வசந்த பஞ்சமி, ரத சப்தமி.. மாசி மகம் பிப்ரவரி மாத திருவிழாக்கள் - சந்திராஷ்டம தினங்கள்
பிப்ரவரி மாதத்தில் மாசி மகம் உள்ளிட்ட பல்வேறு விஷேசங்கள் வருகின்றன. எந்தெந்த நாளில் என்னென்ன திருவிழாக்கள் வருகிறது என்று பார்க்கலாம்
சென்னை: பிப்ரவரி மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மாசி மகம், உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வருகின்றன. எந்தெந்த நாட்களில் என்னென்ன திருவிழாக்கள் வருகிறது என்று பார்க்கலாம்.
பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகரம், கும்ப ராசிகளில் பயணம் செய்கிறார். பிப்ரவரி மாதத்தில் சியாமளா நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று நான்கு நவராத்திரிகளில் சாரதா நவராத்திரியே நாம் தமிழகத்தில் புரட்டாசி மாதம் கொண்டாடும் நவராத்திரி. இவற்றுள் சியாமளா நவராத்திரி தை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி.

பிப்ரவரி 02ஆம் தேதி புதன்கிழமை சியாமளா நவராத்திரி கொண்டாடப்படுகிறது
பிப்ரவரி 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாத சதுர்த்தி வரகுந்த சதுர்த்தி
பிப்ரவரி 07 திங்கட்கிழமை ரத சப்தமி சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது
பிப்ரவரி 09 புதன்கிழமை புதாஷ்டமி கிருத்திகை விரதம்
பிப்ரவரி 12 சனிக்கிழமை பீஷ்ம ஏகாதசி ஜெய ஏகாதசி
பிப்ரவரி 13 ஞாயிற்றுக்கிழமை மாசி மாதப் பிறப்பு விஷ்ணுபதி புண்ணியகாலம்
பிப்ரவரி 14 திங்கட்கிழமை சோமப் பிரதோஷம்
பிப்ரவரி 15 செவ்வாய்கிழமை சதுர்த்தசி ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்
பிப்ரவரி 16 புதன்கிழமை பவுர்ணமி பூஜை லலிதா ஜெயந்தி, திரிபுர சுந்தரி ஜெயந்தி
பிப்ரவரி 17 வியாழக்கிழமை மாசி மகம் திருவிழா
பிப்ரவரி 24 வியாழக்கிழமை மகேஷ்வராஷ்டமி
பிப்ரவரி 26 சனிக்கிழமை ஸ்மார்த்த ஏகாதசி
பிப்ரவரி 27 ஞாயிற்றுக்கிழமை தில துவாதசி சோமவார பிரதோஷம்
பிப்ரவரி மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள்
மேஷம்: பிப்ரவரி 23 காலை 08.56 மணி முதல் பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 12.07 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது.
ரிஷபம்: பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 12.07 மணி முதல் பிப்ரவரி 27 இரவு 02.22 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது
மிதுனம்: பிப்ரவரி 02ஆம் தேதி காலை 06.45 மணி வரை சந்திராஷ்டம் உள்ளது. பிப்ரவரி 27 இரவு 02.22 மணிக்கு மேல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டம் உள்ளது.
கடகம்: பிப்ரவரி 02ஆம் தேதி காலை 06.45 மணிக்கு மேல் பிப்ரவரி 04ஆம் தேதி காலை 10.02 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. கவனம் தேவை
சிம்மம்: பிப்ரவரி 04ஆம் தேதி காலை 10.02 மணிக்கு மேல் பிப்ரவரி 06ஆம் தேதி மாலை 05.09 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது.
கன்னி: பிப்ரவரி 06ஆம் தேதி மாலை 05.09 மணி முதல் பிப்ரவரி 09ஆம் தேதி அதிகாலை 04.09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
துலாம்: பிப்ரவரி 09அதிகாலை 04.09 மணி முதல் பிப்ரவரி 11 மாலை 05.05 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.
விருச்சிகம்: பிப்ரவரி 11 மாலை 05.05 மணி முதல் பிப்ரவரி 13 அதிகாலை 05.19 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.
தனுசு: பிப்ரவரி 13 அதிகாலை 05.19 மணி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 03.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.
மகரம்: பிப்ரவரி 16 மாலை 03.14 மணி முதல் பிப்ரவரி 18 இரவு 10.46 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது.
கும்பம்: பிப்ரவரி 18 இரவு 10.46 மணி முதல் பிப்ரவரி 21 அதிகாலை 04.31 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.
மீனம் :பிப்ரவரி 21 அதிகாலை 04.31 மணி முதல் பிப்ரவரி 23 காலை 08.56 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது கவனமும் நிதானமும் தேவை.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications