பிப்ரவரி மாத ராசி பலன் 2024: வீடு தேடி வரும் செல்வம்.. குரு பார்வையால் குடும்பத்தில் குதூகலம்
சென்னை: பிப்ரவரி மாதத்தில் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் புது கூட்டணி உருவாகிறது. சூரியன் செவ்வாய் கூட்டணி மாத பிற்பகுதியில் பிரிகிறது. 13ஆம் தேதிக்கு மேல் சனியோடு கும்ப ராசியில் பயணம் செய்வார் சூரியன். நவ கிரகங்களின் புது கூட்டணியால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக்கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் பயணம் செய்கிறார். களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவது எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றியை தரும் அமைப்பாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குரு பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி வரும்.

கணவன் மனைவிடையே ஒற்றுமை அதிகரிக்கும். காதல் மலரும் கல்யாணம் கைகூடி வரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் குறையும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தேடி வரும் வியாபாரிகள் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். சூரியன் 4ஆம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்வதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும் எதிலும் நிதானமாக செயல்படவும். வாகனங்களில் வேகம் வேண்டாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும்.
விருச்சிகம்: உங்கள் ராசி அதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்து இம்மாதம் 13ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது.
வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் சிக்கனமாக நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வீண் விரயங்களை தவிர்க்கலாம். உஷ்ண கிரகங்கள் 2ஆம் வீட்டில் கூட்டணி அமைத்திருப்பதால் சின்னச் சின்ன சண்டைகள் வரும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதன் மூலம் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். மாத கோளான சூரியன் இம்மாதம் 13ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் சனியுடன் இணைந்து பயணம் செய்ய இருப்பதால் மாத பிற்பாதியில் எதிர்பாராத பண வருமானம் வரும். உங்களது சிக்கல்கள் ஓரளவிற்கு குறையும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த வேண்டாம். வியாபாரிகள் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. லையில் இருப்பவர்களுக்கும் பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications