Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த நாள் யாருக்கு கவலைகள் தீரும் நாள் தெரியுமா? - பலனை படிங்க

Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு யாருக்கு நல்ல நாள், யாருக்கு வெற்றி கிடைக்கும் பாருங்க செக் பண்ணுங்க இன்றைய ராசி பலனை படிங்க

மேஷம்

மேஷம்

பணியாளர்களுக்கு இன்றைக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கக்கூடும். உங்கள் உயரதிகாரிகள் உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் நிலை ஏற்படலாம். கவனமாக இருங்கள். சூழ்நிலையை புரிந்துகொண்டு, பொறுமையை கையாண்டு கடினமாக உழைத்து வேலையை முடிக்கவேண்டியது அவசியமாகும். உங்கள் முன்கோபம் காரணமாக குடும்ப உறப்பினர்களுடன் சண்டை சச்சரவுகளை மேற்கொள்ள நேரிடும். எனவே முன்கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். நிநிநிலைமை சாதாரணமாக இருக்கும். எனவே தேவை அறிந்து செலவு செய்யவேண்டியது கட்டாயம். உங்கள் பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வருவதால் உங்கள் நிம்மதி கூடும். மாணவர்களுக்கு உகந்த நாள் இன்று. உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 25
சாதகமான நேரம் : முற்பகல் 10:10 முதல் இரவு 9:45 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்றைக்கு உங்கள் முகத்தில் நம்பிக்கை ரேகை பளிச்சிடும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி கூடும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான வழக்கு நடந்து வந்தால், அது இன்றைக்கு உங்களுக்கு சாதகமாக முடியக்கூடும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்த வாய்ப்பு உண்டாகும். உங்களின் குழப்பமான மனநிலை உங்களை சிக்கலில் மாட்டிவிடக்கூடும். இளம்ஜோடிகள் இன்றைய நாளை மிகவும் சந்தோஷமாக அனுபவிப்பார்கள். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இல்லையேல், உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். கவனம் தேவை. மொத்தத்தில் இன்றைக்கு முழு உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 12:05 முதல் இரவு 8:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இல்லையேல் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் திறமையை அதிகரிப்பதற்கு மன அழுத்தத்தை போக்கவேண்டியது கட்டாயம். வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவ, உங்களின் அதிகார மனப்பான்மையை தவிர்ப்பது அவசியம். இல்லாவிட்டால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பிரிவு ஏற்பட நேரிடும். உங்கள் போட்டி மனப்பான்மை நீங்கள் வெற்றி பெற வழிவகுக்கும். உங்கள் நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்றுவர திட்டமிடலாம். இன்றைக்கு நீங்கள் திட்டமிட்ட பயணத்தால் களைப்பு ஏற்பட்டாலும் கூட, அதனால் உங்கள் நிதி நிலைமை மேம்படும். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். வாழ்க்கை துணையின் எண்ணத்தை புரிந்துகொண்டு நடந்தால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் செழிப்பும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : பிற்பகல் 3:15 முதல் இரவு 10:45 மணிவரை

கடகம்

கடகம்

இன்றைக்கு பணியிடத்தில் வெற்றி வாய்ப்பு கூடும். பணியாளர்கள் தங்களின் உயரதிகாரிகளின் முழு ஆதரவை பெறக்கூடும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது அதிக அக்கறை கொள்வீர்கள். அதுபோல் இன்றைக்கு பொது வாழ்க்கையின் மீது உங்கள் கவனம் திரும்பும். சிலருக்கு நீங்கள் உதவும் சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தைப் பொருத்த வரையில், கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம். ரத்த அழுத்த நோயாளிகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவக்கூடும். மனைவியின் அன்பும் அரைவணைப்பும் உங்களை திக்குமுக்காட வைக்கும்.
காதல் விவகாரங்களில் நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 8:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்றைக்கு உங்கள் வீட்டில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, நிலைமை கைமீறிப்போகும் நிலைமை ஏற்படும். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவது உங்களுக்கு கடினமான செயலாக உருமாறும். உங்கள் பொருளாதார நிலைமை மேம்படும். பணியாளர்களுக்கு பணிச்சுமை காரணமாக வீட்டை விட்டு விலகி இருக்கவேண்டிய நிலைமை ஏற்படும். நீங்கள் உங்கள் தந்தையின் தொழிலை கவனித்துக்கொள்பவராக இருந்தால், அவருடைய ஆலோசனையை கேட்டு நடப்பது லாபத்தை அதிகரிக்கச் செய்யும். இன்று நீங்கள் காதல் வயப்பட நேரிடலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நலம். திட்டமிட்டு உங்கள் நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம்.
இல்லற வாழ்க்கை இனிமையாக கழியும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரனையாக நடந்து கொள்வீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : முற்பகல் 11:45 முதல் இரவு 9:45 மணிவரை

