டிசம்பர் மாத ராசி பலன் 2023: சனி தரும் சசயோகம்.. சுக்கிரன் தரும் பதவி யோகம் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: 2023ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். சூரியன் இந்த மாதத்தில் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளில் பயணம் செய்கின்றனர். நெருப்பு ராசியான தனுசு ராசியில் கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பொருத்து மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன யோகங்கள் செயல்படப்போகிறது என்று பார்க்கலாம். கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அற்புத பலன்களைத் தரப்போகிறது. டிசம்பர் மாதத்தில் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் குரு பகவான், ஒன்பதாம் வீட்டில் கேது பத்தாம் வீட்டில் சுக்கிரன் 11ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் என கிரகங்களின் பயணம் உள்ளது. இந்த மாதத்தில் உங்களுக்கு மாளவியா யோகம் தேடி வரப்போகிறது.

பதவி யோகம்: பத்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் பதவியோகம் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். மாளவியா யோகம் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். திடீர் வேலை மாற்றம் ஏற்படும். புரமோசனும் கிடைக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். தொழில் வியாபாரத்தில் நிறைய சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது.
கும்பம்: டிசம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பயணத்தை பார்த்தால் உங்கள் ராசியில் சனிபகவான், இரண்டாம் வீட்டில் ராகு, மூன்றாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் கேது பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. பஞ்சமாக புருஷ யோகத்தில் ருச்சிக யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு கைகூடி வரப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் உயர்வு அதிகரிக்கும். குடும்ப ராகு குதூகலத்தை ஏற்படுத்துவார்.
யோகங்கள்: டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு செல்வ வளம் அதிகரிக்கும். இந்த மாதத்தில் வேலை, தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும். கூடுதல் பொறுப்பும், புரமோசனும் கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். யோகங்கள் நிறைந்த மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது.
மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் நிறைந்த மாதமாக மீன ராசி அமைந்துள்ளது. இந்த மாதத்தில் மீன ராசியில் ராகு, ஏழாம் வீட்டில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி, இரண்டாம் வீட்டில் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் செவ்வாய், சூரியன் என கிரகங்களின் பயணம் உள்ளது. இந்த மாதத்தில் பிரம்மாண்ட வெற்றிகள் தேடி வரப்போகிறது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
ராஜயோகம்: பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். பணம் பலவழிகளில் இருந்து வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான பொறுப்புகள் தேடி வரப்போகிறது. ராஜயோகமாக மீன ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது. கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கப்போகிறது. தன வருமானம், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கக் கூடிய மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
