ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023: பிரியும் கூட்டணி.. செவ்வாய் இடமாற்றம்.. பணமழையில் நனைவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கூட்டணி பிரிகிறது.. சூரியன்,புதன் புது கூட்டணி சிம்ம ராசியில் உருவாகிறது. சில கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் உள்ளது. நவகிரகங்களின் பயணம், வக்ர நிலை கூட்டணி, பார்வைகளைப் பொறுத்து மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம்,கேட்டை வரையிலான நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் பெயர்ச்சி: ஆகஸ்ட் மாதத்தில் மேஷ ராசியில் குரு, ராகு, கடகத்தில் சூரியன், சிம்ம ராசியில் சுக்கிரன், புதன், செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் பயணம் உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன் செவ்வாய் கூட்டணி பிரிகிறது. சுக்கிரன் வக்ரமடைந்து பின்னோக்கி கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி கன்னி ராசிக்கு செல்கிறார். சனி பகவானும் வக்ர நிலையிலேயே பயணம் செய்கிறார்.

August Month rasi palan 2023 : August matha Rasi Palan prediction for 9 stars Magam To Kettai natchathiram

மகம்: ஜெகத்தை ஆளப்பிறந்த மகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு ஆகஸ்ட் மாதம் அற்புத பலன்களைத் தரப்போகிறது. எதிர்பாராத வகையில் பணம் குவியும். அதே நேரத்தில் யாரை நம்பியும் பணத்தை ஒப்படைக்க வேண்டாம். ஏமாற்றுபவர்களிடம் கவனம் தேவை. சந்திராஷ்டம நாட்களில் அதீத கவனம் தேவை. யாருக்கும் பணத்தை கடனாகக் கொடுக்க வேண்டாம்.

பூரம்: சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட பூரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு அற்புதமாக கால கட்டம். நட்சத்திர அதிபதி வக்ரநிலையில் பயணம் செய்தாலும் குருவின் பார்வை கிடைப்பது யோகம். முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாலும்.

உத்திரம்: சூரியனை அதிபதியாகக் கொண்ட உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு ஆகஸ்ட் மாதம் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. அலுவலகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாலும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சந்திராஷ்டம நாட்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

ஹஸ்தம்: சந்திரனை அதிபதியாகக் கொண்ட ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்கும். சண்டை சச்சரவுகளால் வீடும், அலுவலகமும் போர்க்களமாகும் கவனம் தேவை. வேலைப்பளு கூடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர சண்டை சச்சரவுகள் நீங்கும்.

சித்திரை: செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அற்புதமான யோகம் கைகூடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சண்டை சச்சரவுகள் நீங்கும். நெருக்கம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் கைகூம். வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பவர்களின் முயற்சிகள் கைகூடி வரும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். சந்திராஷ்டம நாட்களில் மவுன விரதம் இருப்பது நல்லது.

சுவாதி: ராகு பகவானை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாதீர்கள். வேலையில் கவனத்தோடும் நிதானத்தோடும் இருப்பது நல்லது.

August Month rasi palan 2023 : August matha Rasi Palan prediction for 9 stars Magam To Kettai natchathiram

விசாகம்: குரு பகவானை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு ஆகஸ்ட் மாதம் அற்புதமாக மாதமாக அமைந்துள்ளது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சந்திராஷ்டம நாட்களில் பெரிய அளவில் தொழில் முதலீடுகளைத் தவிர்க்கவும். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

அனுஷம்: வேலை, தொழில் செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புரமோசனுடன் கூட இடமாற்றம் கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். எடுத்த காரியங்கள் வெற்றியுடன் கைகூடி வரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். முக்கியமான முடிவுகளை சந்திராஷ்டம நாட்களில் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

கேட்டை: கோட்டை கட்டி ஆளப்போகும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் கோடி கோடியாக பண வருமானம் வரப்போகிறது. தொழில் வியாராத்தில் எதிர்பாராத லாபம் வரும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
செவ்வாய்கிழமைகளில் முருகனை வணங்க வெற்றிகள் தேடி வரும். சந்திராஷ்டம நாட்களில் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+