உடலுக்கு சுறுசுறுப்பு தரும் மாம்பழம்.... யாருக்கு அதிகம் பிடிக்கும் தெரியுமா?
குரு சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவார்கள் என ஜோதிட ஆய்வு தெரிவிக்கிறது.
சென்னை: முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இது மாம்பழ சீசன் காலம் என்பதால் எங்கும் கொட்டி கிடக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் குரு சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவார்கள் என ஜோதிட ஆய்வு தெரிவிக்கிறது.
விடுமுறை முடிந்து பள்ளிகள் வெகுவிரைவில் திறக்கப்போகிறார்கள். விடுமுறைகாலத்தில் ஆடி பாடி ஒடி விளையாடி களைப்படைந்த உங்கள் குழந்தைகள் பள்ளி திறந்தவுடன் ஆரோக்யத்துடனும் சுறுசுறுப்புடனும் மிகுந்த புத்திசாலியாகவும் திகழ வேண்டுமா?
குழந்தைகளோடு ஊர் ஊராய் சுற்றியலைந்து சோர்வுடன் இருக்கும் தாய்மார்கள் சுறுசுறுப்புடன் உற்சாகமடைய வேண்டுமா?
குழந்தைகளோடும் மனைவியோடும் பல இடங்களுக்கு அலைந்து திரிந்துவிட்டு கையில் இருந்த காசையெல்லாம் செலவழித்துவிட்டு உடலாலும் மனதாலும் சோர்வுடன் இருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் சாப்பிட வேண்டிய மருந்து மேங்கிஃபெரா இண்டிகாதான் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

சுவையான மாம்பழம்
அப்படி என்ன பழங்க அது? என்று கேட்கிறீர்களா? அட நான் ஒரு "மாங்கா" மடையங்க. அந்த பழத்தை நம்ம ஊர்ல மாம்பழம்ன்னு சொல்றாங்க. அதை சொல்ல மறந்திட்டேன் பாருங்க! இதன் பழத்தின் சுவையில் மயங்காதவர்களே இருக்கமுடியாது எனலாம். இந்த பழத்திற்க்காக சில புகழ்பெற்ற குடும்பங்களில் சகோதர சன்டையே நடத்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டம் கிடைக்கும்
பதினோரு இலைகளை தோரணமாக கட்ட வாஸ்து தோஷம் நீங்கும் என்றும் வீட்டின் முன் இந்தமரம் இருந்தால் வீட்டில் அதிர்ஷ்டம் கொழிக்கும் என்றும் பெங்சுயி எனும் சீன வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்
ஒரு கப் அதாவது, 225 கிராம் மாம்பழத்தில், 76 சதவீதம் வைட்டமின் சி (நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது) 25 சதவீதம் வைட்டமின் ஏ (கண்களுக்கு பலன் தரும்) 11 சதவீதம் வைட்டமின் பி6 மற்றும் பிற பி வைட்டமின்கள் (மூளையில் சுரக்கும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தும்; இதய நோய்களிலிருந்து பாதுகாப்புத் தரும்.)

மருத்துவ குணம்
கிழக்காசியாவிலும் இந்தியாவிலும் அதிகம் காணப்படும் இது மருத்துவ குணம் நிறைந்த மரவகையாகும்.மா மரத்தில் உள்ள கொழுந்து இலையை மென்று பல்தேய்க்க பற்களில் உள்ள மஞசள் கறை நீங்குவதோடு பற்கூச்ச நோயும் நீங்குகிறது. கொழுந்து இலையை நீரில் இட்டு கொதிக்கவைத்து அந்த கஷாயத்தை அருந்தி வர நீரிழிவு நோய் நீங்குகிறது.

பிஞ்சு மாங்காய்
மாம்பிஞ்சுகளை காம்புடன் கூடியதாக பறித்து சிறிய காம்புடன் நறுக்கி கடுகு மிளகாய் விழுது உப்பு விளக்கெண்ணையுடன் சேர்த்து ஊறவைத்த ஊறுகாயின் சுவையும் வாசமும் "தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ" என பாடவைக்கும்.

மாங்காய்
மாங்காயாக கன்னிப்பெண்கள் அதிகமாக உண்டால் மணம் பதறுவார்கள் தாய்மார்கள். ஆனால் கல்யாணமான இளம் பெண்கள் உண்டால் "என்ன! விஷேஷமா?" என கண் சிமிட்டி குறும்பாக கேட்பார்கள்.மாங்காயை நன்றாக நறுக்கி உப்பு மிளகாயுடன் ஊறுகாய் போட்டுவிட்டால் தயிர்சாதம் பிடிக்காதவர்கள் கூட 2 கை சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள்.

