Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2019: குரு உடன் சேரும் கேது... பார்வையால் பலமடையும் ராகு - பலன்கள்

சனியோது சேர்க்கை பெற்ற கேதுவும் சனியோட பார்வையில் இருந்த ராகுவும் இனி குரு சேர்க்கை குரு பார்வை பெறப்போகின்றன. இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். குரு கூட்டணியும் அப்படித்தான். குரு பகவான் விருச்சிக ராசியில் இதுநாள்வரை தனித்து இருந்தார். நாளைய தினம் திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த குரு சனியோடும் கேது உடனும் தனுசு ராசியில் இணைகிறார். அதே நேரம் குரு மிதுனம் ராசியில் தனித்திருக்கும் ராகுவை பார்வையிடுகிறார். இந்த சேர்க்கை, பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் அபரிமிதமாக கிடைக்கும். என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

ராகு கேது பிற கிரகங்களை சார்ந்தே பலன் தரும் இந்த முறை குருவை சார்ந்து இனி மேல் ராகு கேது கிரகங்களினால் பலன் கிடைக்கும். இனிமேல் குரு பகவான் ராகு கேதுவை உற்சாகப்படுத்துவார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் கொடுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். இனிதான் ராகுவோட உண்மையான பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ம் பாவம், அந்த 9ம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். செய்யும் முயற்சிகள் பலிக்கும் சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

குடும்ப பிரச்சினை தீரும் வெளி இடங்கள் மூலம் நன்மை கிடைக்கும், அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூல ஆதாயம் உண்டு. அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனி சுபமாக முடியும் தொட்டது துலங்கும். பொறாமை எதிரிகள் தொல்லை நீங்கும்.

மிதுனம்

மிதுனம்

நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும்.ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும்.தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதார நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். ராகு 7ஆம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். உத்யோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம்.உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். மன அழுத்தம் நீங்கும். பிற மனிதர்கள் உதவுவார்கள்.

கடகம்

கடகம்

வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார்.வர்த்தக தொடர்பு ஏற்படும்.சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும்.வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் இனி இனிப்பாக மாறும். தேவையற்ற செலவுகள் மறையும் சுப விரையங்களாக மாறும். புதிய வேலை வாய்ப்பு அமையும்.

சிம்மம்

சிம்மம்

திடீர் பண வரவு கிடைக்கும். ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் மேல் கல்விகளுக்கு சுப கடன்கள் வாங்க நேரிடும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எதிர் பார்த்த காரியத்திற்கு தடை இருக்காது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை விலகி நிம்மதி பிறக்கும்.

கன்னி

கன்னி

குடும்பத்தில் கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஓத்திகைகக்கு வீடு மாறலாம். காலிமனைகள் வாங்கும் வசதி வரும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம். புதிய வேலை, தொழில் அமையும் சுக குறைவு இருக்காது

துலாம்

துலாம்

குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.நிர்வாக பொருப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும். கெட்ட பெயர் விலகுகிறது முயற்சிக்கு பலன் உண்டு

விருச்சிகம்

விருச்சிகம்

எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். வருமானம் சேமிப்பு உயரும். சிலருக்கு வீட்டுக்கு மேல் மாடி வீடு கட்டும் யோகம் வரும்.
அவமானம் இல்லை குடும்ப நல்ல காரியம் நடக்கும்

தனுசு

தனுசு

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் முழ்கி இருப்பவர்களுக்கு நிதி பிரச்சினை தீரும். கடன் பிரச்சினை தீரலாம். இழந்த தன்னம்பிக்கை மறுபடியும் வரும் புதியவர்கள் உதவியால் நிதி நெருக்கடிகள் தீரும்.

மகரம்

மகரம்

பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும். நெருக்கடி நிலை தீரும். பகை விலகும். தாறுமாறான செலவுகள் நீங்கி சுப செலவுகள் அதிகரிக்கும். வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

கும்பம்

கும்பம்

லாபத்தில் குரு கேது உடன் அமர்கிறார். ஐந்தாம் வீட்டில் உள்ள ராகுவை குரு பார்வையிடுகிறார். இதுநாள் வரை போதுமான வருமானம் வந்தாலும் கடனுக்கு வட்டியை கட்டி விட்டு நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது 11ல் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை தடைபட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும்.
சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும். திடீர் நல்ல விஷயங்கள் இனி மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் இந்த ஆண்டுகள் நடக்கும்.

மீனம்

மீனம்

பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும்.கடல் தாண்டி திரவியம் தேடும் வாய்ப்பு வரும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். வண்டி வாகன யோகம் அமையும். வீடு நிலம் வாங்கலாம். நாலாம் வீடு தாய் வீடு பிரச்சினை தீரும். செய்யும் வேலையில் இனி பிரச்சினை வராது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+