காதலால் தவிக்கும் ராசிக்காரங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப லக்கிதான்

காதலே காதலே காதலால் தவிக்கிறேன் என்று பாடுகிறீர்களா? எந்த ராசிக்காரர்களுக்க காதல் ஒத்துவரும். காதலில் உருகுபவர்கள் யார் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் இல்லாத ஜீவன் இல்லை. சிலருக்கு காதல் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும். சிலரோ காதலை ஜஸ்ட் லைக் தட் ஆக நினைப்பார்கள். காதலோடு கசிந்து உருகுபவர்கள். சிலருக்கு மட்டுமே காதல் ஒத்து வரும். சிலருக்கு காதல் எல்லாம் செட்டே ஆகாது. சமர்த்தாக வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணையோ பையனையோ பார்த்து திருமணம் செய்து கொள்வார்கள். எந்த ராசிக்காரர்கள் காதலில் கசிந்து உருகுவார்கள் யாருக்கு காதல் ஒத்து வரும் யாருடைய காதல் சக்சஸ் ஆகும் என்று பார்க்கலாம்.

காதல் கற்றுக்கொடுத்து வருவதில்லை. காதல் உணர்வுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதாக இருந்தால் தடைகளை தாண்டி வெற்றி பெறும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

காதலை பொழுது போக்காக நினைப்பவர்கள் மத்தியில் காதலை சுவாசிப்பவர்களும் நேசிப்பவர்களும் முக்கியம்தான். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் காதலில் ரொம்ப பெஸ்ட் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு காதல் ரத்தத்திலேயே இருக்கும். பல காதல்களை பல சமயங்களில் பார்த்திருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் ரிஷபம் ராசிக்காரர்கள். செவ்வாயும் சுக்கிரனும் அடுத்தடுத்த வீடுகளில் அமர்ந்திருப்பதே காதலுக்காகத்தான். இவர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். பிறர் மீது இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதாகவே இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் விரும்பினாலும் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இந்த ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழுந்தாலும் அது தோல்வியிலும் முடியலாம். மொத்தத்தில் கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவார்கள். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் எளிதில் கவர முடியும். இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்கள். துணையை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி

கன்னி

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் காதலையும், அன்பையும் நேசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்களுக்கு அன்பும் காதலும் சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசிக்காரர்களை மனதளவிலும்,மகர ராசிக்காரர்களை உடலளவிலும் கவரக் கூடியவர்கள். இவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளவர்கள். இவர்களுக்கு காதல் கை வந்த கலை. இவர்களுக்கு பொதுவாகவே காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.

விருட்சிகம்

விருட்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் மற்றவர்களை பார்க்க வேண்டும் என்பதை விட தன்னைப் பிறர் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு

தனுசு

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் காதலில் திறமைசாலியாக இருப்பார். இவர்கள் காதலில் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் காதல் வெற்றி அடையும். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. காதலை சுவாசம் போல நேசிப்பார்கள். சாப்பிடாமல் கூட இருப்பார்கள் ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களின் காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவார்கள். இந்த ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும்.

மீனம்

மீனம்

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்களிடம் காம இச்சை கொண்டவராக இருப்பார்கள். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்பு ஏற்படும். காதலுக்காக இவர்கள் எதையும் செய்வார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+