கன்னி

கன்னி

இன்றைய நாள் உங்கள் குடும்பத்தில் மந்தமான போக்கே நிலவும். உங்கள் பெற்றோர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஆதலால் வார்த்தைகளில் கவனம் தேவை. நீங்கள் கூறும் சில வார்த்தைகளை அவர்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடும். எனவே அவர்களுடன் வெளிப்படையாக பேசி பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவேண்டியது அவசியம். நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், இன்றைக்கு வேலை தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும். இல்லாவிட்டால் பிரச்சனை ஏற்பட்டு இடைவெளி அதிகரிக்கும். இன்றைக்கு நீங்கள் மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பளிக்க மாட்டீர்கள். நீங்கள் சொல்வதே வேதவாக்கு என்று நினைப்பீர்கள். இது உங்கள் மீது எதிர்மறை விமர்சனங்களுக்கு வித்திடும். உடல் நலனில் அதிக கவனம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 10:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்றைக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்கள் மனநலமும் உடல் நலமும் மேம்பட்டு இருக்கும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் எந்த தடையும் இருக்காது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரம், உங்கள் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இதுவரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடப்பதால், இருவருக்கும் இடையில் இருந்தவந்த இடைவெளி குறைந்து பரஸ்பர அன்பு அதிகரிக்கும். மன அழுத்தம் குறைய சற்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் அனுசரனையுடன் நடந்துகொள்வதால் நீங்கள் உற்சாகமுடன் வேலை செய்வீர்கள் இன்றைக்கு நிங்கள் உற்சாகத்துடன் செயல்படுவதால், உங்கள் முழு ஆற்றலும் வெளிப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : பிற்பகல் 3:30 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைக்கு இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக கழியும். வாழ்க்கைத் துணையுன் அன்பு உங்களை திக்குமுக்காட வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் காதலை அழகுற வெளிப்படுத்த உகந்த நாளாக அமையும். உங்கள் வாழ்த்துணை அளித்த வாக்குறுதி நிறைவேறும்.
உங்க்ள் பொருளாதார நிலை சீராக அமையும். இருந்தாலும் செலவுகளில் சிக்கனம் அவசியம். இருந்தாலும், செலவுகள் கட்டுக்கடங்காமல் போய், கையிருப்பு கரைந்து கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே முடியும் எந்தவிதமான கடினமாக வேலையையும் இடையூறு இல்லாமல் எளிதாக நிறைவேற்ற முடியும். இன்றை நாளின் பிற்பகுதியில் உங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும்.
மூதாதையர் சொத்து தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : அதிகாலை 5:10 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

தனுசு

தனுசு

குடும்ப வாழ்க்கையில் அதிக அக்கறை கொள்வது அவசியம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்.
முடிந்தால் உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு அன்புப் பரிசு ஒன்றை வாங்கிக் கொடுங்கள், அல்லது அவர்களை வெளியில் அழைத்துச்சென்று மகிழ்ச்சியோடு இருங்கள். இதனால் இணக்கம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இன்றைக்கு அமோகமாக இருக்கும். பணியாளர்கள் இன்றைக்கு சில முக்கியமான பணிகளை உடனுக்குடன் முடித்தால், பொருளாதாரா ரீதியாக சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் கடினமாக படித்து தேர்வு எழுதினால், அவர்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். எண்ணைப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.
இன்றைக்கு அதிக தூரம் பயணம் செய்வதால் களைப்பாக உணர்வீர்கள். உங்கள் தந்தையின் ஆலோசனையை கேட்டு நடப்பதால், சாதனை படைக்க வாய்ப்புண்டு. மொத்தத்தில் இந்த நாள் உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 2.00 முதல் இரவு 10:10 மணிவரை

மகரம்

மகரம்

இன்றைக்கு உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். சில சந்தர்ப்பங்களில் மிக கவனமாக நடந்துகொள்ளவேண்டியது அவசியம்.
வாழ்க்கைத் துணையுடனான உறவு சுமூகமாக அமையும். பணவிஷயத்தில் அதிக கவனம் தேவை. கூட்டுத் தொழில் செய்வதை கூடுமானவரை தவிர்க்கவும். உங்கள் கூட்டாளி உங்களை ஏமாற்றிவிடலாம். இதனால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். பண இழப்பு ஏற்படுவதுடன், பணம் ஈட்டுவதில் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில், நிம்மதியற்ற இறுக்கமான சூழல் நிலவும். உங்கள் சக பணியாளர்கள் வேடிக்கையாக சொன்ன வார்த்தைகள் உங்கள் மன உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.
இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : காலை 8.10 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்

கும்பம்

மாணவர்களாக இருப்பின், இன்றைக்கு உங்களின் உடல் நலம் சீர்கெடும். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகக்கூடும். மன அழுத்தத்தை குறைத்து அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் நல்ல முடிவுகள் எட்டப்படும். மூதாதையர் சொத்து தொடர்பாக சர்ச்சை இன்று தீர்க்கப்படலாம், பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும் உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் நீங்கள் செய்த முதலீடுகள் கொழுத்த லாபத்தை கொடுக்கும். தம்பதிகளுக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரித்து காணப்படும். வர்த்தகத்தில் உங்கள் கூட்டாளியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் உங்கள் லட்சியத்தை நிறைவேற்ற பொன்னான நாளாக அமையும்.
மேலும், சவால்களை எதிர்கொண்டு முறியடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 33
சாதகமான நேரம் : விடிகாலை 4.30 முதல் பிற்பகல் 2:45 மணிவரை

மீனம்

மீனம்

இன்றைக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணச்சிக்கல்கள் தீர்க்கப்படும் இழுபறியாக இருந்தவந்த கடன்தொகை வந்து சேரும்.
இன்றைக்கு நீங்கள் வெற்றிபெற விரும்பினால், எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்க வேண்டும். இன்று தொடங்கிய பணியை முடிக்க முடியவில்லை என்றால், நம்பிக்கையை இழக்க வேண்டாம். நாளை அந்த பணியை முடிக்க முடியும். இதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். இன்றைக்கு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து நடைப் பயிற்சி மேற்கொள்வது நலம் உண்டாக்கும். இதனால் நீங்கள் உற்சாகமுடன் செயல்பட வைக்கும். வேலை விஷயமாக முக்கியமான நபரை சந்திக்க நேரிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் தகவல் தொடர்பு திறமை உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
சுயநலவாதிகளிடம் இருந்து ஜாக்கிரதையாக விலகி இருப்பது உங்களுக்கு நன்மை விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9.05 முதல் இரவு 9:45 மணிவரை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+