2020ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரங்களுக்கு பிசினஸ்ல லாபம் கொட்டப்போகுதாம்
மேஷ ராசிக்கு சனிபகவான் தொழில் கிரகம், லாப கிரகம். 2020ஆம் ஆண்டு மகரத்தில் சனி அமர்ந்து இருக்கும் காலத்தில் புதிய தொழிலை தொடங்க வைப்பார். தொழிலில் நல்ல லாபத்தை தருவார். சனி பகவான் மேஷத்திற்கு 12ஆம் வீட
சென்னை: 2020ஆம் ஆண்டில் நமக்கு தொழிலில் லாபம் வருமா? வேலையை விட்டு விட்டு புது பிசினஸ் ஆரம்பிகலாமா என்று மேஷம் ராசிக்காரர்கள் யோசித்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு 2020ஆம் ஆண்டு தொட்டது துலங்கும் ஆண்டாக அமையப்போகிறது. நீங்க செய்யும் பிசினஸ் உங்களுக்கு நல்ல லாபத்தை தரப்போகிறது. பொன்னான ஆண்டாகவும் தொழிலில் லாபங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது.
எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ், கடல் கடந்து சென்று பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதங்களை தரப்போகிறது.
2020ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு கேது சஞ்சாரத்தை வைத்து பார்த்தால் 9ஆம் வீட்டில் உள்ள குரு அமர்ந்திருப்பது யோகம். சனி பகவான் பத்தாம் வீட்டில் சொந்த வீட்டில் அமர்கிறார். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும்.
ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பு அம்சம். உங்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல தொழில் அமையும். நீங்க தொடங்கும் தொழிலில் வெற்றிகரமானதாக லாபத்தை கொடுக்கக் கூடியதாக அமையும்.

குருவால் வெற்றி
குரு பகவான்1,3, 5ஆம் வீட்டினை பார்க்கிறார். ரொம்ப புத்துணர்ச்சியோட இருப்பீங்க. அற்புதமாக இருக்கும். கீர்த்தி, முயற்சி செய்வீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்க ஒரு அடி எடுத்து வைத்தால் உங்களை நோக்கி வெற்றிகள் நான்கடி தேடி வரும். செவ்வாயின் வீடான மேஷத்தை குரு பார்க்கிறார். மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது. குரு பகவான் வருடம் முழுவதும் உங்களுக்கு நன்மை செய்வார்.

சனி தரும் யோகம்
சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஆண்டில் தொடக்கத்தில் ஆரம்பிக்கலாம். எதையும் சமாளித்து தொழிலில் முன்னேற்றம் அடைய சாதகமான நேரம் இது. சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. தன்னம்பிக்கை பிறந்து, தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சொந்த வீடு, வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

ஆரோக்கியமான ஆண்டு
தொழில் கிரகமான சனிபகவானால் நல்ல தொழில் அமையும். வியாபாரம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். தொட்டது துலங்கும் ஆண்டு. நல்ல வேலை அதிக சம்பளத்துடன் கிடைக்கும். ஆரோக்கியமாக இருப்பீங்க. மன நிம்மதியை தரும் ஆண்டாக அமைகிறது. தடைப்பட்ட காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான முன்னேற்றத்தை தரும். காரணம் மேஷம் ராசியை குரு பார்வையிடுவது சிறப்பு. தேவையில்லாமல் பட்ட கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

சனி பகவான் சாதகம்
2020ஆம் ஆண்டில் சனிபகவான் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகளை உருவாக்கித்தருவார். காரணம் அவர்தான் உங்க ராசிக்கு பத்து மற்றும் பதினொன்றாம் வீட்டின் அதிபதி. அவர் திடீரென்று கும்பம் ராசிக்கு அதிசாரமாக போய் விட்டு பின்னர் வக்ரகதியில் பின்னோக்கி நகர்வார். ஜூலை மாதத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் எதையும் அந்த மாதங்களில் செய்யாமல் இருப்பது நல்லது. உங்க நிதி நிலைமை புத்தாண்டில் ரொம்ப அற்புதமாக இருக்கும் அதே நேரம் கிரகங்களின் பெயர்ச்சி பார்த்து முதலீடுகள் செய்வது நல்லது இல்லாவிட்டால் அது சின்ன சறுக்கலை ஏற்படுத்திவிடும்.

ஏற்றுமதி இறக்குமதி
சனிபகவான் துலாம் ராசியை சனி பார்க்கிறார். பங்குதாரர்களால் லாபம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்திற்கு தொழில் ஸ்தானத்தை சனி பார்க்கிறார். சனி உங்க ஜாதகத்தில் வலுவாக இருந்தால் உங்களுக்கு இந்த ஆண்டு அற்புதமான பலன்களை தொழில் மூலம் தரப்போகிறார் சனிபகவான். சனி பெயர்ச்சி, சனி பார்வைகளால் உங்களுக்கு லாபம் தரப்போகிற ஆண்டாக அமையப்போகிறது. ஏற்றுமதி, இறக்குமதி மூலமும் வருமானம் கிடைக்கும்.

தொழிலதிபர் ஆகும் யோகம்
சனி பத்தாம் வீட்டில் அமைந்து தனது பார்வையால் முக்கியமான இடங்களை பார்ப்பதால் பெண்களுக்கும் பிசினஸ் செய்யும் யோகம் வரும் பெண் தொழில் முனைவோர்களை சனிபகவான் உருவாக்குவார். ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்கும் எண்ணத்தை ஏற்படுத்துவார். மொத்தத்தில் 2020ஆம் ஆண்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில் தொடங்கி லாபம் கிடைக்கப் போகும் ஆண்டாக அமைந்துள்ளது.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications