மேஷ ராசிக்காரங்க இன்று யார் வம்புக்கு போக வேண்டாம் - ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை இன்று ராசிபலன்கள் எப்படி? யாருக்கு சந்திராஷ்டமம் என தெரிந்து கொள்வோம்.
Recommended Video

சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் என்பதால் கவனமாக இருக்கவும்.
இன்றைய தினம் மிதுனத்தில் சூரியன், கடகம் ராசியில் சுக்கிரன், புதன், ராகு இணைந்துள்ளனர். துலாம் ராசியில் குரு விருச்சிகத்தில் சந்திரன் நீசமடைந்துள்ளார். மகர ராசியில் செவ்வாய் உச்சமடைந்திருக்க கேது அமர்ந்துள்ளார். இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
இன்றைய ராசிபலனில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ராசி, எந்த நம்பர் ராசி என பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும். ராசியான நிறம் வெள்ளை, அடர் சிவப்பு, ராசியான எண்கள் 2, 6.

ரிஷபம்
ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் சம சப்தம பார்வையில் அமர்ந்துள்ளார். கணவன், மனைவியிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும்.இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை ராசியான எண்கள் 1, 5.

மிதுனம்
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்துள்ளதால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள்: 3, 5.

கடகம்
ராசியான 5 வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. இன்று திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். ராசியான நிறம் வெள்ளை, சிவப்பு ராசியான எண்கள் 6, 9.

சிம்மம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்தஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண்கள் 3, 9.

கன்னி
ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண்கள் 3, 9.

துலாம்
ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இன்று தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். ராசியன நிறம் நீலம், ஆரஞ்சு ராசியான எண்கள்6, 9.

விருச்சிகம்
ராசிக்குள் இன்று சந்திரன் அமர்ந்துள்ளதால் மனக்குழப்பம் ஏற்படும். இன்று உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும். ராசியான நிறம் ப்ளூ, பச்சை, ராசியான எண்கள் 2, 7.

தனுசு
ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். ராசியான நிறம் ஆரஞ்சு, வெள்ளை. ராசியான எண்கள் 5,7

மகரம்
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள். ராசியான எண்கள் 1, 3.

கும்பம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும். ராசியான நிறம் வெளிர் நீலம், வெள்ளை, ராசியான எண்கள் 4, 6

மீனம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 3, 5.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications