Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாய் பெயர்ச்சி: 2024ல் குரு பார்வை தரும் கோடீஸ்வர யோகம்.. பேச்சில் கவனம் மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெருப்பு ராசியான தனுசு ராசியில் நெருப்பு கிரகங்களான சூரியனும் செவ்வாயும் கூட்டணி சேர்ந்து 29ஆம் தேதி முதல் பயணம் செய்யப்போகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணிக்கு குருவின் பார்வையும் கிடைப்பதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. 2024ஆம் ஆண்டு முதல் யார் வீட்டிற்கு அதிர்ஷ்ட தேவதை வரப்போகிறார் என்று பார்க்கலாம்.

துலாம்: முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். தைரியம் கூடும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைத்தும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வந்து வீட்டுக்கதவை தட்டும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். பத்தாம் வீட்டின் மீது செவ்வாயின் பார்வை விழுவதால் புதிய வேலை கிடைக்கும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய வந்து சேரும். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள்.

Chevvai Peyarchi palan 2023: Mars and Sun conjunction in Dhanusu prediction for 6 zodiac signs

விருச்சிகம்: செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் சூரியனுடன் பயணம் செய்கிறார். உஷ்ண கிரகங்கள் நெருப்பு ராசியில் பயணம் செய்வதால் பேசும் பேச்சுக்களில் கவனமும் நிதானமும் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். யாரிடமும் பணம் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். உறவினர்களுடன் அன்போடும், பாசத்துடனும் பழகுங்கள். அதிக செலவுகளைப் பார்த்து அஞ்ச வேண்டாம் முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்து வழிபட நல்லது நடக்கும்.

தனுசு: விரைய ஸ்தான அதிபதி செவ்வாய் உங்கள் ராசிக்குள் சூரியனுடன் குடியேறுவதால் பேச்சில் உற்சாகம் பிறக்கும் கூடவே கோபமும் வரும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும்.உங்கள் கருத்துக்கு மதிப்பு மரியாதை கூடும். பழனி மலை முருகனை தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும். குரு பகவான் பார்வை உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது.

மகரம்: செவ்வாய் உங்கள் ராசியில் 12 வது வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் விரைய ஸ்தானத்தில் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் மூத்த சகோதரர்களால் ஆதாயமும் லாபமும் உண்டு. வருமானம் அதிகரிக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். எதையும் சட்டப்பூர்வமாக செய்யுங்கள். மருத்துவ செலவுகள் வரும். வெளிநாடு தொடர்புகள் மூலம் வருமானம் வரும். நீங்களும் வெளிநாடு செல்வதற்கான யோகம் கைகூடி வருகிறது. வீண் செலவுகள் ஏற்படும் கவனமாக இருக்கவும்.

கும்பம்: லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பேசும் பேச்சில் நிதானம் தேவை. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடக்கூடிய கால கட்டமாகும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து முருகனை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மீனம்: பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் திடீர் யோகம் கை கூடி வரும். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். செய்யும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையை தரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். செவ்வாயின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். பெண்கள் ஜாக்கிரதையாக இருங்கள். செவ்வாய்கிழமைகளில் முருகனை பயபக்தியோடு வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+