Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்துமா யாரை தாக்கும்? என்ன பரிகாரம் செய்யலாம்?

மே முதல் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்பட்டாலும் புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கு ஆஸ்துமா கண்டிப்பாக இருக்கும் என்று ஜோதிட ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

ஆஸ்துமா நோயால் உலகம் முழுவதும் சுமார் 30 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக ஆஸ்துமா தினமாக ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செவ்வாய் கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கு ஆஸ்துமா கண்டிப்பாக இருக்கும் என்று ஜோதிட ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்துமா என்பது சுவாஸப்பையைப் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சுவாஸநோயின் ஒரு நிலையாகும். மூச்சிரைத்தல், இருமல், மற்றும் மூச்செடுக்கக் கஷ்டப்படுதல் ஆகியவைதான் ஆஸ்துமாவின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும்.

ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்ட அநேகர் இந்த நோயினை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.

Asthma? Solution through Astrology

ஆஸ்துமாவிற்கான ஜோதிட காரணங்கள்:

•உலக ஆஸ்துமா தினமாக தைரியத்தை குறிக்கும் செவ்வாயின் நாளில் கடைபிடித்தாலும் ஆஸ்துமா நோயிற்க்கு காரக கிரகம் தைரியமற்ற கோழை கிரகமான புதன்தாங்க. புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களுக்கெல்லாம் ஆஸ்துமா அல்லது சுவாச கோளாறுகள் கட்டாயம் இருக்கும்.

•புதன்,ராகுவின் இனைவு மூச்சுக்கோளாருகளை ஏற்படுத்தும். சந்திரன் சளி இருமல் கோழைகட்டு போன்ற நீரினால் ஏற்படும் வியாதிகளுக்கு காரக கிரகமாகும். சளியினால் மூக்கில் நீர்வடிதல் என்பதுதான் ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறியாகும். இதனை ஏற்படுத்தும் கிரக அமைப்பு சனி சந்திர சேர்க்கையாகும்.

•கால புருஷராசியின் இரண்டாமிடமான ரிஷபம், மற்றும் மூன்றாமிடமான மிதுனமும் மூக்கு, சுவாஸம் ஆகியவற்றை குறிக்கும் பாவங்களாகும்
எனவே மூச்சு மற்றும் சுவாஸத்தை குறிக்கும் பாவங்கள் 2 மற்றும் 3 வீடுகள் அகும். ஆஸ்துமா சுவாஸ நோய் என்பதால் காற்று ராசிகளான மிதுன, துலாம் கும்ப ராசிகளுக்கும் அதன் அதிபதிகளுக்கும் பங்குள்ளது.

•கால புருஷனுக்கு நான்காம் வீடான கடகம் நுரையீரலையும் சிம்மம் அதன் அடிப்பாகத்தையும் குறிக்கும். எனவே கால புருஷனுக்கு 4, 5 வீடுகளிலோ அல்லது ஜெனன ஜாதக 4, 5 வீடுகளோ சனியின் தொடர்பு பெற்றிருந்து அதனோடு சனியின் அசுப தொடர்புகள் ஆஸ்துமா வியாதியை ஏற்படுத்திவிடும்.

•கால புருஷ லக்னாதிபதியான செவ்வாயும் ஆத்ம காரகன் மற்றும் கால புருஷ லக்னத்தில் உச்சமடையும் சூரியனும் புதன் சனியோடு தொடர்பு கொள்ள ஆஸ்துமா வரும் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

Asthma? Solution through Astrology

ஆஸ்துமாவை ஏற்படுத்தும் முக்கிய கிரக நிலைகள்:

•லக்னாதிபதி அல்லது காலபுருஷ லக்னாதிபதியான செவ்வாய் சனியோடு சேர்ந்து 6/8/12 வீடுகளில் நின்று அந்த வீடுகள் காற்று ராசியாகவோ அல்லது நீர் ராசியாகவோ அமைந்தால் மூச்சுகோளாறு மற்றும் ஆஸ்துமா நோய் ஏற்படும்.

•சனி நான்காம் வீட்டோடு தொடர்பு கொண்டு அந்த நான்காம் வீடு நீர் ராசி அல்லது காற்று ராசியானால் ஆஸ்துமா நோய் ஏற்படும்.

•நான்காம் வீடு மற்றும் ஆறாம் வீட்டதிபதிகள் பரிவர்த்தனை பெற்று அதில் ஒரு வீடு காற்று அல்லது நீர் ராசியானால் ஆஸ்துமா நோய் ஏற்படும்.

