Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரிய,சந்திர கிரகணங்கள்..ஐப்பசி மாதத்தில் 4 கிரக கூட்டணியால் அதிர்ஷ்டம் யாருக்கு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐப்பசி மாதத்தில் சூரியன், சந்திரன் கிரகணங்கள் நிகழ உள்ளன. துலாம் ராசியில் சில நாட்கள் சூரியன், சந்திரன், கேது, சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைந்து சதுர் கிரக யோகத்தை தரப்போகின்றன. இந்த கிரகங்களை நேர் பார்வையாக ராகு பார்ப்பதால் கூடுதலாக தாக்கம் ஏற்படலாம். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். துலாம் ராசியில் நீச்சம் பெற்று பயணிக்கும் சூரியனுடன் கேதுவும், ஆட்சி பெற்ற சுக்கிரனும் பயணம் செய்ய இருக்கின்றன. இதனால் சூரியன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று பயணம் செய்யப்போகிறார். வக்ர நிலையில் பயணித்த சனிபகவான் இந்த வாரத்தில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார்.

சில ராசிகளில், சுக்கிரன் சூரியன் இணைவு மிகப்பெரிய ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் சூரியனுக்கு பலம் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம். ஐப்பசி மாதம் 8ஆம் தேதி அக்டோபர் 25ஆம் தேதி துலாம் ராசியில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இதே மாதத்தில் 22ஆம் தேதி நவம்பர் 08ஆம் தேதி மேஷ ராசியில் ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணங்களால் இன்னும் சில மாதங்களுக்கு சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. யாருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான தைரிய வீரிய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. இரண்டாம் வீட்டில் கூடி இருந்த கிரகங்களால் சில சிரமங்களை சந்தித்து வந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வெற்றிகள் தேடி வரப்போகிறது. இந்த மாதத்தில் மூன்றாவது கூடியுள்ள கிரகங்களினால் எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரும். வீட்டிற்கு அருகே இருந்து கொண்டு குடைச்சல் கொடுத்தவர்கள் கூட இனி இடம் மாறி தடம் தெரியாமல் போவார்கள். வேலையில் இருந்த தொந்தரவுகள் முடிவுக்கு வரப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும்.

வீடு வாங்கும் யோகம் வரும்

வீடு வாங்கும் யோகம் வரும்

செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் பயணம் செய்வதால் சொத்து சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். சுக்கிரன் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் பெண்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் பெண்கள் வாங்குவீர்கள். வீடு இடமாற்றம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதரன், சகோதரி வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். ஆலய விஷேசங்களில் பங்கேற்பீர்கள். மாணவ மாணவியர்களுக்கு அற்புதமாக கால கட்டம் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும். விநாயகர் வழிபாடு வெற்றியைத் தேடித்தரும்.

 கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடான வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நான்கு கிரக சேர்க்கை ஏற்படுகிறது. வெற்றிகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நினைத்த காரியங்களை ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்கள் ராசிநாதன் இரண்டாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைவதால் கல்யாண யோகம் கை கூடி வரப்போகிறது.

 தொழில் தொடங்கும் யோகம்

தொழில் தொடங்கும் யோகம்


வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.
சுய தொழில் செய்வதற்கான யோகம் கை கூடி வந்துள்ளது. பெண்களுக்கு நகை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அமாவாசை நாளில் ஆதரவற்றவர்களுக்கு உதவுங்கள். இனிப்பு தானமாக கொடுப்பது மேலும் நன்மைகளை அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசியில் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். நான்கு கிரகங்கள் சேர்க்கை உங்கள் ராசியில் நிகழ்கிறது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பதற்றம் படபடப்பு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் பயணம் செய்தாலும் மீண்டும் வக்ரமடைந்து எட்டாம் வீட்டிற்கு செல்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் அவசியம்.

சொத்து சேர்க்கை ஏற்படும்

சொத்து சேர்க்கை ஏற்படும்

தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அதற்கான பண உதவி அப்பாவின் மூலம் தேடி வரும். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். சொத்துக்களை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் அதிக கவனத்துடனும் முன்யோசனையுடனும் நடந்து கொள்வது அவசியம். சட்டப்பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் சேரும் யோகம் கைகூடி வருகிறது. செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்


செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் பயணங்களில் கவனமும் நிதானமும் அவசியம். அதிக வேகம் ஆபத்தாக முடியும். 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. வருமானம் அதிகரிப்பது போல திடீர் செலவுகளும் வரும். எனவே பிள்ளைகள் படிப்பு, திருமணம் என இந்த மாதத்தில் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

 வேலையில் கவனம் தேவை

வேலையில் கவனம் தேவை


எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ராசி நாதன் செவ்வாய் வக்ரமடைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசி முடிக்கலாம், திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மீது உயரதிகாரிகளுக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் யாரைப்பற்றியும் புறம் பேசாதீர்கள். புதன்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி பச்சைப்பயிர் தானமாக கொடுப்பது நல்லது,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+