டிசம்பர் மாத ராசி பலன் 2020 - இந்த ராசிக்காரர்களுக்கும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்

டிசம்பர் மாதம் கார்த்திகை மாதம் 15 நாட்களும் மார்கழி மாதம் 15 நாட்களும் இணைந்த மாதம். சூரியன் விருச்சிக ராசியில் 15 நாட்களும் தனுசு ராசியில் 15 நாட்களும் சஞ்சரிப்பார். நவகிரகங்களின் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலனை கொடுக்கும் என்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். சோதனைகள் நிறைந்த 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் குளுமையான மாதம். மழைக்காலம் முடிவுக்கு வந்து குளிர்காலம் மெல்ல எட்டிப்பார்க்கும். கடுமழை காலமான கார்த்திகை முடிந்து இதமான குளிர் ஆரம்பிக்கும் மார்கழி மாதமும் இணையும் மாதம். இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட மிக முக்கியமான விஷேச தினங்கள் உள்ளன. இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், பார்வை, சேர்க்கையைப் பொருத்து தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சூரியன் செவ்வாயின் வீடான விருச்சிகத்திலும் குருவின் வீடான தனுசு ராசியிலும் பயணிப்பார். ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் சஞ்சரிக்க புதன் விருச்சிகம், தனுசுவிலும் சஞ்சரிப்பார். சுக்கிரன் இந்த மாத ஆரம்பத்தில் துலாம் ராசியிலும் விருச்சிகம் ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

சனியும் குருவும் இணைந்து மகரம் ராசியில் பயணிக்கின்றனர். செவ்வாய் மீனம் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்வார். சந்திரன் மாத தொடக்கத்தில் ரிஷபம் ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். வரிசையாக 12 ராசிகளிலும் பயணித்து இறுதியில் டிசம்பர் மாதத்தில் பயணம் செய்கிறார். கிரகங்களின் கூட்டணி பார்வையை பொறுத்து தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. யோகமான மாதமாக மாறப்போகிறது காரணம் கிரகங்கள் உங்கள் ராசிக்கு சாதகமான மாதமாகும். சுப காரியத் தடைகள் நீங்கும். மனதிலும் உடல் ரீதியாகவும் உற்சாகம் கூடும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் அற்புதமாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சூரியன் புதன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டிலும் உங்க ராசியிலும் பயணம் செய்கிறார். குருவின் பயணம் பார்வை பண வரவை அதிகரிக்கும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடிவடையும். குழந்தைகளுக்கு திருமணம் கை கூடி வரும். சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் வெளியூரில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். விரும்பிய இடத்தில் படிக்க இடம் கிடைக்கும். வேலையில் சுமை கூடும். மாணவர்களுக்கு மங்களகரமான மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது. விரும்பிய இடத்தில் படிக்க இடம் கிடைக்கும்.செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் பாதசனி காலம் என்பதால் கால்களில் சின்னச் சின்ன அடிபடும். பேச்சில் கவனமாக இருக்கவேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. உணவு விசயங்களில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிக்கல்களையும் சிரமங்களையும் சந்தித்து வந்த நீங்கள் இனி சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஜென்ம ராசியில் சனி, குரு இணைந்து சஞ்சரிக்கின்றனர். திருமணம், வேலை விசயமாக முடிவுகள் எடுக்கக் கூடிய காலம் வந்து விட்டது. செல்வ வளம் அதிகரிக்கும். விரும்பிய வாழ்க்கையை தேர்வு செய்வீர்கள். சுப பேச்சுவார்த்தைகள் நடைபெறும். லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் மாணவர்களுக்கு யோகமான கால கட்டம். பெண்களுக்கு நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஏழரை சனி காலமாக இருப்பதால் கவனமும் நிதானமும் தேவை. முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு உயரதிகாரிகளால் பிரச்சினைகள் வரலாம் பொறுமையை கைளாளுங்கள். விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய காலகட்டம். வண்டி வாகனங்களை வாங்க வேண்டிய கால கட்டம் இது. மாத பிற்பகுதியில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பிரச்சினைகள் வரலாம் கால பைரவரை வணங்கலாம். குல தெய்வ வழிபாடு அவசியம் செய்யவும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அற்புதமாக அமைந்துள்ளது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புது வீடு மாற வேண்டும் என்ற நினைப்பீர்கள். புதிய செலவுகளை தவிர்க்கவும் வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்தவும். வெளி ஆட்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார விரையங்களை கட்டுப்படுத்தவும். வேலை மாற வேண்டாம் இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. திருமண பேச்சுவார்த்தைகள் இழுபறியில் முடியும். ராகு நான்காம் வீட்டில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் வலி பிரச்சினைகள் வரலாம். சுப செலவுகள் வரும். மாணவர்களுக்கு கல்வி யோகம் கை கூடி வரும். வெளியூர் சென்று படிக்க யோகம் வரும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்கு டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதிக வருமானம் வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கை கூடி வரும். கொடுத்த பணம் திரும்ப வரும். லாபங்கள் அதிக கிடைக்கும் வரும். பதவி யோகம் வரும். அரசியல்வாதிகளுக்கு தைரியம் தன்னம்பிக்கை கூடும். சொத்து சேர்க்கை ஏற்படும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். விபரீத ராஜயோகம் கை கூடி வரும். மாணவர்களின் உயர்கல்வி யோகம் கை கூடி வந்துள்ளது. கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். திருமணம் சுப காரியங்கள் கை கூடி வரும். வீண் விரைய செலவுகள் முடிவுக்கு வரும். பதவி உயர்வு கிடைக்கும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். புகழ் வெளிச்சத்தில் நனைவீர்கள். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும். யோகங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக மீனம் ராசிக்கு அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+