Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2023: இந்த 4 ராசிக்காரர்களும் மறந்தும் இந்த நிறங்களை அணியாதீர்கள்! கவனம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகின்றன. சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சில நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும். சில எண்கள் சாதகத்தை தரக்கூடும். தனுசு,மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் என்ன நிறங்கள் சாதகமாக இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நவ கிரகங்களுக்கும் சாதகமான நிறங்கள் உள்ளன. நவ கிரகங்களுக்கு சாதகமான எண்கள் உள்ளன. அந்த நிறங்களும் எண்களும் சிலருக்கு வெற்றியைத் தேடித்தரும். நம்பிக்கையையும் தைரியத்தையும் தரக்கூடும்.

குரு பகவான்,சனி பகவான் ஆதிக்கம் நிறைந்த தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் வேலையும், தொழிலும் எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு


குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு கடந்த ஏழரை ஆண்டு காலம் கஷ்ட காலமாகவே இருந்தது. ஏழரை சனியால் எத்தனையோ சிரமங்களை பட்டிருப்பீர்கள். இனி உங்களுக்கு அற்புதமான யோக காலம்தான். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. சனி பகவான் அற்புத யோகங்களைத் தரப்போகிறார். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. எனவே வேலையில் புரமோசன் கிடைக்கப்போகிறது. சூரியன், செவ்வாய் அற்புதமான பலனை தரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள் நீங்கி உடல் நலமடையும். வியாழக்கிழமை குரு பகவானை வணங்குங்கள். இந்த ஆண்டு அதிகமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறப்போகிறது. பண வருமானமும் லாபமும் அதிகம் கிடைக்கப்போகிறது. உங்களுக்கு வந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றப்போகிறீர்கள். இந்த ஆண்டு நீங்கள் அதிகம் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது. உங்களுக்கு ராசியான எண்கள் 3,9.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்கிறார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார். சுகஸ்தான குரு பகவான் உங்களுக்கு சுகங்களைத் தரப்போகிறார். சுக்கிரனும் உங்களுக்கு சுகங்களைத் தரப்போகிறார். வேலை தொழிலில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் சுக்கிரபகவானின் அருளால் பண மழை பொழியும். கறுப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்த்து விடுங்கள். மகிழ்ச்சியான மன நிலையே உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். நிறைய வருமானத்தை தரும். இந்த ஆண்டு உங்களுக்கு ராசியான நிறங்கள் வெளிர் சந்தனம், வெளிர் பச்சை நிறம். எண்கள் 5,6,வேலை செய்யும் இடத்தில் நேர்மறையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் அதிகப்படுத்துங்கள்.

கும்பம்

கும்பம்


சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு சனி பகவான் ஜென்ம ராசிக்கு வருகிறார். குரு பகவான் மூன்றாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் இணைகிறார். 2023ஆம் ஆண்டில் நிறைய அற்புத பலன்களைத் தரப்போகிறது. வேலை தொழிலில் நிறைய லாபம் அதிகரிக்கும். நேர்மறையாக அணுகுங்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அணுகாதீர்கள். யோசித்து பொறுமையாக முடிவெடுங்கள் நல்லது நிறைய நடைபெறும். வேலையில் பளு அதிகரித்தாலும் மதிப்பும் மரியாதையும் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும். உங்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். புதன்கிழமை பச்சை நிற ஆடை அணியவும். பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அதே போல வெள்ளிக்கிழமை நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும். ராசியான எண்கள் 5 மற்றும் 6.

 மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் இணைகிறார். உங்களுக்கு இந்த ஆண்டு யோகம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. காரணம் குருவின் பார்வையும் பயணமும் சாதகமாகவே உள்ளது. சனி பகவான் ஏழரை சனியாக வரப்போவதால் நிறைய விரைய செலவுகள் வரும். நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். நேர்மறை எண்ணங்களை மட்டுமே அதிகரியுங்கள். உங்கள் பாதங்களில் கவனம் தேவை. அடிக்கடி கால்களை கழுவுங்கள். எண்ணம் போல வாழ்வு என்று சொல்வார்கள். நல்லதையே நினையுங்கள். நல்லதே நடக்கும். இந்த ஆண்டு மறந்தும் கூட கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. சுத்தமும் சுகாதாரமும் உங்களுக்கு நிறைய வருமானத்தை தரும். நிறைய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை வணங்குங்கள். குரு பீடங்களுக்கு சென்று வாருங்கள். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி குரு பகவானை வணங்குங்கள். வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது. ராசியான எண்கள் 3,9. இந்த ஆண்டு குருவின் அருள் பரிபூரணமாக கிடைப்பதால் வருமானம் பெருகும் ஆண்டாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+