Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2019-20: அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திரங்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்

குரு பகவான் விருச்சிகத்தில் இருந்து குரு பகவான் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்துள்ளார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசியை நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இன்றைய தினம் அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

குருபகவான் இப்போது விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி செவ்வாய்கிழமை அதிகாலை முதல் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மூலம் நட்சத்திரத்தில், அக்டோபர் 29 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார். பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ஆம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.

அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறார். மீண்டும் குருபகவான்
மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். மீண்டும் தனுசு ராசிக்க வரும் குரு பகவான் டிசம்பர் 26ஆம் தேதி மகரம் ராசிக்கு நேரடியாக பெயர்ச்சி அடைகிறார். இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திரகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

வருமானம் கூடும்

வருமானம் கூடும்

ஹஸ்தம் சந்திரன் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகள், பேசி காரியம் சாதிப்பார்கள். குரு பகவான் உங்க நட்சத்திரத்திற்கு 7ஆம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கடந்த சில வருஷங்களாகவே நீங்க பல இடர்பாடுகளை சந்தித்து வந்தீர்கள். நாலாம் வீட்ல சனி கேது சேர்ந்து இருந்து பல சிக்கல்களை ஏற்படுத்தி வந்தது. இனி குரு பெயர்ச்சியால் பாதிப்புகள் குறையும். இனி வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு உண்டானது உங்களை வந்தடையும். சொந்த வீட்டிற்கு குரு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.

குடும்பத்தில் சந்தோஷம்

குடும்பத்தில் சந்தோஷம்

பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். பேச்சில் கவனமாக இருங்க இல்லாட்டி வம்பு வழக்குகள் தேடி வரும். வேலையில் மாற்றம் வரும். திடீத் மருத்துவ செலவுகள் வரலாம். எண்ணிய எண்ணங்கள் தடைகள் இன்றி நிறைவேறும். சனியால் பிரச்சினை ஏற்பட்டாலும் குருவினால் நிவர்த்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. கவலைகள் காணமல் போகும். சந்தோஷம் அதிகரிக்கும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். தன்னம்பிக்கை கூடும். மாணவர்களுக்கு உயர்வு ஏற்படும் கல்வியில் வெற்றி கிடைக்கும். எல்லாம் வல்ல முருகனை வணங்க தடைகள் நீங்கி நன்மைகள் நடக்கும்.

சிக்கல்கள் தீரும்

சிக்கல்கள் தீரும்

சித்திரை நட்சத்திர காரர்களே செவ்வாயின் நட்சத்திர வரிசையில் வருகிறது. போர்க்குணம் கொண்டவர்கள் நீங்கள் கோபக்காரர் நீங்கள். குரு உங்களுக்கு நிறைய நல்லதை கொடுப்பார். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்னைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். சங்கடமும் சந்தோஷமும் மாறி மாறி வந்தது. இனி நினைத்தது எல்லாமே நல்லதாகவே நடக்கும். அர்த்தாஷ்டம சனியால் தடைபட்ட காரியங்கள் இனி மளமளவென முடியும். தொழில் வியாபாராத்தில் இனி லாபம் தேதி வரும். ஒருபக்கம் சனி கேது, இன்னொரு பக்கம் ராகு என வச்சி செய்த கிரகங்கள் இனி அள்ளி கொடுக்கப்போறாங்க. மனதில் மன உளைச்சல் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

நல்லது தரும் குருபகவான்

நல்லது தரும் குருபகவான்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். குரு பார்வையால் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷம் திரும்ப வரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் நீங்கும். அவமானங்கள் தீரும் காலம் வருகிறது. கண்டங்கள் தீரும் காலம் தேடி வருது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

மகிழ்ச்சி அதிகரிக்கும்

மகிழ்ச்சி அதிகரிக்கும்

ராகுவின் நட்சத்திர சாரமான சுவாதியில் பிறந்த நீங்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். சுக்கிரன் ஆதிக்கம் கொண்டவர் என்பதால் வசதியான வாழ்க்கையை விரும்புவீர்கள். இந்த குரு பெயர்ச்சியால் உங்க ராசிக்கு நிறைய உதவிகள் கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி நிதானமாக பேசுங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க. கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிடாதீங்க உங்க உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கவனம் தேவை. திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். குருவினால் பெண்களுக்கு மகிழ்ச்சியான விசயங்கள் நடைபெறலாம்.

புத்திரபாக்கியம் கிடைக்கும்

புத்திரபாக்கியம் கிடைக்கும்

அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து போங்க. குரு உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு போவதால் உங்களுக்கு சின்னச் சின்ன மனக்கலக்கம் வரலாம். தவறான முடிவுகள் எதையும் எடுத்து விட்டு அவதிப்படாதீங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. குரு பார்வையால் உங்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும். புத்திர பாக்கியம் தேடி வரும். காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு கல்யாணம் பெற்றோர் உதவியுடன் கை கூடி வரும். கடல் கடந்த பயணங்கள் வெற்றியை தேடித்தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+