அட.. சூப்பரா பொருந்துதே.. 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களா? நியூமராலஜிபடி, உங்க கேரக்டர் இதுதான்
சென்னை: நியூமராலஜி அடிப்படையில், ஒவ்வொரு எண்களின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு வகையான குணநலன்கள் இருக்கும். 2, 11, 20, 29, ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக ஆங்கில காலண்டர் முறையில் இந்த ஆதிக்க எண்கள் நிர்ணயிக்கப்படும். 2வது எண்ணில் பிறந்தவர்கள் கேரக்டர் எப்படிப்பட்டது என்பது குறித்து நியூமராலஜி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற விவரம் இதோ..
2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? (numerology number 2 personality) நியூமராலஜிப்படி, 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பின்வரும் குணநலன்களைக் கொண்டிருப்பார்கள்:

இணக்கமாக போவார்கள்: 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகவும் இணக்கமானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடன் நன்றாகப் பழகுவதிலும், ஒத்துழைப்பதில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் எந்த டீமிலும், அமைப்பிலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருந்து கொள்வார்கள். மற்றவர்களுடைய கருத்துகளையும், உணர்வுகளையும் மதிப்பார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் அதற்கு ஏற்ப, தங்களை தகவமைத்து மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
கருணை உள்ளம்: 2-ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகவும் கருணையுள்ளவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடைய துன்பங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவ முயற்சிப்பார்கள். துடிப்பார்கள். பதிலுக்கு உதவியை எதிர்பாராமல், தன்னலமற்ற முறையில் உதவிகளை செய்ய முன்வருவார்கள். மற்றவர்களுடைய வேதனைகளைப் பார்த்து, அவர்களின் துயரத்தில் பங்குகொள்வார்கள். இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சமாதான விரும்பிகள்: 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சமாதானத்தை விரும்புவார்கள். விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போக மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள். மற்றவர்களிடையேயும் ஒற்றுமையையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சிப்பார்கள். சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பார்கள். மற்றவர்களுடைய கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்க்க முயற்சிப்பார்கள். அதேநேரம், பொறுமையை ரொம்பவே சோதித்தால் இவர்களை போன்ற கோபக்காரர்களை, பதிலடி தருபவர்களை பார்க்க முடியாது. எதிரிகள் நடுங்கிவிடுவார்கள்.
கலைத்திறன்: 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். எழுத்து, இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் தங்கள் கலை மூலம் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அளிக்க விரும்புவார்கள். கலையின் மூலம் உலகத்தை சிறந்த இடமாக மாற்ற விரும்புவார்கள். தங்களது கலையால் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்புவார்கள்.
உணர்திறன்: 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மிகவும் உணர்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கவும் முயற்சிப்பார்கள். அவர்கள் மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்க விரும்புவார்கள். மற்றவர்களுடைய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எதையும் செய்ய மாட்டார்கள்.
கலை: 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இசை, நடனம், ஓவியம், எழுத்து, இலக்கியம் போன்ற கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.
சமூக சேவை: சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைவார்கள். ஏழைகள், ஆதரவற்றோர், நோயாளிகள் போன்றோரை கண்டால் மனம் உடனே இரங்கிவிடும். எப்படியாவது உதவுவார்கள். சமூகத்தில் ஒற்றுமையையும், அமைதியையும் ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.
தொடர்பு: தொடர்புத் துறைகளில் சிறந்து விளங்குவார்கள். விளம்பரம், பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற துறைகளில் வெற்றி பெறுவார்கள். தங்கள் திறமையான பேச்சாலும், எழுத்தாலும் மற்றவர்களை ஈர்க்க முடியும்.

பிரபலங்கள்: அமிதாப் பச்சன், அக்டோபர் 2ம் தேதி பிறந்த பிரபலமாகும். நடிகர் ஷாருக்கான் நவம்பர் 2ம் தேதி பிறந்தார். ராஜேஷ் கண்ணா பிறந்தது டிசம்பர் 29ம் தேதி. எழுத்தாளர் தாமஸ் ஹார்டி, இசையமைப்பாளர் க்ளக், அமெரிக்க அதிபர்களான ஆடம்ஸ், ஹார்டிங், பிரான்ஸ் அதிபராக இருந்த பாயின்கேர் ஆகியோரும் 2ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகும்.
அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் நகைகள்: பச்சை இவர்களுக்கு அதிருஷ்டமான நிறம். அனைத்து வகையான பச்சையும் கை கொடுக்கும். கிரீம் மற்றும் வெள்ளை நிறங்கள் வரை அணிய வேண்டும், ஆனால் முடிந்தவரை, அடர் வண்ணங்களை அதிலும் குறிப்பாக கருப்பு, ஊதா மற்றும் அடர் சிவப்பு நிறங்களை தவிர்க்க வேண்டும். வெளிர் பச்சை கற்கள் இவர்களுக்கு ராசியானவை. jade எனப்படும் கற்களை இவர்கள் உடலை ஒட்டும் வண்ணம் அணிந்துகொள்வது நன்மை பயக்கும்.
சவால்கள்: இவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.மற்றவர்களின் கருத்துக்களை அதிகம் மதிப்பார்கள். தங்கள் சொந்த திறமைகளை நம்பாமல், மற்றவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார்கள். இரக்கம் இருக்கலாம், ஆனால் இவர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான இரக்க உணர்வை பிறர் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு திட்டத்தோடு காய் நகர்த்தினால் வெற்றி நிச்சயம்..
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications