Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு அதிசார பெயர்ச்சி 2020 - சனியோடு சேரும் குரு - துலாம் முதல் மீனம் வரை பலன்கள்

தற்போது ஒரு நிகழ்வாக குரு பகவான் அதிசாரமாக, தன்னுடைய மூலத்திரிகோண வீடான தனுசு ராசியில் இருந்து தன்னுடைய நீச வீடான மகர ராசிக்கு பயணிக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30 -3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த அதிசார குரு பெயர்ச்சியால் துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன யோகங்கள் கிடைக்கும் என்று பிரபல ஜோதிடர் N.C.கிருஷ்ணன் நாயுடு எழுதியுள்ளார். இந்த அதிசார குரு பெயர்ச்சி பலன்களை சுய ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து இறுதி பலன்களை முடிவு செய்வது நல்லது.

கிரக மண்டலத்தில் இயற்கை சுபரான ஒரு பெரிய கிரகம் குரு பகவானாவார். ஆகையால் அவருடைய பெயர்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தற்போது ஒரு நிகழ்வாக குரு பகவான் அதிசாரமாக, தன்னுடைய மூலத்திரிகோண வீடான தனுசு ராசியில் இருந்து தன்னுடைய நீச வீடான மகர ராசிக்கு பயணிக்கிறார். சரி இப்போது இந்த அதிசார பெயர்ச்சியால் என்னென்ன விளைவுகள் நிகழும் என்று பார்க்கலாம்.

இயற்கை பாக்கிய ஸ்தானமான தனுசுவில் ஆட்சி பெற்று சஞ்சரித்த குருபகவான், கேதுவை தன்னுடைய வீட்டில் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார். அதே போல தன்னுடைய ஏழாம் பார்வையால் மிதுனத்தில் இருக்கும் ராகுவையும் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால், இனிமேல் இந்த அதிசார பெயர்ச்சியால், குருபகவான் தன்னுடைய நீச வீட்டில், அதுவும் நீச பாகையை நோக்கி சஞ்சரிக்க போகிறார். சரி தற்போது இதன் விளைவாக, சர்ப்ப கிரகங்கள் ஆகிய ராகு,கேதுக்கள் சுப ஒளியிலிருந்து விடுபட்டு தன்னிச்சையாக செயல்படும் ஒரு ஆற்றலை பெறுகின்றது.

துலாம்

துலாம்

துலா ராசி அன்பர்களே... உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுகஸ்தானத்தில் குரு சற்று பலவீனம் பெற்று சனிபகவான் சுபத்துவம் அடைகிறார். இதன் மூலம் உங்களுக்கு வீட்டில் சற்று நிம்மதி கிடைக்கும் எதிரிகள் தொல்லைகள் இருந்து விடுபடுவீர்கள். வேலை பளுவில் இருந்து சற்று ஓய்வு கிடைத்து,நிம்மதி பெறுவீர்கள் மேலும் சனிபகவான் சுபத்துவம் ஆகி பத்தாம் பார்வையாக, உங்களுடைய லக்னத்தை பார்வை இடுவதால்,உங்களுக்கு முன்பு இருந்த சோம்பல் நிலை நீங்கி சற்று சுறுசுறுப்பு அடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே... உங்களுடைய முயற்சி வீரிய ஸ்தானத்தில் குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெற்று இருப்பதால் உங்களுடைய முயற்சிகள் கை கொடுக்கும் காலமிது. தாமதமான புத்திர பாக்கியங்கள் தம்பதிகளுக்கு கிடைக்கப்பெறும். மேலும் தந்தையாரின் உடல் நலத்தை கவனம் செலுத்துவீர்கள். அவர்கள் உடல் நலமும் நன்றாக தேரும் காலமிது. மேலும் உங்களுக்கு இருந்த அந்த தூக்கமின்மை பிரச்சனைகள் தற்போது சரியாகும்.

தனுசு

தனுசு

தனுசு ராசி நண்பர்களே...உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில், வாக்கு ஸ்தானத்தில் குரு பலவீனமாகி, சனி சுபத்துவம் பெறுவதால் இதுவரை இருந்த வாக்குவாத பிரச்சனைகள், அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட மனக் குழப்பங்கள் சற்று குறையும். உங்களுடைய உடல் நலமும், உங்களுடைய தாயின் உடல்நலமும் முன்னேற்றம் அடையும். இதுவரை ஏதும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த பிரச்சினைகள் விலகும் மேலும் லாபம் சார்ந்த விஷயங்களிலும் நன்மை உண்டு.

மகரம்

மகரம்

மகர ராசி அன்பர்களே...உங்களுடைய ராசியிலேயே குரு பகவான் பலவீனமாகி சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் உங்களுடைய முயற்சி சற்று அதிகமாக இருக்கும். இந்த காலகட்டங்களில், இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட சில சலசலப்பு விஷயங்கள் சற்று குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். மேலும் தொழில் சார்ந்த பிரச்சனைகளும், அதில் இருந்த மந்த நிலையும் தற்போது குறைந்து, அதில் மறுமலர்ச்சி காணப்படும்..

கும்பம்

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே உங்களுடைய ராசிக்கு 12-ம் இடத்தில் விரய ஸ்தானத்தில், குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் இதுவரை உங்களுக்கு இருந்த அலைச்சல், மனக்கஷ்டங்கள்,தொடர் மற்றும் தொலைதூரப் பயணங்கள் குறைந்து, அவை சுப விரயங்களாகவும், ஒரு பயனுள்ள பிரயாணங்கள் ஆகவும் மாறும் காலம் இது. கணவன் மனைவி இடையே தாம்பத்தியம் சார்ந்த விஷயங்களில் சற்று நெருக்கம் ஏற்படும். இதுவரை இருந்த குடும்ப பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் சற்று விலகும்.ஆக இவர்களாகவே ஆன்மிக பயணங்கள் மேற்கொண்டு அதை சுப விரயமாக மாற்றினால் இவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

மீனம்

மீனம்


மீன ராசி அன்பர்களே... உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் பலவீனமாகி, சனிபகவான் சுபத்துவம் பெறுவதால் நிறைந்த லாபங்கள் உண்டு. சனிபகவான், உங்களுடைய ராசியை பார்ப்பதால் அதற்கு முன்பு இருந்த அந்த மந்த நிலை குறைந்து, இப்போது சுறுசுறுப்பு அதிகரிக்கும். மேலும் உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சனி பார்ப்பதால், உங்களுக்கு நிறைந்த அதிர்ஷ்டமும் உண்டு அதுமட்டுமின்றி உங்களுக்கு உடல்நல குறைபாடுகள் சற்று குறைந்து காணப்படும் காலம் இது. சனி சற்று சுபராகி உங்களுடைய புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் அதற்கு முயற்சிப்பவர்களுக்கும் பலன்கள் கிடைக்கும்.

NC Krishnan Naidu
73391 40502
https://www.facebook.com/KrishnanNaidu.Jyothishi

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+