டிசம்பர் மாத ராசி பலன் 2023: சனியின் பார்வையில் குரு.. 2 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்
சென்னை: டிசம்பர் மாதத்தில் நீர் ராசியான விருச்சிகத்தில் கூட்டணி அமைத்துள்ள கிரகங்கள் நெருப்பு ராசியான தனுசு ராசிக்கு மாறப்போகின்றனர். சூரியன், புதன் இணைந்து யோகத்தை தரப்போகும் அதே நேரத்தில் சனியின் பார்வை தனித்த குருவிற்கு கிடைப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது.
டிசம்பர் மாத கிரகங்கள் பயணம்: 2023ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். இந்த மாதத்தில் சூரியன் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளில் பயணம் செய்வார். செவ்வாய் விருச்சிகம் ராசிகளில் பயணம் செய்ய புதன் இந்த மாதம் முழுவதும் தனுசு ராசியில் நேர்கதியிலும் வக்ர நிலையிலும் பயணம் செய்வார். குரு பகவான் மேஷ ராசியிலும் சனி கும்ப ராசியிலும், ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர்.

கிரகங்கள் பெயர்ச்சி: சுக்கிரன் டிசம்பர் மாதத்தில் துலாம் ராசியில் ஆட்சி பெற்ற நிலையிலும் பின்னர் டிசம்பர் இறுதியில் விருச்சிக ராசிக்கு சென்று செவ்வாயுடன் இணைவார் சுக்கிரன். டிசம்பர் மாதத்தில் செவ்வாய் பெயர்ச்சியும் நிகழ்கிறது. தனுசு ராசியில் சூரியன், புதனுடன் இணைந்து பயணம் செய்வார் செவ்வாய் பகவான். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் செவ்வாய் 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறார்.
சூரியன் எட்டு மற்றும் 9ஆம் வீட்டில் பயணம் செய்வார். தடை, தாமதங்கள் நீங்கும் வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்கும். ஆட்சி பெற்ற செவ்வாய் உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தருவார். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சனி குரு கூட்டணி: சனிபகவான் உங்களுக்கு லாபத்தை தரப்போகிறார். குரு பகவான் ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவான் மீது சனிபகவான் பார்வையும் விழுவதால் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிடைக்கப்போகிறது. சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்வதால் மாளவியா யோகம் கிடைக்கப்போகிறது. தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
காதல் கைகூடும்: கணவன் மனைவி இடையேயான உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். காதல் கைகூடும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களின் முயற்சிகள் பாசிட்டிவ் ஆக இருக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் திடீர் அதிர்ஷ்டமும் பண வருமானமும் வரக்கூடிய மாதமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.
ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் ராசிநாதன் சுக்கிரன் வலிமையாக இருக்கிறார். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆறாம் வீட்டிற்கு அதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார் சுக்கிரன்.
திருமண சுப காரியம்: சுப காரியங்கள் எல்லாம் இந்த மாதத்தின் முற்பகுதியில் மளமளவென நடைபெறும். யோகங்கள் தேடி வரப்போகிறது. புதன் இந்த மாதம் வக்ர மடைந்து மாத இறுதியில் வக்ர நிவர்த்தி அடைவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் பளு கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வந்துள்ளது. சூரியன், செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. திருமண சுப காரியங்கள் கைகூடி வரும்.
குருபகவான்: உங்கள் ராசிக்கு சுப கிரகமாக இல்லாவிட்டாலும் விரைய ஸ்தானத்தில் மறைந்துள்ள குரு பகவான் சுப விரையங்களை மட்டுமே தரப்போகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இருப்பதால் செய்யும் முதலீடுகள் லாபத்தை தரும். மாத பிற்பகுதியில் சூரியன், செவ்வாய் எட்டாம் வீட்டிற்கு செல்லப்போவதால் பயணங்களில் நிதானமும் கவனமும் தேவைப்படும். டிசம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய படிப்பினையை கற்றுத்தரப்போகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications