சஞ்சாரமும் தீர்மானிக்கின்றன. சூரியன்,சனி, புதன், குரு, சுக்கிரன், செவ்வாய், ராகு கேது சில நேரங்களில் சந்திரன் கூட சாதகமில்லாத நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பெற்றோர்கள், வயது மூத்தவர்களின் ஆரோக்கியத்தையும் கிரகங்கள் தீர்மானிக்கின்றன. குரு உடன் சேரும் கிரகங்கள், குருவின் பார்வையும் நோய்களை நீக்குகின்றன. சனியின் சஞ்சாரமும் ஒருவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஏழரை சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி காலங்களிலும் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்திலும் குருவின் பார்வை ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழும் போதும் ஒருவரின் உடலில் உள்ள நோய்கள் வெளிப்படும். இந்த 2020ஆம் ஆண்டில் குரு, சனியின் சஞ்சாரம் பார்வைகளினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

ரத்தகாரகன் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, உங்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதங்கள் நிறைந்த ஆண்டுதான் காரணம் குருவின் சஞ்சாரமும், சனியின் சஞ்சாரமும் உங்களுக்கு சந்தோஷங்களை தரக்கூடியதாக உள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. காரணம் ஓயாத வேலை உங்களுக்கு அசதியை தரும் அவ்வப்போது ஓய்வும் அவசியம், அப்படி ஓய்வெடுத்தால் மட்டுமே சோர்வில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். உணவு விசயத்தில் அக்கறை காட்டுங்கள். மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் முழு சக்தியுடன் மீண்டெழுவீர்கள். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்களுடைய நோய்கள் முழுமையாக குணமடையும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உங்க ஆரோக்கியத்தை பராமரிக்க நடைபயிற்சி உடற்பயிற்சி செய்யுங்கள். ஆண்டின் இறுதிவரை கோள்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளதால் உற்சாகத்தோடு இருப்பீர்கள் வருமானத்தையும் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

சுக காரகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, உங்களுக்கு 2020ஆம் ஆண்டு, உங்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். சனியின் இடமாற்றம் உங்களுக்கு நன்மையை தரும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அவ்வப்போது பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க மருத்துவ அலோசனை பெற வேண்டியது அவசியம். வேலைக்கு நடுவே அவ்வப்போது ஓய்வு அவசியம். மார்ச் மாதத்தில் குருவின் அதிசார சஞ்சாரத்தின் போது உங்களின் நோய்கள் குணமடையும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மன அழுத்தம் நீங்கும். உங்களின் உணவுப்பழக்கமும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். வேலைப்பளு உங்களின் சோர்வை அதிகரிக்கும் எனவே உங்களின் சக்தியை நீங்க சேமிப்பது அவசியம். நரம்பு, தசை தொடர்பான பிரச்சினைகள் வரலாம். இந்த ஆண்டு உங்களுக்கானதாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியத்தை அனுபவிக்க சந்தோஷமாக இருங்கள்.

மிதுனம்

மிதுனம்

2020ஆம் ஆண்டில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஏப்ரல் முதல் ஜூலை வரை உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். சரியான மருத்துவ ஆலோசனை அவசியம். எந்த பிரச்சினைகளையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். எதையும் புறக்கணிக்க வேண்டாம்.
காரணம் அஷ்டமத்து சனி ஏழாம் இடத்து குரு உங்களுக்கு நோய்களை வெளிப்படுத்தும் மருத்துவ ஆலோசனை அவசியம். பழைய உணவுகள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள். உடல் சோர்வு எட்டிப்பார்க்கும். வாதம் தொடர்பான நோய்கள் வரலாம். முழங்கால் வலி, மூட்டு வலி, கீல்வாதம், பை, வாயு, அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மது போதை மற்றும் அதிகப்படியான அசைவ உணவை தவிர்க்க வேண்டும். சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். சீரான உணவை உண்ணுங்கள். இடையில் தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள் அப்போதுதான் ஆரோக்கியம் அதிகமாகும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, உங்க உடல் ஆரோக்கியம் இந்த ஆண்டு ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
சீரான உணவுப்பழக்கம் அவசியம். பித்த நோய்கள் அதிகமாகும். உடலில் சூடு தொடர்பான நோய்கள் ஏற்படும். குருவின் ஆறாம் வீட்டு சஞ்சாரம், கண்டச்சனியின் காலகட்டம் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் கவனம் தேவை. குருவின் பார்வை உங்க நோய்களை தீர்க்கும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும். கண்டச்சனி என்பதால் எந்த ஆரோக்கிய குறைபாட்டையும் அலட்சியப்படுத்த வேண்டாம். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் தேவை. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க நீங்கள் தியானம் செய்வது அவசியம். வேலைக்கு நடுவே சில நேரங்களில் ஓய்வெடுப்பது அவசியம். அப்போதுதான் உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+