• search

மகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வம் பெருக இதை செய்யுங்க

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை: காலை முதல் மாலை வரை உழைப்பது பணத்திற்காகத்தான். பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பதுதான் பலரது எண்ணம். என்னதான் உழைத்தும் வீட்டில் பணம் தங்கவில்லையே என்பது பலரது கவலை. செல்வத்தின் அதிபதி மகாலட்சுமியின் கடைக்கண் நம்மீது விழாதா? என்று பலரும் ஏங்குகின்றனர். மகாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் பெருக என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

  வீட்டில் தினமும் மாலையில் விளக்கேற்றி கனகதாராஸ்தோத்திரம் படித்தால் பொன்மழை பொழியும் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

  Doing these things in evening can invite the wrath of Goddess Lakshmi

  இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும். ஏழைப்பெண் ஒருத்தி இட்ட உலர்ந்த நெல்லிக்கனியை அவளுடைய பக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார். அவள் வீட்டில் பொன்மழை பொழிந்தது. காஞ்சியில் ஒரு சமயம் காமாட்சி தேவி பொன்மழை பொழிந்ததாக மூக சங்கரர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

  வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தண்ணீர் குடிக்கத் தரவும் அவர் கிளம்பும் போது பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

  வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும். அபிஜித் நட்சத்திரத்தில் அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

  வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

  முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய பணம் அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க வறுமை விலகி பணம் கிடைக்கும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் வறுமை விலகும்.

  தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

  குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

  தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.

  ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும். வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

  கருநெல்லி மரம் வளர்த்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். வேம்பு, வில்வம் வளர்த்தால் செல்வம் சேரும். அதே போல குரு மூலிகை, லட்சுமி மூலிகை என்றெல்லாம் போற்றப்படும் கல்லால இலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்பது ஞான நூல்கள் தரும் அறிவுரை. இதனால் குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும். வறுமை, கடன் தொல்லை யாவும் நீங்கும்

  தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Wealth cannot be equated to the feeling of happiness. But, it allows people to feel important, valued, respected and influential. And most importantly, lets a person get whatever they desire in life.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more