Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவணி மூலம் திருவிழா.. கருங்குருவிக்கு மந்திர உபதேசம் செய்த சிவ பெருமான்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய அம்சமான சிவனின் திருவிளையாடல் வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை சனிக்கிழமை நடைபெற உள்ளது.

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும். முதல்நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெறுகிறது.

Aavani moolam festival Madurai 2023: Karunguruvikku Upadesam

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய அம்சமாக வரும் சனிக்கிழமை முதல் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.

முதல் நாளான்று நாளை கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெறும். ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்த நிலையில் சிறிதளவு பாவம் செய்திருந்ததால் மறுபிறவியில் கருங்குருவியாக பிறக்கிறான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தது.

அந்த சமயத்தில் அந்த மரத்தின் கீழே சிலர் மதுரையைப்பற்றியும், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசி கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி அங்கிருந்து பறந்து மதுரைக்கு வந்தது. அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது.

இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அப்போது கருங்குருவி இறைவனிடம் எங்கள் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கும்படி கேட்டது. மேலும் கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முத்திபேறு அடைந்தது என்பது வரலாறு.

Aavani moolam festival Madurai 2023: Karunguruvikku Upadesam

ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய அம்சமான 12 திருவிளையாடல்களில் சனிக்கிழமை கருங்குருவிக்கு உபதேசம் செய்வதுடன் தொடங்குகிறது. நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டியது, வரும் 25ஆம் தேதி இரவு வளையல் விற்ற லீலை நடைபெறும். அன்றைய தினம் இரவு சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.

இதனையடுத்துதான் முக்கிய திருவிளையாடலான நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது விறகு விற்ற லீலைகள் நடைபெறும். 29ஆம் தேதி இரவு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் சட்டதேரில் ஆவணி மூல வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 30 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் ஆவணி மூலம் திருவிழா நிறைவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+