எய்ட்ஸ், எச்ஐவி பாதிப்பு யாருக்கு எப்படி வரும் - ஜோதிட ரீதியான காரணங்கள் #உலக எய்ட்ஸ் தினம்

ஒருவரின் ஜாதக அமைப்பை வைத்து அவருக்கு என்ன மாதிரியான நோய்கள் ஏற்படும். அதனை குணப்படுத்த முடியுமா? எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய் வருமா என்பது போன்ற தகவல்களை கணிக்க முடியும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் அழகின் அதிபதி அவர் காமரூபன், அழகும் காமமும் இணைந்துதான் தேவையற்ற தொடர்புகளை ஏற்படுத்துகிறது. சர்வதேச எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினமான டிசம்பர் 1 ஆம் தேதியான இன்று எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு என்ன ஜோதிட ரீதியான காரணங்கள், பரிகாரங்களை பார்க்கலாம்.

ஒருவரின் அழகு, அறிவு ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி. அதற்கு அடுத்தபடியாக உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை லக்னாதிபதியும், சந்திரனும் காரணமாகிறார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். லக்னாதியும், சந்திரனும் கெட்டுப் போயிருந்தால் அவர்கள் எப்போதும் நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.

உயிர் கொல்லி நோய்கள்

உயிர் கொல்லி நோய்கள்

லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. லக்னாதிபதியுடன் சனி உடன் ராகு சேர்ந்து இருந்தாலும் பால்வினை நோய் அல்லது புற்றுநோயினால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும்.

அவருக்கு மலட்டுத்தன்மை, ஆண்மையின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும். பெண்ணாக இருந்தால் கரு முட்டை உருவாகாத குறைபாடு இருக்கும்.

சுக்கிரன் உடன் செவ்வாய் மற்றும் ராகு

சுக்கிரன் உடன் செவ்வாய் மற்றும் ராகு

எய்ட்ஸ்க்கு காரணமான எச்.ஐ.வி.யை உருவாக்குவது என்பது சுக்கிரன், செவ்வாய், ராகு கூட்டணிதான். இதேபோல சுக்ரன், செவ்வாய், சனி சேர்ந்தாலும் எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சுக்கிரனும் செவ்வாய் இருந்தாலே காம இன்பங்களில் மனம் அதிகம் செல்லும். சுக்கிரன் செவ்வாய் கூட்டணியோடு சனி சேர்ந்தாலோ அல்லது சனி பார்த்தாலோ அல்லது சுக்கிரன் செவ்வாயுடன் ராகு சேர்ந்தாலோ முறையற்ற உறவில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

 நோய்க்கு காரணம்

நோய்க்கு காரணம்

கடக லக்னமாக இருந்து அவருக்கு 11ஆம் இடமான சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு ஆகியவை சேர்க்கை பெற்றிருந்து லக்னாதிபதியான சந்திரன், 12இல் மறைந்திருந்தால் அந்த ஜாதகர் ஆணாக இருந்தால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்படும், பெண்ணாக இருந்தால் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்படும்.

பாலியல் நோய்கள்

பாலியல் நோய்கள்

ஒருவருக்கு காமம், காதல் எல்லாவற்றையும் தூண்டுவது கண்கள். கண் பார்வைக்குரிய கிரகம் என்று சொன்னால் சூரியன், சந்திரன், சுக்கிரன். இது மூன்றுமே காதலுக்கும் உரிய கிரகம். இதில் சுக்ரன்தான் இனப்பெருக்க உறுப்புகளுக்கு உரியது. வீரியத்தை கொடுப்பது செவ்வாய். சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்து இருக்க, அதனுடன் சனியோ ராகுவோ சேர்ந்துவிட்டால் பாலியல் சம்பந்தமான நோய்கள் ஆரம்பித்துவிடும்.

ஒருவனுக்கு ஒருத்தி

ஒருவனுக்கு ஒருத்தி

சுக்கிரன் செவ்வாய் கூட்டணி கூடவே ராகு இருந்தால் அந்த தசாபுத்தி நடக்கும் காலத்தில் முறையற்ற தொடர்புகள் ஏற்படும். இதனால் எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய் பாதிப்புகள் வரும் எனவே நோய்கள் பாதிக்காமல் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதே நேரத்தில் இந்த கிரகங்களின் கூட்டணி இருந்தாலும் சுப கிரகமான குரு பார்வை இருந்தால் அவர் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வார்கள். எட்டாம் அதிபதி ஆயுள்காரகன், ஆயுள் ஸ்தானாதிபதி அவர்கள் என்ன கதியில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நோயிலிருந்து அவர்கள் மீள்வார்களா? அல்லது மரணமா என்பதை கணிக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+