ஐப்பசி மாத ராசி பலன் 2021: மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம் தேடி வரும்
ஐப்பசி மாதம் துலாம் மாதம். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி மாதத்தில் மிதுனம் மற்றும் கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: ஐப்பசி மாதத்தில் குருவின் பார்வையால் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம் கை கூடி வந்துள்ளது. தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். மகர ராசியில் உள்ள ஆட்சி பெற்ற சனியின் பார்வை சூரியன் மீதும் விழுகிறது. நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பலன்கள் எப்படி அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் புதன், செவ்வாய், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
நவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் 4ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு வந்து செவ்வாயுடன் இணைகிறார். 13ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார். 16ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் 27ஆம் தேதி குரு மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதத்தில் கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. நான்காம் வீட்டில் புதன், செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சூரியன், விரைய ஸ்தானத்தில் ராகு, ஆறாம் வீட்டில் கேது,சுக்கிரன், எட்டாம் வீட்டில் குரு,சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுக்கு இந்த மாதம் திடீர் வீண் விரைய செலவுகள் கட்டுப்படும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் செய்யலாம். மருத்துவ செலவுகள் குறையும், வீண் செலவுகள் கட்டுப்படும். பூமி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வீடுகளை புதுப்பிற்கும் வேலைகளை செய்யலாம். அஷ்டமத்து சனி குருவினால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. உணவு விசயத்திலும் கவனம் தேவைப்படும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். மாத பிற்பகுதியில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் தடைபட்ட திருமணங்கள் சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

பெண்களுக்கு மகிழ்ச்சி
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். சிலர் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தேவையற்ற வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நன்மைகள் ஏற்படும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். படிப்பில் புத்திசாலித்தனம் பளிச்சிடும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். பெண்கள் இல்லத்தரசிகளுக்கு கூடுதல் பொறுப்பு அதிகரிக்கும். புதிய செயல்களைத் செய்யத் தொடங்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. செவ்வாய்கிழமை விநாயகரை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

வாய்ப்புகள் கை கூடும்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் முயற்சி ஸ்தானத்தில் புதன், செவ்வாய், சுக ஸ்தானத்தில் சூரியன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது, சுக்கிரன், ஏழாம் வீட்டில் குரு, சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. யோகமும் அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி அதிகம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பண வரவு தாராளமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களிடம் இருந்து வீட்டிற்கு பணம் வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் வரும். வேலையில் மேன்மை உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய யோகங்கள் தேடி வரும், தாய் மாமன் வகையில் உதவிகள் தேடி வரும். கலைத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பண வருமானமும் அதிகரிக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உற்சாகம் பிறக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பார்வையும் முயற்சி ஸ்தானத்தின் மீது விழுவதால் முயற்சிகள் கை கூடி வரும்.

லாபம் அதிகரிக்கும்
திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். எதிர்கால திட்டமிடல் வெற்றிகரமாக நடைபெறும். காதல் இனிக்கும் காதலர்களிடையே சண்டை ஏற்பட்டாலும் எளிதில் சமாதானமடைவீர்கள். கோர்ட் கேஸ் வம்பு வழக்கு பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் வழியில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். குடும்பத்தலைவர்கள் இல்லத்தரசிகள், பெண்களுக்கு நிறைய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் நினைத்த காரியம் கை கூடி வரும். சந்திராஷ்டம நாளில் அரசுத்துறையில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். பயணங்களால் அலைச்சல் அதிகமாகும் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications