குரு பெயர்ச்சி 2019-20: மிருகஷீடம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்
Recommended Video
சென்னை: குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஐந்தாவதாக வருவது மிருகஷீரிடம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் இரண்டு பாதங்களும் ரிஷபம் ராசியில் உள்ளன. இரண்டு பாதங்கள் மிதுனம் ராசியில் உள்ளன. மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
குருபகவான் இப்போது விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறார். அக்டோபர் 28ஆம் தேதி விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மூலம் நட்சத்திரத்தில், அக்டோபர் 28 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறார். மீண்டும் குருபகவான்
மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் மிருகஷீரிடம் நட்சத்திரகாரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குரு பார்வை
குபகவானின் பார்வை மேஷம் ராசியில் உள்ள அசுவினி, பரணி, கிருத்திகை, மிதுனம் ராசியில் உள்ள மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சிம்மம் ராசியில் உள்ள மகம், பூரம் ஆயில்யம் நட்சத்திரங்களின் மீது விழுகிறது. குரு பார்வை உங்க நட்சத்திரத்தின் மீது விழுவதால் நன்மையே நடக்கும். இதுநாள்வரை பல இன்னல்களுக்கு ஆளானவர்கள் இனி சந்தோஷம் பொங்குதே என்று பாடுவீர்கள்.

யோகம் வரும் காலம்
மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கான அதிபதி செவ்வாய். குரு தனுசு வீட்டிற்கு போகும் நேரத்தில் சனி கேது சேர்க்கை சில மாதங்கள் இருக்கிறது. ஜாதகத்தில் யோக திசை நடந்தால் நன்மையே நடக்கும். வேலை வாய்ப்புகள் நல்லதாகவே நடக்கும். சனி தடைகளை கொடுத்தாலும் குரு பார்வை நன்மையை செய்ய வைக்கும். குருவினால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். முடியாத விசயங்களை முடிக்க வைப்பார்

துணிச்சல் கூடும்
ஆடை, ஆபரணம் வாங்கும் வாய்ப்பு, உத்தியோக உயர்வு, சிலருக்கு வீடு, வண்டி, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு உங்களின் தகுதிக்கு மீறிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த குரு பெயர்ச்சி குறைகளை நிவர்த்தி செய்யும் எதிர்கால பயம் விலகும். எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். இனிமேல் எந்த தவறையும் செய்ய மாட்டீர்கள், குரு உங்க நட்சத்திரம் சஞ்சரிக்கும் ராசியை பார்ப்பது நல்லது.

லாபம் அதிகரிக்கும்
கவலைகள் தீரும் காலம் வந்து விட்டது. இதுநாள்வரை ஏற்பட்டு வந்த தொல்லைகள் நீங்கும். குரு லாப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார வருமானம் அதிகம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், விவசாயத்தொழில் லாபம் கொடுக்கும். மூத்த சகோதரர்களால் நல்லதே நடக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். உத்யோகத்தில் இருந்தவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.

திருமணம் கைகூடும்
உங்க நட்சத்திரம் அடங்கிய ராசியை பார்ப்பதால் குரு பெயர்ச்சிக்குப் பிறகு தொழில் தொடங்குவீர்கள். திருமணம் செய்யலாம். குரு பார்வை வந்து விட்டது. புத்திரபாக்கியம் கிடைக்கும். குரு பலன் உங்களுக்கு நல்லதை நடத்தி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு நல்லதே நடக்கும். அண்ணன் தம்பி ஆதரவு கிடைக்கும். உங்க முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீங்க எடுக்கிற முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

வாழ்க்கை புரியும்
கோச்சாரத்தில் குருவை விட சனி பலவான், சனியை விட ராகு கேது பலவான், கோச்சார கிரகங்களை விட தசாபுத்திகள் பலமானவை. ராகுதிசை நடந்தால் இளையவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக செல்லவும். குரு அருள் இருப்பதால் குறைவில்லை.
குரு திசை நடந்தால் குறைவில்லை, நீண்ட நாள் ஆசைகள் லட்சியங்கள் நிறைவேறும். மணமேடை ஏறலாம். நல்ல வேலை கிடைக்கும். சனி திசை நடந்தால் உங்களுக்கு சின்ன சந்தோசங்களை தரும். புதன் திசை யோகத்தை தரும். கேது திசை நடப்பவர்களுக்கு வாழ்க்கையை புரியவைப்பார். மொத்தத்தில் இந்த குரு பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications