ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மகரம், கும்பம், மீன ராசிக்காரர்கள் சவால்களை சந்திப்பீர்கள்

ஆகஸ்ட் மாதத்தில் மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டமும் யோகமும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் மகரம், கும்பம், மீன ராசிக்காரர்கள் சவால்களை சந்தித்து சாதனைகளாக மாற்றுவீர்கள். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் மகரம், கும்ப ராசிக்காரர்களும், விரைய குருவின் சஞ்சாரத்தினால் மீன ராசிக்காரர்களும் இந்த மாதத்தில் என்ன மாதிரியான பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள், அதிர்ஷ்டங்களும், யோகங்களும் எப்படி இருக்கும் என்ன மாதிரியான சவால்களை நீங்கள் இந்த மாதம் சந்திக்கப் போகிறீர்கள் என்றும் பார்க்கலாம்.

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு
எண்ணங்கள் நிறைவேறும் மாதம். புதிய முயற்சிகள் வேண்டாம். பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும். கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. தொட்டது துலங்கும் மாதமாக அமைந்துள்ளது. வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

நவ கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் மீன ராசிக்காரர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த கஷ்ட நஷ்டங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது.

ஏழரை சனி ஜென்ம சனி

ஏழரை சனி ஜென்ம சனி

கடந்த சில மாதங்களாவே மன உளைச்சலில் இருந்து வருகிறீர்கள் மன கலக்கம் நீங்கும். உங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நிறைய நன்மைகள் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது. ஜென்ம காலத்தில் இருப்பதால் நிறைய படிப்பினைகளை கொடுப்பார். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் இருந்து கொண்டே இருக்கும் கவலைகள் வேண்டாம் இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை தேவை. எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள். கவலைகள் மாறும் கஷ்டங்கள் நீங்கும் என்று நினைத்து வேலையை தொடருங்கள். திருமணம் சுப காரியங்கள் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம்.

சவால்களை சந்திப்பீர்கள்

சவால்களை சந்திப்பீர்கள்

சுக்கிரன் எட்டாவது வீட்டில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகள் வேண்டாம். பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும். சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்தாலும் நீச்சமடைந்து பயணம் செய்வதால் பாதிப்புகள் தொடரும். புதன் சஞ்சாரம் மாத தொடக்கத்தில் ஏழாம் வீட்டில் இருந்தாலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி எட்டாம் வீட்டிற்கு மாறுவதால் கவனமும் நிதானமும் தேவை.
எட்டில் செவ்வாய் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் சூரியன் இடப்பெயர்ச்சியாகி எட்டாம் வீட்டிற்கு வருவதால் பொறுமையும் நிதானமும் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். தேவையற்ற டென்சனை குறைக்கவும். இரண்டாம் வீட்டில் குரு வக்ரமடைந்திருந்தாலும் பண வரவு நன்றாக இருக்கும். திருமணம் சுபகாரியம் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம். மொத்தத்தில் இந்த மாதம் சவால்களை அதிகம் சந்தித்தாலும் சாதனைகளாக மாற்றுங்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டகரமான மாதம்

அதிர்ஷ்டகரமான மாதம்


சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. தொட்டது துலங்கும் மாதமாக அமைந்துள்ளது. வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரும். புது வீடு கட்டிடம் கட்டுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குரு ஜென்மத்தில் இருப்பதால் நிரந்தர வருமானம் வரும். விரைய சனி காலமாக இருப்பதால் வரும் வருமானம் எல்லாம் செலவும் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றவும். சேர்த்து வைத்த பணம் செலவாகிக் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மாத இறுதியில் முடிவுக்கு வரும்.
செவ்வாயின் பார்வை கும்ப ராசியில் மீது விழுவதால் பலம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

திருமண சுப காரியம்

திருமண சுப காரியம்

மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டில் சூரியன் செவ்வாய் இணைவு பூமி யோகத்தை கொடுக்கும். அரசு வழி யோகத்தை கொடுக்கும். சூரியன், புதன் ஏழாம் வீட்டில் இணைந்து புத ஆதிபத்ய யோகத்தை கொடுப்பது நன்மையை தரும். காதல் கை கூடி வரும். திருமணம் சுபகாரியம் வெற்றியை தரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கொடுக்கும். சனியால் உடல் ஆரோக்கியத்தில் சில சங்கடங்கள் வரலாம் கவனம் தேவை. தம்பதியர் பேச்சில் கவனம் தேவை. ஆடி அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்து அன்னதானம் கொடுப்பது நன்மையைத் தரும்.

சந்தோஷம் அதிகரிக்கும்

சந்தோஷம் அதிகரிக்கும்


குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் அதிகம் நடைபெறும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் மாதமாக அமைந்துள்ளது. எதையும் நேர்மையாக எதிர்கொள்வீர்கள். நேர்மையான முறையில் எதையும் எதிர்கொள்வீர்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த நஷ்டங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது.

உடல் ஆரோக்கியத்தில் கவனம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம்

வேலை மாற்றம் செய்வதற்கு ஏற்ற மாதம் இல்லை. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ளவும். மாத முற்பகுதியில் திருமண பேச்சுவார்த்தைகள் வேண்டாம். மாத பிற்பகுதியில் திருமணம் புத்திரபாக்கியம் கை கூடி வரும். சுப விரைய செலவுகள் வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு இந்த மாதம் உயர்கல்விக்கு ஏற்றதாக உள்ளது. அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் உணவு விசயத்தில் கவனம் தேவை. பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+