எந்த ராசிக்காரர்களுக்கு டென்சன்... சந்திராஷ்டமம் தெரியுமா? - இன்றைய பலன்கள்
சிம்ம ராசியில் இன்று சந்திரன் அமர்ந்துள்ளார். மகரம் ராசிக்கு இன்று சந்திராஷ்டம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் அமைதியாக இருப்பது நல்லது.
சென்னை: திங்கட்கிழமை இன்று சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மகரம் ராசிக்காரர்களுக்கு 20ஆம் தேதிவரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.
இன்றைய தினம் மிதுனத்தில் சூரியன், புதன் கடகத்தில் ராகு, சுக்கிரன் சிம்மத்தில் சந்திரன், துலாமில் குரு பகவான், தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை 18 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி? எந்த ராசிக்காரர்களுக்கு ரொமான்ஸ் அதிகமாக இருக்கும், யாருக்கு டென்சன் அதிகம் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் அமர்ந்துள்ளதால் வீடு, பூர்வீக நிலம் விற்பனை தொடர்பாக பேசலாம். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காதல் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். வாழ்க்கைத் துணை மூடு அவுட் ஆக இருந்தால் நீங்களும் மவுனம் காப்பது நல்லது. ராசியான நிறம் சிவப்பு, பச்சை ராசியான எண்கள். 1, 5.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. அலுவலகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்களை சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். இன்றைக்கு ரொமான்ஸ் உணர்வுகள் கை கொடுக்காது. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். ராசியான நிறம் வெள்ளை, ஆரஞ்சு ராசியான எண்கள் 2, 9.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் இருக்கிறார். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள்.பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இன்று சுமாரான நாள்தான் ராசியான நிறம் பச்சை, வெளிர் நீலம் ராசியான எண்கள் 3, 5.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பணவரவு அதிகரிக்கும். இரண்டு நாட்களாக மனதில் இருந்த கலக்கம் நீங்கும். இன்று எடுத்த காரியத்தை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி செய்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் காதல் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு சர்ப்ரைஸ் ஆக ஒரு விசயத்தை செய்வார். வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்தக்கூடிய ஒருவரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். மாணவர்கள் புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள் ராசியான எண்கள் 2, 6.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசியில் அமர்ந்துள்ளதால் சற்றே மனக்குழப்பமாக இருக்கும். இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உங்கள் காதல் துணை இன்று உங்களுக்கு அருமையான பரிசு ஒன்றை அளிப்பார். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். இன்று உங்கள் திருமண வாழ்வில் மிகவும் சாதகமான நாள். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. ராசியான நிறம் ஆரஞ்சு, வெள்ளை. ராசியான எண்கள் 1, 7.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு 12வது இடமான விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். காதல் செய்ய ஏற்றநாள். நீங்களும் உங்கள் காதல் துணையும் இணைந்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள்: 2, 6.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் இருக்கிறார். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். அலுவலக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது மனதில் டென்சன் இருக்கும். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 1,9.

விருச்சிகம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் நீடிப்பதால் அலுவலகத்தில் கவனமாக இருக்கவும். செய்யும் வேலையில் அக்கறை செலுத்துங்கள் இல்லாவிட்டால் மேலதிகாரிகளிடம் தேவையற்ற பிரச்சினை ஏற்படும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாள் இன்று என்பதால் காதலித்து மகிழுங்கள். திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும் நாள் இது. ராசியான நிறம் நீலம், சிவப்பு. ராசியான எண்கள் 3, 5.

தனுசு
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரவு இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு. ராசியான எண்கள் 2, 9.

மகரம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். 20-06 -2018 அன்று காலை 07.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். ராசியான நிறம் நீலம், இளஞ்சிவப்பு. ராசியான எண்கள் 2, 5.

கும்பம்
ராசிக்கு 7வது வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். உங்கள் ராசியை சந்திரன் சம சப்தமமாக பார்வையிடுவதால் உற்சாகம் ஊற்றெடுக்கும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். சிரிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த நாள். இனிமையான திருமண வாழ்வில் உற்சாகத்தினை உணர்வீர்கள். ராசியான மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள் 3, 9.

மீனம்
இன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். உங்கள் காதல் துணையின் பேச்சு உங்களை உணர்ச்சிவசப்படுத்தும். உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது பேசி விட வேண்டாம். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ராசியான நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள். ராசியான எண்கள் 1, 5.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications