10 - 7 - 11 - 13 - 21.. நீங்கள் இந்த தேதிகளில் பிறந்து உள்ளீர்களா? என்ன பலன் தெரியுமா? இதை பாருங்க
சென்னை: 10 - 7 - 11 - 13 - 21 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்து இருந்தால் அதன் அர்த்தம் என்ன.. அதன் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்கான எதிர்காலமும் தீர்மானிக்கப்பட்டுவிடும் என்பார்கள். அதாவது நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களின் கர்ம வினையின் பயன்கள் என்பார்கள்.

அந்த கர்ம வினை எல்லாம் நீங்கள் பிறக்கும் போதே உங்கள் தலை எழுத்தில் எழுதப்பட்டுவிடும். சில கர்ம வினைகள் பெரும்பாலும் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டுவிடும். அதாவது உங்கள் பெற்றோர் செய்த தவறுகள் உங்களுக்கும் கூட பாவங்களாக வந்து சேரும்.
இந்த கர்ம வினைகளை நீங்கள் பிறந்த தேதிகளை வைத்தே எளிதாக கண்டுபிடிக்க முடியும். நீங்கள் எந்த தேதியில் பிறந்துள்ளீர்கள்.. என்பதை வைத்தே உங்களின் ஜாதகம் எழுதப்படுகிறது. அதே போல அந்த எண்ணுக்கு என்று சில பலன்களும் குணாதிசயங்களும் உள்ளன.
எப்படி இருந்தாலும் உங்களின் பிறப்பு எண் என்பது வெறும் எண் அல்ல. அது நியூமராலஜி அடிப்படையில் பார்த்தால் உங்கள் குணத்தை காட்ட கூடிய, உங்கள் இயல்பை உணர்த்த கூடிய ஒன்றாக இருக்கும். ஏன் உங்களின் எதிர்காலத்தை கூட நிர்ணயிக்கும் ஒன்றாக உங்களின் பெயர்கள் இருக்கும்.
அந்த வகையில், 10 - 7 - 11 - 13 - 21 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்து இருந்தால் அதன் அர்த்தம் என்ன.. அதன் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
10ம் தேதியில் பிறந்தவர்:
புதிய தொடக்கம், சுதந்திரம், தலைமைத்துவம் மற்றும் லட்சியத்தை இந்த எண் குறிக்கிறது. உங்களுக்கு என்று நல்ல லட்சியம் இருக்கும்.
இது படைப்பாற்றல், தனித்துவம் மற்றும் உறுதி குணம் கொண்டவர்களை குறிக்கும்.
எண் கணிதத்தில், இது பெரும்பாலும் உருவாக்கம் மற்றும் தோற்றத்தின் எண்ணிக்கையாகக் காணப்படுகிறது. அதாவது நீங்கள் பெரும்பாலும் அதீத கற்பனை திறன், படைப்புத்திறன் கொண்டவராக இருப்பீர்கள்.
7ம் தேதியில் பிறந்தவர் :
இந்த எண் பெரும்பாலும் வெற்றியை குறிக்கும்.
உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும்.
சமநிலை, நல்லிணக்கம், ராஜதந்திரம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றைக் குறிக்கிறது.
எண் கணிதத்தில், இது வெற்றி மற்றும் இராஜதந்திரத்தின் எண்ணாக கருதப்படுகிறது.
ராஜா மாதிரி வாழும் வாய்ப்பு கொண்டவர்.
11ம் தேதியில் பிறந்தவர் :
நீங்கள் அதீதமாக வேலையில் ஈடுபடுபவர்.
நீங்கள் உறுதியானவர் மற்றும் சாதனைகளை கொண்டவர்.
பகல் கனவு காண வேண்டாம்.. செயல்களில் இறங்குங்கள் வெற்றி நிச்சயம்.
நீங்கள் ஓய்வு எடுப்பதை விரும்ப மாட்டீர்கள். பல ஊர்களுக்கு சென்று மக்களை பார்க்க விரும்புவீர்கள்.
காதல் மன்னன்.
13ம் தேதியில் பிறந்தவர் :
நீங்கள் இரக்கமுள்ளவர், தாராளமானவர் மற்றும் வளமானவர்.
நீங்கள் யாருக்கும் அடங்க மாட்டீர்கள், பெரும்பாலும் சுதந்திரத்தை மட்டுமே விரும்புவீர்கள்.
உங்களை சுற்றி கெட்ட விஷயங்கள் அதிகம் இருக்கலாம் . ஜாக்கிரதை.
எண் கணிதத்தில், இது பெரும்பாலும் சுதந்திரம் மற்றும் சாகசத்தின் எண்ணிக்கையாகக் கருதப்படும்.
வாழ்க்கையை சாகசமாக நினைத்து செயல்படுவீர்கள்.
படிப்பு அறிவு கம்மியாக இருந்தாலும் பட்டறிவு அதிகம் இருக்கும்.
21 ம் தேதியில் பிறந்தவர் :
நீங்கள் எந்த செயலையும் சுவாரசியமாக செய்ய கூடியவர்.
நீங்கள் கோபக்காரர் .
நினைத்ததை செய்ய கூடிய குணம் கொண்டவர்.
நீங்கள் தனித்துவமான குணத்தை கொண்டவர்.
பல்வேறு துறைகளில் தலைவர்களாக விளங்குபவர்களை குறிக்கும்.












Click it and Unblock the Notifications