பெண்களே... உங்களுக்கு காதல் திருமணமா? செவ்வாய் சொல்லும் சேதி!
பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வைத்து அவருக்கு காதல் திருமணம் நடக்குமா என்பதை அறிந்து கொள்ளலாம்.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: ஜோதிடத்தில் கணவனை பற்றி கூறும் கிரகம் செவ்வாயாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வைத்து அந்த பெண்ணுக்கு வரப்போகும் கணவனின் தன்மையை கூறலாம் என்கிறது ஜோதிடம்.
ஒரு பெண்ணிற்கு கணவர் என்பவர் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை உணர்த்தும் கதையை படித்து விட்டு ஜாதகத்திற்கு போகலாம்.
"அது ஒரு சைக்காலஜி வகுப்பு...
ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.

அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்...
அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்..
அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...
இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....
இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்.
வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்.
மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர். அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்.
ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது...
அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்.....
அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறார் என்பதை உணருங்கள்..."
ஜோதிடத்தில் கணவன்:
ஜோதிடத்தில் கணவனை பற்றி கூறும் கிரகம் செவ்வாயாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வைத்து அந்த பெண்ணுக்கு வரப்போகும் கணவனின் தன்மையை கூறலாம் என்கிறது ஜோதிடம்.
காலபுருஷனுக்கு ஏழாமிடம் மனைவியை குறிக்குமிடமாகும். எனவே காலபுருஷனுக்கு முதல் வீடாகிய மேஷ ராசியின் அதிபதியை கணவனாகவும் துலா ராசியின் அதிபதியை மனைவியாகவும் குறிப்பிடுகிறது ஜோதிட சாஸ்திரம்.
எந்த பெண்ணுக்கு எத்தகைய கணவன் அமைவார்
1. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் லக்னத்தில் இருந்தால் அந்த பெண் தன் கணவனை மிகவும் நேசிப்பாள். கணவன் ஒரு சிறந்த ஆண்மகனாக விளங்குவான். திருமணம் நல்லமுறையில் பெற்றாரால் பார்த்த மணமகனுக்கு நடத்திவைக்கப்படும். சொந்தமில்லை என்றாலும் அன்னியோன்னியம் மிகுந்திருக்கும்.
2. பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் இரண்டாம் பாவத்தில் நின்றால் குடும்ப வழக்கத்திற்க்கு மாறான காதல் திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நிலை அன்பானதாக இருந்தாலும் நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. கணவன் உறவினராக இருக்ககூடும்.
3. ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு மூன்றாம் பாவத்தில் நின்றால் காலதாமதமான திருமணம் நடைபெரும். உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் வழியில் கணவர் அமைவார். சனியும் சேர்க்கை பெற்றால் பெண்ணை உறவினர்கள் பழிப்பார்கள்.
4. பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் அல்லது ஏழாமதிபதி லக்னத்திற்கு நான்கில் நின்றால் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு அமையும். சனி ராகுவுடன் சேர்க்கை பெற்றால் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரை கணவனாக அடைந்து மகிழ்ச்சியற்ற வாழ்க்கை அமையும்.
5.ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் நின்றால் சிறந்த குடும்பத்திலிருந்து நன்கு கற்ற ஆடவனை பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்க மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும்.
6. பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஆறாம் பாவத்தில் நின்றால் அந்த பெண்ணே தேர்ந்தெடுத்த வரனை கணவனாக அடைவாள். கணவனை அந்த பெண் மிகவும் நேசிப்பாள். ஆனாலும் கணவனால் பல துன்பங்களை அடைந்து மகிழ்ச்சியற்ற நிலை ஏற்படும்.
7. பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஏழாமிடத்தில் இருப்பது காதல் திருமணத்தை குறிக்கும் அமைப்பாகும். குரு அல்லது புதன் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டால் பெற்றோரால் அங்கிகரிக்கப்பட்டு மகிழ்சியான திருமணம் அமையும். கணவன் அன்பானவராக அமைவார். குரு/புதன் சேர்க்கை பெறவில்லை என்றால் குறைந்தவயதிலேயே திருமணம் நடைபெற்று கணவனுடன் மகிழ்சியான வாழ்க்கை ஏற்படும்.
8. ஒரு பெண்ணின் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் எட்டாம் பாவத்தில் நின்றால் அந்த பெண்ணே தேர்ந்தெடுத்த மகிழ்சியற்ற திருமண வாழ்க்கை அமையும். கால தாமதமான திருமணம் நடைபெருவதோடு முறையற்ற வகையில் கணவனை அடைந்து மகிழ்ச்சியற்ற வாழ்க்கை ஏற்படும். கணவன் குடிகாரனாக பல தீய பழக்கங்களோடு அமைவதெல்லாம் இந்த அமைப்பில்தான் ஏற்படும். அவசர அவசரமாக திருமணம் செய்து நிதானமாக துக்கம் அனுபவிக்கும் நிலையாகும்.
9. ஒரு பெண்ணின் ஜாதகத்தின் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பதில் இருப்பது உன்னதமான அமைப்பாகும். சிறந்த கணவனை அடைந்து மகிழ்சியான வாழ்க்கை ஏற்படும். திருமணத்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.
10. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பத்தாமிடத்தில் நின்றால் உடன் பணிபுரியும் ஆண்மகனை அந்த பெண்ணே தேர்ந்தெடுத்து திருமணம் செய்து மகிழ்சியான வாழ்வு அமையும். கணவன் நல்ல வசதி படைத்தவனாக இருப்பார்.
11. பெண்ணின் ஜாதகத்தின் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பதினோரமிடத்தில் இருக்க குடும்ப உறவினரில் கணவன் அமையப்பெற்று பொன் பொருள் மற்றும் பல லாப அமைப்புகளை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
12. ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பன்னிரெண்டில் நிற்க தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட முறையற்ற சமுதாயத்திற்கு புறம்பான திருமண வாழ்க்கை அமையும். குருபார்வை பெற்றால் பெற்றோர் ஆதரவு உண்டு. என்றாலும் கணவனால் படுக்கை சுகத்திறக்காக படாத பாடு படுத்தப்பட்டு மகிழ்ச்சியற்ற நிலையில் பிரிந்து வாழவோ அல்லது கணவனை இழந்து வாழவோ நேரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அட எங்க கிளம்பிட்டிங்க?
உங்க ஜாதகத்தில் ஏழாமதிபதியும் செவ்வாயும் எங்க இருக்குன்னு பார்க்கதானே? தன் கணவரை பற்றி தெரிந்துக்கொள்ள எந்த பெண்ணுக்கு தான் ஆர்வம் இருக்காது? வாழ்த்துக்கள்!!












Click it and Unblock the Notifications