ஏப்ரல் மாத ராசி பலன் 2023: ராஜவாக வாழப்போகும் ராசிக்காரர்கள்..திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. கிரகங்களின் திடீர் மாற்றம் புதிய திருப்பங்களையும் தரும். பண வருமானத்தை தரும் பொருளாதார ஏற்றத்தை அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கும். சில ராசிக்காரர்களுக்கு சோதனைகள் அதிகம் நடைபெறும். தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் கூடவே குரு, புதன், மேஷத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய்,துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. மேஷ ராசியில் உள்ள சுக்கிரனும் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி நான்கு ராசிகளில் பிறந்தவர்கள் யார் ராஜாவாக வாழப்போகிறீர்கள் என்று பார்க்கலாம். யாருக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

தனுசு

தனுசு

ஏழரை சனி முடிந்து விட்டது. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைந்துள்ளது. ராகு உடன் குரு, புதன், சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகிறது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடப்போகிறீர்கள். உங்களின் லட்சியத்தை அடைவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். இறைவன் அருள் உங்களுக்கு தேடி வரப்போகிறது. குருவின் அருள் உங்களுக்கு திரு அருளாய் கிடைக்கப்போகிறது. அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெறுவார்கள். பதவி யோகமும் உத்யோகத்தில் உயர்வும் கிடைக்கப்போகிறது. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உங்களை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். திருமண யோகம் வந்து விட்டது, புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த ஏப்ரல் மாதம் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களும், அதிசயங்களும் நிகழப்போகிறது.

 மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானம் வலுவடைந்துள்ளது, சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். உச்சம் பெற்ற சூரியன் உடன் புதன், குரு இணைந்து புதிய மாற்றத்தை தரப்போகின்றனர். வேலை வாய்ப்பில் வெற்றிகள் கிடைக்கும். பண வருமானம் அற்புதமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். பணம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. அவசரப்பட்டு பேசிவிட்டு கஷ்டப்பட்ட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைப்பளு கூடும். எதையும் எளிதாக கையாளுங்கள் ஏப்ரல் மாதத்தில் எதையும் அவசரமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட வேண்டாம் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் பயணம் செய்கின்றன. இளைய சகோதரர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். ஜென்ம சனியால் சில தடைகள் வரலாம். வேலையில் கவனம் தேவை. பொறுப்புடன் கையாளுங்கள்.யாரை நம்பியும் எதையும் ஒப்படைக்காதீர்கள். முதலீடு செய்யாதீர்கள். பலமுறை பணத்தை இழந்த உங்களுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்திருக்கும். சுப செலவுகளை அதிகரித்துக்கொள்ளுங்கள். வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். அதன் மூலம் சுப செலவுகளும் அதிகரிக்கும். பெண்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் கூடும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் வந்து போகும். வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்யாதீர்கள். இருக்கும் வேலையில் கவனமாக செயல்படுங்கள். மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் கவனமாக செயல்படுங்கள்

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே.. உங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் குடும்பத்தில் குதூகலத்தை தருவார். இரண்டாம் வீட்டில் சூரியன், புதன், குரு, ராகு இணைவது சிறப்பு. வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். செய்யும், தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது. திருமண சுபகாரியம் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். குருவின் பார்வை பலமாக உள்ளது. சுப செலவுகள் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு அற்புதமான மாதம். பொன் பொருள் சேரும். நகைகள் வாங்குவீர்கள். உயர்கல்வி யோகம் கைகூடி வரப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+