Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் 2019: மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு குதூகலமான மாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். 3ஆம் தேதி புதன் கடகத்தில் கிரகங்களுடன் இணைகிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17ஆம் தேதி சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் செவ்வாய் உடன் இணைகிறார். விருச்சிகத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். தனுசு ராசியில் சனி, கேது இணைந்திருக்கின்றனர். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் ஆடி, ஆவணி இரண்டு மாதங்களும் பாதி பாதி உள்ளன. ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். ஆடிப்பூரம், அம்மன் தவசு என பல விழாக்கள் உள்ளன. ஆவணியில் ஞாயிறு விஷேசம், ராசிக்கட்டங்களில் ராகு, கேது, சனி, குரு கிரகங்கள் மாற்றமின்றி அதே இடத்தில் இருந்தாலும் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்களின் நகர்வைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். இது பொதுவான பலன்கள்தான்.

ஆகஸ்ட் மாதத்தில் பணவருமானம் யாருக்கு அதிகரிக்கும், புதிய வேலை கிடைக்குமா, திருமணம் முயற்சி கைகூடி வருமா பிள்ளை பேறு கிடைக்குமா என்று பல ராசிக்காரர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட்டில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். இது பொது பலன்தான் ஜாதகத்தில் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.

காதல் காலம்

காதல் காலம்

மகரம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்க. வெளிநாடு பயணம் யோகம் அமையும். காரணம் 12ஆம் வீட்டில் சனி கேது அமர்ந்திருக்க சந்திரன் ஏழாம் வீட்டில் சனி சாரம் பெற்றிருக்கிறார். ராசிக்கு ஆறாம் வீட்டில் புதன், ராகு சேர்ந்து இருக்கின்றனர். ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன், சூரியன். சஞ்சரிக்கின்றனர். லாப ஸ்தானத்தில் குரு லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் நன்மைகளைத் தருவார். வாய்ப்புகளை அள்ளித்தருவார். பணவருமானம் கூடும். ஏழாம் வீட்டில் நான்கு கோள்கள் இருக்கின்றன. மகர ராசியினை நான்கு கோள்களும் பார்ப்பதால் நன்மைகள் நடைபெறும். பயணங்களினால் நன்மை அமையும் சூரியன், சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் கூடும். இந்த மாதம் உங்க உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.

யோசித்து முடிவெடுங்கள்

யோசித்து முடிவெடுங்கள்

சூரியன், சுக்கிரன், செவ்வாய் மாத பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு செல்கின்றனர். வேலையில் இடமாற்றம் ஏற்படும். வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்படும். வேலையை விடும் முன்பு யோசிங்க. பொறுமை அவசியம். மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். கார் ஓட்டும் போது கவனம். பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. கல்வி மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரச்சினைகள் விலகும். மாத பிற்பகுதியில் வீடு வாங்கவோ கார் வாங்கவோ முயற்சி செய்ய வேண்டாம். பெண்கள் உடல் நலனில் அக்கறை தேவை. குல தெய்வ கோவிலுக்கு போங்க பாதிப்புகள் குறையும்.

 வெற்றிகள் குவியும் மாதம்

வெற்றிகள் குவியும் மாதம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்னு பாடுவீர்கள். அந்த அளவிற்கு குதூகலமான மாதமாக அமையும். ஐந்தாம் வீட்டில் புதன் ராகு, ஆறாம் வீட்டில் சூரியன் சுக்கிரன், செவ்வாய், சந்திரன் கூட்டணி, பத்தாம் வீட்டில் குரு, லாப ஸ்தானத்தில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. வாழ்க்கையின் உச்சத்தை தொடப்போகிறீர்கள். வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறப்போகிறீர்கள். சாதனைகள் உங்கள் கைகளில் வந்து விழப்போகிறது. வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். 3 தேதி முதல் 21ஆம் தேதி வரை புதன் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கோபப்பட வேண்டாம். உடல் அசதி வரும் காரணம் ஆறாம் வீட்டில் செவ்வாய் இருப்பதுதான். வெளிநாட்டு யோகம் வரும்.

குடும்பத்தில் குதூகலம்

குடும்பத்தில் குதூகலம்

ஆகஸ்ட் 10ஆம் தேதி செவ்வாய் சிம்ம செவ்வாயாக மாறுவதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கணவர் பாசமழை பொழிவார். ஏழாம் வீட்டிற்கு சுக்கிரன் வந்து சூரியனுடன் இணைவது குடும்ப வாழ்க்கையில் குதூகலத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார். சுக்கிரன் சிம்ம சுக்கிரன் ஆக மாறும் போது வாழ்க்கை துணைவருக்கு மிகப்பெரிய முன்னேற்றம் அதிர்ஷ்டம் வரப்போகிறது. தன வருமானம் வரும், குடும்பத்தில் குதூகலம் வரும். புதிய வேலை கிடைக்கும். அரசு வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு வெற்றிகள் தேடி வரும். குடும்பம் சமூகத்தில் மதிப்பு மரியாதை தேடி வரும். பிசினஸ், ஷேர் மார்க்கெட் முதலீடு 21ஆம் தேதிக்கு மேல் லாபத்தை கொட்டிக்கொடுக்கும். புதன்கிழமைகளில் நரசிம்மரை வழிபடுங்கள் வெற்றி உங்களைத் தேடி வரும்.

உடல் நலத்தில் கவனம்

உடல் நலத்தில் கவனம்

நான்காம் வீட்டில் புதன் ராகு, சந்திரன் ஐந்தில் இருக்க சுக்கிரன் சூரியன் செவ்வாய் இணைந்திருக்க பாக்ய ஸ்தானத்தில் குரு, கரும ஸ்தானத்தில் சனி கேது சஞ்சரிக்கின்றனர். கல்வியில் சில பிரச்சினைகள் இருக்கும். வேலையில் சிலருக்கு பிரச்சினை தேடி வரும். புதன் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி மேல் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வியாபாராத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். மாத துவக்கத்தில் ஐந்தாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், சந்திரன் செவ்வாய் இணைந்திருக்கின்றனர். உங்கள் ராசிநாதன் குரு பார்வை விழுவது சிறப்பம்சம். வங்கிக் கடன் கிடைக்கும். உங்க ராசி நாதன் குரு வக்ர நிவர்த்தி அடைந்து பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு நகர்வதால் நன்மைகள் நடைபெறும். பிரச்சினைகள் குறையும்.

கடன் வாங்க வேண்டாம்

கடன் வாங்க வேண்டாம்

17ஆம் தேதிக்கு மேல் ருண ரோக சத்ரு ஸ்தானம் வலுக்கிறது. அதிகம் யாரையும் நம்ப வேண்டாம். மாத பிற்பகுதியில் சற்றே குழப்பமாக இருக்கும். குருவின் அருளால் எதையும் சமாளிப்பீர்கள். பிள்ளைகள் வளர்ப்பில் இருக்கும் பிரச்சினைகள் தீரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பிசினஸ் ஆரம்பிக்கும் எண்ணம் தேடி வரும். உடல்நலக்குறைகள் தீரும். படிப்பில் வெற்றி கிடைக்கும். ஆகஸ்ட் மாதம் ஆனந்தமாக அமையும். கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். இந்த மாதம் மகாலட்சுமி அனுக்கிரகம் வரும். குல தெய்வ வழிபாடு அவசியம். திருப்பதி ஏழுமலையானை சென்று வணங்கி வரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+