தங்கம் விலை சீக்கிரம் குறையுமாம் - இந்த நாளில் நகை வாங்குங்க வீட்டிலேயே தங்கும்

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டிலேயே அதிகபட்ச அளவாக கிராம் 4000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்க நகை வாங்க வேண்டும் என்று எல்லோருமே ஆசைப்படுவார்கள். திருமணம், கோவில் திருவிழாக்களில் தங்க நகை அணிந்து அழகு பார்ப்பதை அனைத்து பெண்களுமே விரும்புவார்கள். தங்கத்தின் மீதான ஆசையும் மோகமும் நாளுக்கு நாள் அதிகரிப்பதனால்தான் தினம் ஒரு நகைகக்கடைகள் நாடு முழுவதும் திறக்கப்படுகின்றன. தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டிலேயே அதிக அளவாக ஒரு கிராம் 4000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கம் அதிர்ஷ்டத்தின் அடையாளம் எந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கும் என்று பார்க்கலாம்.

இன்றைக்கு தங்கம் வாங்க வைப்பதற்கு பல விளம்பரங்கள் வந்தாலும், அதை அடகு வைக்கவும், விற்கவும் எத்தனையோ விளம்பரங்கள் வருகின்றன. தங்கம் வாங்கினால் வீட்டில் தங்க வேண்டும். எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லது என்று பார்க்கலாம்.

தங்கம் அழகை விட உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. காதில், மூக்கில், கழுத்தில், கைகளில் அணியும் தங்க நகைகள் நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது என்கின்றனர் அக்குப்பஞ்சர் மருத்துவர்கள். நோயின்றி வாழவும் அதிக செல்வம் வேண்டுமென்று விரும்பினால் அவர்கள் மோதிர விரலில் மோதிரம் அணிய வேண்டியது அவசியம். செல்வத்திற்கும், பணப்புழக்கத்திற்கும் மோதிர விரல்தான் பொறுப்பாகும்.

தங்கம் வாங்க ஆர்வம் ஏன்

தங்கம் வாங்க ஆர்வம் ஏன்

தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போது தொடங்கியதாக கூறப்படுகிறது. பணக்காரர்களுக்கு தங்கம் ஆடம்பர பொருளாக இருந்தாலும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு தங்கம் சிறந்த முதலீடாக திகழ்கிறது. தங்கத்தை நினைத்த நேரத்தில் அடகு வைத்து பணமாக்கிவிட முடியும் எனவேதான் தங்கம் வாங்க பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்க நகைகள் அணிவதால் அந்தஸ்தும் அழகும் அதிகரிப்பதோடு மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

தங்கம் நிரந்தமாக யாரிடம் தங்கும்

தங்கம் நிரந்தமாக யாரிடம் தங்கும்

கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து தங்கம் வாங்கினாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்கத்தை அடமானம் வைக்க நேரிடுகிறது. தங்கத்தை சிலர் விற்பனையும் செய்கின்றனர். தங்கம் வாங்குவதற்கும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் லக்னத்திலும் 4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருக்க வேண்டும். அதே போல 1,5,9 ஆகிய திரிகோண வீடுகளிலும் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவர்களின் வீடுகளில் தங்கம் நிரந்தரமாக இருக்கும். மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடாது.

நகை வாங்கும் யோகம்

நகை வாங்கும் யோகம்

ஜாதகத்தில் குரு கிரகம் புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் சாரம் பெற்று இருந்தாலும் அடிக்கடி தங்கம் வாங்கும் யோகம் அந்த ஜாதகருக்கு உண்டு என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கு 5ஆம் வீட்டில் உள்ள கிரகம் லக்னத்திற்கு 2ஆம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2ஆம் வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் தங்கம் அதிகம் வாங்குபவர்கவும், அந்த தங்கத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் எனவும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

யோகமான நாள்

யோகமான நாள்

இன்றைக்கு தங்கத்தை திரி புஷ்கர யோகங்கள் அமையும் நாட்களில் வாங்கினால் அடகு கடைக்கு போகாமல் தங்கும். திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம்,கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள் திதிகள் நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும்.

தங்க நகை நட்சத்திரம்

தங்க நகை நட்சத்திரம்

சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,ஹஸ்தம், அசுவினி,பூசம், அபிஜித்,ரோகிணி,உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி. ஞாயிறு செவ்வாய் கிழமைகளில் மேஷம் விருச்சிகம் சிம்மம் லக்கினங்களில் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் மிருகசிரீடம் ரேவதி சித்திரை அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் வாங்க அதிர்ஷ்டம் தரும். ஒரு நபரின் ஜாதகத்தில் பாப கிரகமான ராகு, சுபகிரகமான சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் நட்பு பெற்ற வீட்டில் ராகு, சுக்கிரன் இணைந்து இருந்தாலோ அந்த ஜாதகருக்கு கூடுதல் வருமானம் மூலம் செல்வம், நகை சேமிப்பு பெருகும்.

இந்த நாட்களில் விற்காதீங்க

இந்த நாட்களில் விற்காதீங்க

சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,மிருகசிரீடம், ரேவதி, சித்திரை,அனுஷம்,ஹஸ்தம், அசுவினி,பூசம்,அபிஜித் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திங்கள் வெள்ளி வியாழன் புதன் கிழமைகளில் சுப லக்கினங்களில் வாங்க நன்மை உண்டாகும். ஒருவேளை முதலீட்டிற்காக தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.

தங்கம் எப்போது விலை குறையும்

தங்கம் எப்போது விலை குறையும்

தங்கம் விலை விகாரி ஆண்டின் தொடக்கத்தில் விலை அதிகமாக இருந்தது. படிப்படியாக குறைந்தது. தடுமாற்றத்துடன் இருந்தது. மாசி மாதத்தில் இந்த வருடத்திலேயே அதிகபட்ச விலை உயர்வை எட்டியது. தங்கம் விலை ஒரு கிராம் 4000 ரூபாயை எட்டியிருந்தாலும் இனி படிப்படியாக குறையும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. விலை குறைந்து பங்குனி மாத இறுதியில் விலை குறையும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளது. விலை குறையும் போது நல்ல நாள் பார்த்து தங்கத்தில் முதலீடு செய்யுங்க மக்களே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+