உங்கள் பெயரில்.. E - I - K - R - S போன்ற எழுத்துக்கள் இருக்கா? என்ன பலன் தெரியுமா? இதை பாருங்க
சென்னை: உங்கள் பெயரில் ஆங்கில எழுத்துக்களான E - I - K - R - S போன்ற வார்த்தைகள் இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்.
நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்கான பெயர்கள் பெரும்பாலும் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டுவிடும். பெரும்பாலும் பலருக்கும் பிறக்கும் முன்பே இதுதான் பெயர் என்று பெற்றோரால் தீர்மானிக்கப்படும். சிலருக்கு வயதான பின் பெயர் - எண்கணிதம் அடிப்படையில் மாற்றப்படும்.

எப்படி இருந்தாலும் உங்களின் பெயர் என்பது வெறும் பெயர் அல்ல. அது நியூமராலஜி அடிப்படையில் பார்த்தால் உங்கள் குணத்தை காட்ட கூடிய, உங்கள் இயல்பை உணர்த்த கூட ஒன்றாக இருக்கும். ஏன் உங்களின் எதிர்காலத்தை கூட நிர்ணயிக்கும் ஒன்றாக உங்களின் பெயர்கள் இருக்கும்.
உங்களின் பெயரில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் கூட உங்களின் குணாதிசயங்களை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கும். அப்படி உங்கள் பெயரில் பின்வரும் எழுத்துக்கள் இருந்தால்.. அதன் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.
E என்பது உற்சாகத்தை குறிக்கும்:
எண் கணிதத்தில், E என்பது எழுத்து சுதந்திரம், தகவல் தொடர்பு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றை உணர்த்த கூடியது. நீங்கள் மிகவும் வசீகரமான, உற்சாகமான குணம் கொண்டவர் . உங்கள் வசீகரமான ஒளி மற்றும் நட்பான இயல்புகளால் மக்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். அவுட் ஆப் பாக்ஸ் சிந்தனை என்பார்களே.. அப்படி சிந்திப்பது உங்களின் குணமாக இருக்கும்.
I என்பது புத்தி கூர்மையை குறிக்கும்:
ஒரு பெயரில் I என்ற எழுத்து இருப்பது அந்த நபர் இரக்கமுள்ளவர், தாராளமானவர் மற்றும் வளமானவர் என்பதைக் குறிக்கிறது. மேலும் அதீத அறிவு கொண்டவர் என்பதை குறிக்கும். இந்த நபர்கள் தொழில்நுட்ப ஆர்வலராகவும் இருப்பார்கள். புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பதில் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.
K என்பது அமைதியின்மையை குறிக்கும்:
K என்பது உங்கள் பெயரில் இருந்தால், நீங்கள் அதீதமாக வேலையில் ஈடுபடுபவர். நீங்கள் உறுதியானவர் மற்றும் பச்சாதாபம் கொண்டவர். நீங்கள் ஓய்வு எடுப்பதை விரும்ப மாட்டீர்கள். அதே சமயம் அமைதியாகவும் ஒரு இடத்தில் இருக்க மாட்டீர்கள். உறுதியான குறிக்கோள் மற்றும் திடமான சிந்தனையுடன் நீங்கள் வாழ்க்கையைக் கையாளுவீர்கள். இருப்பினும், நீங்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளவர்.
S என்பது ஆற்றலை குறிக்க கூடியது:
தங்கள் பெயரில் S என்ற எழுத்தைக் கொண்ட நபர்கள் தவிர்க்கமுடியாத கவர்ச்சி, ஆழ்ந்த உணர்ச்சி, அன்பான குணத்தை கொண்டவர். நீங்கள் அதிகம் சிந்திக்க கூடிய ஓவர் திங்கர். அதீத ஆன்மீக அறிவு கொண்டவர். அதே சமயம் அறிவியலையும் ஒரு கை பார்க்கும் குணம் கொண்டவர். உங்களுக்கு சினிமா, அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு. கொஞ்சம் முயற்சி செய்தால்.. நீங்கள் முன்னேறலாம்.
T என்பது தலைமை பண்பை குறிக்க கூடியது:
T என்ற எழுத்து பல்வேறு துறைகளில் தலைவர்களாக விளங்குபவர்களை குறிக்கும். நீங்கள் தனித்துவமான குணத்தை கொண்டவர். எந்த செயலையும் சுவாரசியமாக செய்ய கூடியவர். அவர் அப்படி ஒரு காரியத்தை செய்தாரா என்று பலரும் வியக்கும் விதத்தில் செயல்பட கூடியவர். என்ன ஒன்று அதிகம் டென்ஷனும் ஆக கூடியவர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications