Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா

சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். டிசம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜென்ம ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம். நல்ல காரியம் செய்யும் போது ராகு காலம், எமகண்டம் இருக்கிறதா என்று பார்ப்பது போது நமது ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். சந்திராஷ்டமம் நாளில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும் அப்படி செய்யும் காரியங்களில் தடை உண்டாகும் என்றும் சொல்வார்கள்.

சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். டிசம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம்.

இந்த நாட்களை உங்க டைரியில குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

 மேஷம்

மேஷம்

12.12.2020 இரவு 10.41 மணி முதல் 14.12.2020 இரவு 11.26 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வாகனங்களில் போகும் போது அதி வேகத்தை தவிர்க்கவும். மிளகு பனங்கல்கண்டு பாலில் கலந்து சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம்.

ரிஷபம்

ரிஷபம்

14.12.2020 இரவு 11.26 மணி முதல் 17.12.2020 நள்ளிரவு 01.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. வாகனங்களில் போகும் போது அதி வேகத்தை தவிர்க்கவும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடரலாம். பால் கோவா, பாலில் செய்த இனிப்புகள் சாப்பிடலாம்.

மிதுனம்

மிதுனம்

17.12.2020 நள்ளிரவு 01.47 மணி முதல் 19.12.2020 காலை 07.16 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம், வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். நாட்டுச்சர்க்கரை கலந்த பால் சாப்பிட்டு விட்டு பணியை தொடரலாம்.

கடகம்

கடகம்

19.12.2020 காலை 07.16 மணி முதல் 21.12.2020 மாலை 04.29 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம், வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். நாட்டுச்சர்க்கரை கலந்த பால் சாப்பிட்டு விட்டு பணியை தொடரலாம். பால் பனங்கல்கண்டு சேர்த்து பொங்கல் செய்து சாப்பிடலாம்.

சிம்மம்

சிம்மம்

21.12.2020 மாலை 04.29 மணி முதல் 24.12.2020 அதிகாலை 04.32 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம், பாலில் தேன் கலந்து சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடருங்கள். வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம்.

கன்னி

கன்னி

24.12.2020 அதிகாலை 04.32 மணி முதல் 26.12.2020 மாலை 5.18 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் கவனம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம், பால்கோவா சாப்பிட்டு விட்டு கலந்து சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடருங்கள். வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம்.

துலாம்

துலாம்

26.12.2020 மாலை 5.18 மணி முதல் 29.12.2020 அதிகாலை 4.39 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பொறுமை அவசியம் முதலீடுகள் தவிர்க்கவும். பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் பாலில் செய்த இனிப்பு சாப்பிட்டு விட்டு பயணம் தொடரவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

29.12.2020 அதிகாலை 4.39 மணி முதல் 31.12.2020 பிற்பகல் 1.38 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. பயணங்கள் தவிர்க்கவும் உணவு விசயத்திலும் பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களிலும் நிதானம் பொறுமை அவசியம். வெல்லம் சேர்த்த பால் பொருட்கள் சாப்பிடவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

தனுசு

தனுசு

04.12.2020 காலை 7.22 மணி முதல் 06.12.2020 பிற்பகல் 02.46 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. 31.12.2020 பிற்பகல் 1.36 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. பாலில் செய்த இனிப்புகள் செய்து சாப்பிடவும்.

மகரம்

மகரம்

06.12.2020 பிற்பகல் 02.46 மணி முதல் 08.12.2020 இரவு 07.31 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. நாட்டுச்சர்க்கரை சேர்த்த பால் சேர்த்து சாப்பிடவும். பயணங்களில் நிதானம் அவசியம். மவுன விரதம் இருக்கவும்.

கும்பம்

கும்பம்

08.12.2020 இரவு 07.31 மணி முதல் 10.12.2020 இரவு 09.52 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. பாலில் தேன் கலந்து சாப்பிடவும். பேச்சில் நிதானம் தேவை. பாலில் செய்த இனிப்பு பொருட்கள் சாப்பிடவும். பயணங்களில் கவனம் தேவை.

மீனம்

மீனம்

10.12.2020 இரவு 09.52 மணி முதல் 12.12.2020 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் செய்யும் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை. பச்சரிசியில் சர்க்கரை பொங்கல் கலந்து சாப்பிடவும். முதலீடுகள் தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+