பிப்ரவரி மாத ராசி பலன் 2024: சூரியன் + சனி கூட்டணியால் ராஜயோகம்.. யார் வீட்டில் அதிர்ஷ்ட மழை
சென்னை: பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகரம் ராசியிலும், கும்ப ராசியிலும் சஞ்சரிப்பார். இந்த மாதத்தில் செவ்வாய் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி என முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நிகழ உள்ளது. இந்த மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி, மாசி மகம் என பல முக்கிய விஷேச தினங்கள் உள்ளன. இந்த மாதத்தில் யாருக்கு பணவரவு அதிகரிக்கும், செலவு வரும். திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கிரகங்களின் பெயர்ச்சி: பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் கூட்டணி பிரிகிறது. புது கூட்டணி உருவாகிறது. மகரம் ராசியில் உள்ள சூரியன் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி கும்ப ராசிக்கு மாறுகிறார். மகரம் ராசியில் உள்ள புதன் கும்ப ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் உள்ள சுக்கிரன் மகரம் ராசிக்கு மாறுகிறார்.

மேஷம்: பிப்ரவரி மாதம் அற்புதமான மாதம். சூரியன் புதன் சேர்க்கைப் பெற்று 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பு. செவ்வாய் உச்சம் பெற்று 10ஆம் வீட்டில் பயணம் செய்யும் அதே நேரத்தில் மாத பிற்பாதியில் சூரியன் 11ஆம் வீட்டில் சனியுடன் கூட்டணி சேர்ந்து சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபகரமான பலன்கள் உண்டாகும்.
அதிபதி செவ்வாய் பிப்ரவரி மாதம் 10ஆம் வீட்டில் உச்சம் பெறப்போகிறார். ருச்சிக யோகத்தால் அதிகாரப்பதவிகள் தேடி வரும். அரசு பதவிகள் தேடி வரும். உயர் பதவிகள் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். காவல்துறையினருக்கு வெற்றிகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். லாப ஸ்தானத்தில் புதன், சூரியன், சனி கூட்டணி சேருகிறது. மிகப்பெரிய அளவில் உயர்வையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. திருமணம் சுப காரியம் கை கூடி வரும்.
பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் எற்படும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
சுக்கிரன் 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி புது உற்சாகத்துடனும் தெம்புடனும் செயல்பட்டு முன்னேற்றம் அடைவார்கள்.
பிப்ரவரி 13ஆம் தேதிக்குப் பிறகு பண வருமானம் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் நேரம் வெற்றிகளைத் தேடித்தரும். மாணவர்களுக்கு வெளிநாடு யோகம் உயர்கல்வி யோகத்தை தரப்போகிறது. லாப வீட்டில் சூரியன் சனி புதன் 10ல் செவ்வாய் சுக்கிரன் கூட்டணியால் பதவி உயர்வுகள் தேடி வரும். அதிகார பதவிக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல யோகம். பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கான அதிகார பதவி நாற்காலி தேடி வரும்.
காதலில் இருப்பவர்களுக்கு திருமணம் யோகம் தேடி வரும். பூமி யோகம் உண்டு. வீடு நிலம் வாங்கலாம். வண்டி வாகன யோகம் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் அருளினால் வெற்றிகள் தேடி வரும். கந்த சஷ்டிகவசம், கந்த குரு கவசம் படிக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications