ஐப்பசி மாதம் ராசி பலன்கள் 2019: மேஷம் ராசிக்கு பலன்கள் - பரிகாரங்கள்
ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நவ கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
Recommended Video
சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன் புதன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு தனுசு ராசியில் சனி கேது என அமர்ந்துள்ளது. ஐப்பசி ஆறாம் தேதி விருச்சிக ராசிக்கு புதன் நகர்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் வக்ரகதியில் செல்கிறார். 11ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 18ஆம் தேதி குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 24ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம் ராசிக்கு பலன்களைப் பார்க்கலாம்.
ஐப்பசி மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலாம் ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் அதிகரித்தும் காணப்படும். இந்த ஐப்பசி மாதம் குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது, தீபாவளி, கந்த சஷ்டி, முதல் சனி பிரதோஷம் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

உடல் நலனில் கவனம்
ஐப்பசி மாதம் மிக சிறப்பான மாதம். துலாம் ராசியில் சூரியன் நீசமடைகிறார். சனி துலாம் ராசிக்கு யோகாதிபதி. ஆனால் அங்கே சுக்கிரன் ஆட்சி பெற்றிருகிறார். நீசபங்க ராஜயோகமடைகிறார் சூரியன். எல்லாம் பத்து நாட்களுக்குத்தான் அப்புறம் சுக்கிரனும், புதனும் எட்டாம் வீட்டிற்கு நகர்ந்து விடுவதால் நீச சூரியனால் மாத பிற்பகுதியில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். செவ்வாய் ஆறாம் வீட்டில் இருக்கிறார். சின்னச் சின்ன உடல் நல பாதிப்புகள் ஏற்படும். சுகர் பிரச்சினை இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். சோம்பேறித்தனமாக இருப்பீர்கள்.

எதிர்பாராத திருப்பங்கள்
இந்த மாதம் கடினமான உழைப்பு தேவைப்படும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் முக்கியம். வயிறு உபாதைகள் ஏற்படும். காரணமான உணவுகளை தவிர்க்கலாம். திடீர் திருப்பங்களும் எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படும். திறமைகள் பளிச்சிடும். வரவும் செலவும் சமமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும்.

வண்டி வாகனத்தில் கவனம்
மேஷ ராசிக்கு ஏழில் சூரியன், சுக்கிரன், புதன், மூன்றில் ராகு, எட்டில் குரு மாத மத்தியில் ஒன்பதாம் வீட்டிற்கு குரு நகர்ந்து சனி கேது உடன் இணைகிறார். அஷ்டமத்தில் இருந்த குரு இந்த மாத பிற்பகுதியில் ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவானால் நிறைய நல்லது நடக்கும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள சனியோடு குரு இணைவதால் உங்க உடம்பில கவனம் வையுங்க. வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. வயதானவர்களுக்கு உடல்வலி, மூட்டுவலி வரும் சுறுசுறுப்பு குறையும். மனதிற்கு பிடித்த செயல்களை செய்வீர்கள். துலா ஸ்தானம் செய்யுங்கள் சிவன் பெருமாளை தரிசனம் பண்ணுங்க நல்லது நடக்கும்.

குரு பெயர்ச்சியால் நன்மை
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. நல்ல முறையில படிங்க. வெளியூர் பயணம் நல்லதாக நடக்கும். சிலருக்கு வெளிநாடு கல்வி யோகம் வரும். கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம். புத்திரகாரகன் குரு ஒன்பதாம் வீட்டில் நகரும் காலத்தில் திருமண முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். சிலரது வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும். நல்ல செய்தி தேடி வரும். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.

பொறுமை தேவை
காவிரியில் குளித்து இறைவனை தரிசிக்க புத்திரபாக்கியம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் இடமாற்றம் கிடைக்கும். வண்டி வாகனம் எதையும் மாற்ற வேண்டாம். காரணம் சூரியன் நீசமடைந்திருக்கிறார். பொறுமை தேவை. வியாபாரம், புது தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சரியில்லை. கார்த்திகை மாதத்தில் எந்த தொழிலையும் தொடங்கலாம். இந்த மாதம் கடுமையான உழைப்பினால் அசதி எட்டிப்பார்க்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க. ஒரேடியாக வேலை பார்த்து உடம்பை கெடுத்துக்காதீங்க.

கந்த சஷ்டி கவசம் படிங்க
சனியின் பத்தாவது பார்வை உங்க ஆறாம் இடத்தின் மீது விழுவதால் கடன் வாங்க வேண்டாம். நிறைய பேர் கடன் வாங்கி விட்டு திண்டாடுவீர்கள். கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும். அரசு தேர்வுக்காக தயார் செய்பவர்கள் நன்றாக படிக்கவும். பெற்றவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். இந்த மாதத்தில் புதிய நட்பு வட்டாரம் எதையும் தொடங்க வேண்டாம். கந்த சஷ்டி விரதம் இருங்கள். சஷ்டி கவசம் படியுங்கள் உடல்நிலை பாதிப்பு நீங்கும் நன்மைகள் நடக்கும். முருகனின் அருள் இருப்பதால் நிச்சயம் நல்லது நடக்கும்.












Click it and Unblock the Notifications