•காலபுருஷ நான்காம் வீட்டதிபதியான சந்திரனும் ஆறாம் வீட்டதிபதியான புதனும் பரிவர்தனை பெற்று சனிதொடர்பும் பெற்றுவிட்டால் தீவிர ஆஸ்துமா நோய் அல்லது மூச்சுதிணரல் நோய் ஏற்படும்.

•லக்னம் நீர் ராசி அல்லது காற்று ராசியாக அமைந்து லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு செவ்வாய் அல்லது
சூரியனின் அசுப தொடர்பு பெற்று சனி சேர்க்கை பெற்றால் ஆஸ்துமா நோய் வந்துவிடும்.

•சனி அல்லது மாந்தி கன்னி ராசி அல்லது ஆறாம் வீட்டில் நின்று சூரியன் அல்லது செவ்வாய் அல்லது ராகுவுடன் தொடர்பு கொள்ளும்போது ஆஸ்துமா ஏற்படும்.

•சூரியன் கடகத்தில் நின்று சனியின் பார்வை சேர்கை பெற்றால் ஆஸ்துமா "விடாது கருப்பு" என வந்துவிடும்.

•ஆஸ்துமா நோயால் ஒருவர் பாதிக்க சுக்கிரனின் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும். சுக்கிரன் ஒருவருக்கு 6/8/12 அதிபதிகளாகவோ அல்லது கடகம் மற்றும் கன்னி/விருச்சிகம்/மீன ராசிகளில் நின்றுவிட்டாலோ அவரோடு சந்திரன் சேர்கை பெரும்போதெல்லாம் நீரினால் ஏற்படும் சளி தொந்தரவுகளும், புதன் சேர்க்கை பெரும்போதெல்லாம் ஆஸ்துமாவும் சனி பார்வை அல்லது சேர்க்கை பெரும்போதெல்லாம் தீவிர ஆஸ்துமாவும் வந்துவிடுகிறது.

• ஒருவர் ஜாதகத்தில் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீன ராசிகளும் காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆறாம் வீடுகளாக அமைய பெற்றவர்களுக்கு ஆஸ்துமா சனி/புதன்/சந்திரனின் தசா புத்தி அந்தரங்களில் அழையாத விருந்தாளியாக ஆஸ்துமா அல்லது சுவாஸ நோய்கள் வந்துவிடும்

Asthma? Solution through Astrology

ஆஸ்துமா நோயிற்கான ஜோதிட பரிகாரங்கள்:

•காலபுருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபத்தை ஆஸ்துமாவிற்க்கான பாவமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது நமக்கு உணர்த்தும் உண்மை யாதெனில் ஒருவர் வாய் கட்டுபாடு கொண்டிருந்தாலே (அதாவது ஒவ்வாத பழைய நீர்சத்துமிக்க உணவுகள் ஆகியவற்றை தவிர்த்தல்) ஆஸ்துமாவிலிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம்.

•"சளி பிடிப்பதும் சனி பிடிப்பதும் ஒன்று" என சளிநோயால் அவதியுருபவர்கள் கூறுவார்கள். எனவே சுவாஸத்தை குறிக்கும் வாயு கிரகமான சனி வழிபாடுகள் செய்தாலே ஆஸ்துமா மற்றும் சுவாஸநோயிலிருந்து தப்பலாம்.

•புதன் ஸ்தலமான திருவென்காடு சென்று புதபகவானை புதன் கிழமைகளில் வழிபடுவது.

•சுவாஸ நோய்களுக்கும் ராகுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதேபோல காற்று ராசிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே வாயு ஸ்தலம் மற்றும் ராகு பரிகார ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தி சென்று புதன் நட்சத்திரங்களான ஆயில்யம்-கேட்டை-ரேவதி நட்சத்திரங்களில் வழிபடுவது மற்றும் பரிகாரங்கள் செய்வது சிறந்த பலனளிக்கும்.

•செவ்வாய் பரிகார ஸ்தலங்களான வைதீஸ்வரன் கோயில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயில் ஆகியவை ஆஸ்துமா நோயிற்கான சிறந்த பரிகார ஸ்தலங்களாகும். இவற்றோடு சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சிகள் செய்வதும் சிறந்த பலனளிக்கும்.

•கேரள மாநிலம், திருச்சூர் - எர்ணாகுளம் பாதையிலுள்ள ஊர் 'திருக்கூர்'. இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறுகள் கோவில் மண்டபத்தில் கட்டி தொங்க விடப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+