ஆயுர்வேத மருத்துவம்
காய்ந்த கொட்டைக்குள் இருக்கும் பருப்பு வயிர்கடுப்பு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த மரத்தின் பிசின் கால் பித்த வெடிப்புக்கு மிகச்சிறந்த மருந்து என்கிறது ஆயுர்வேதம்

மாம்பழமும் ஜோதிடமும்
•மாம்பழத்தின் காரக கிரகம் குருதான். என்றாலும் அதன் சுவை மற்றும் மருத்துவ பயன்களை பொருத்து சூரியன், சுக்கிரன், சனி காரகர்கள் ஆகின்றனர்.
•இனிப்பான பழங்களுக்கும் மஞ்சள் தன்மையாலும் குரு காரகர் ஆகின்றார். மேலும் இதில் பி-6 எனும் வைட்டமினும் பி-12எனும் ரிபோஃப்ளோவின் எனும் வைட்டமின் அதிகமிருக்கிறது. இந்த இரண்டு வைட்டமின்களுக்கும் காரகர் புத்திரகாரகனான குருபகவான் ஆவார். வைட்டமின் பி-6 கருவளர்சிக்கு இன்றியமையாதது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. மாம்பழம் ஒரு உஷ்னம் நிறைந்த பழம் என்பதாலும் உஷ்ன கிரகமான குருவின் காரகம் பொருத்தமானதே.
•மாம்பழத்தில் 76% வைட்டமின் சி இருப்பதாக அறிவியல் கூறுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும் சுறுசுறுப்பும் அளிக்கவல்ல வைட்டமின் சியின் காரகர் சனைஸ்வரபகவான் என்கிறது மருத்துவ ஜோதிடம். உடல் கட்டு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் காரகர் சனி என்பது குறிப்பிடத்தக்கது. மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.
•மாம்பழத்தில் கண்பார்வைக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் மிகுந்து இருக்கிறது. விட்டமின் ஏ மற்றும் கண்பார்வையின் காரக கிரகத் சூரியபகவான் ஆவார்.
தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
•மாம்பழத்தில் தாமிரச்சத்து எனும் காப்பர் மிகுந்துள்ளது. காப்பரின் காரகர் சுக்கிரபகவான் என்கிறது மருத்துவ ஜோதிடம். தாமிரச்சத்து ஆண்மை விருத்திக்கும் சிறுநீரக கோளாருகளுக்கும் காம ஊக்கியாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
•மாம்பழத்தில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஈ இருப்பதால், அது செக்ஸ் உணர்வை அதிகரிப்பதில் வல்லமை வாய்ந்துள்ளது. இது ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும். அதனால் சில நேரங்களில் இதனை காதல் பழம் என்றும் அழைக்கின்றனர்.ஆண்மைக்குறைவு உள்ளவர்களும், மலட்டுத் தன்மை உள்ளவர்களும் தொடர்ந்து மாம்பழம் சாப்பிட அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
•அதிக வலியுடன் அதிக உதிரப்போக்குடன் மாதவிலக்கு சீராக இல்லாதவர்கள் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.

சரி! இந்த மாம்பழத்தை யார் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்?
•குரு சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவார்கள் என ஜோதிட ஆய்வு தெரிவிக்கிறது.
•குருவின் வீட்டில் சனியின் உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் சுக்கிரன் நின்றால் சுவைமிகுந்த மாம்பழங்களை தேடித்தேடி உண்பார்கள்.
•உஷ்ண ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் இந்த குரு சுக்ர சனி ஏற்பட்டால் மாம்பழத்தையே உணவாக கொள்வார்கள்.
•காலபுருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபத்தில் அல்லது ஜாதக இரண்டாம் பாவத்திலோ குரு சுக்கிர சனி சேர்க்கை பெற்றவர்கள் மாம்பழத்தை அதிகம் விரும்பி உண்பார்கள்.
•இந்தியாவை பொருத்தவரை வைகாசியில் தான் மாம்பழத்தின் சுவை அதிகம் எனப்படுகிறது. இந்த மாததில் சுவை மிகுந்த மாம்பழத்தை அதிகம் உண்டு மகிழ்வோம் வாருங்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications